திருந்தவா போகுது?



பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லுவார்கள், மனைவி கணவனுக்கு idea சொல்லிக் கொடுப்பார்கள். கணவன் மனைவியை திருத்த முயற்சியை மேற்கொள்ளுவான். ஆசிரியர்கள் எப்படியாகிலும் தன் மாணவ, மாணவியரை திருத்தியே  ஆகவேண்டும் என்று கடினமான தண்டனைகள் கொடுப்பார்கள். போதகர்கள் தங்கள்  மக்கள் திருந்த வேண்டும், நல்வழிப்படுத்த வேண்டும் என்று சில வேளை கடினமான வார்த்தைகளை கூட பயன்படுத்திவிட்டு வருந்துவது உண்டு. இவை எல்லாவற்றையும் செய்து பார்த்த பின்னரும் ஒரு மாற்றமும் நாம் நினைத்தபடி நடக்கவில்லை என்றால், மனம் வருந்தி, என்ன சொன்னாலும் திருந்தவா போகிறார்கள் என்று மனதை, நத்தை தன் உடலை சுருக்கி கொள்வது போல் சுருக்கிக்கொண்டு வருத்தத்தோடு வாழ் வாழ்வோம்.

மரகத நாட்டை கிமு 491 ஆம் ஆண்டு பிம்புசாரன் என்ற அரசன் ஆண்டு வந்தான். தன் ஆத்மா புண்ணியம் பெற ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆடுகளை பலியிட்டு வந்தான். ஒரு நாள் புத்தர் அவன் அரண்மனைக்கு சென்றார். அனேக ஆடுகள் நிற்பதைப் பார்த்து “எதற்காக?” என்றார். அதற்கு பிம்புசாரன் ‘என் ஆத்துமா புண்ணியம் பெறத்தான்’ என்றான். 

புத்தரின் உள்ளம் வருந்தியது. உடனே அவனைப்பார்த்து ‘ஆயிரக்கணக்கான ஆடுகளுக்கு பதிலாக என்னை பலிகொடுத்து உன் புண்ணியத்தை பெற்றுக்கொள்’ என்றார்.

புத்தரின் இந்த வார்த்தைகள் அவன் உள்ளத்தை பதம் பார்த்தது. தன் தவறை உணர்ந்தான். மனதில் மாற்றம் பெற்றான்.

இன்றும் பலர் மற்றவர்களுக்கு counselling கொடுக்கிறேன் என்று கூறிக்கொண்டு அறிவுரை, ஆலோசனைகளை கூறி மற்றவர்களை திருத்த பார்க்கிறார்கள். இன்று எதற்கு பார்த்தாலும் counselling என்றே கூறுகிறார்கள். அப்படி ஆலோசனை கூறி ஒருவரை, எளிதில் மாற்ற முடியுமா? ஆலோசனை என்பது ஒரு நிலை. ஆனால் எப்பொழுதும் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறிக் கொண்டே இருந்தால் பிள்ளைகள் நம்மை பார்த்து ரம்பம் போடாதிருங்கள்!  போதும் போதும் நிறுத்துங்கள்!! எனக்கு எல்லாம் தெரியும் என்று உங்கள் வாயை அடைத்து விடுவார்கள்!!!

ஒருவரின் மனதில் உள்ளதை புரிந்து கொள்ளாமல் நாம் நம் கருத்துக்களை பிறர் மீது திணிப்பதினால் மாற்றத்தை உருவாக்க இயலாது. பிறருடைய கருத்து என்ன? ஏன் இவ்வாறு behave பண்ணுகிறார்கள்? ஏன் திருமணத்திற்கு மறுக்கிறார்கள்? ஏன் வருகிற வரன்களை எல்லாம் வெறுத்து ஒதுக்குகிறார்கள்? ஏன் அந்தக் கணவனுடன் வாழ மாட்டேன் என்று கூறுகிறார்கள்? ஏன் உங்கள் பிள்ளைகள் அந்தக் courseஐ தெரிவு செய்யவே மாட்டேன் என்கிறார்கள்? ஏன் உங்கள் பிள்ளைகள் அந்த ஆசிரியர் பாடத்தில் மட்டும் மதிப்பெண் குறைவாக எடுக்கிறார்கள்? ஏன் உங்கள் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதை வெறுக்கிறார்கள்? ஏன் வேலைக்கு ஒழுங்காக சென்றவர்கள் இப்பொழுது போக மறுக்கிறார்கள்? ஏன் பிறருடன் பேசாமல் வீட்டிற்குள்ளேயே சோகமாக உட்கார்ந்திருக்கிறார்கள்? இவ்வாறு மற்றவர்கள் நிலையை புரிந்து கொள்ள முற்படவேண்டும். எல்லாவற்றையும் நன்கு புரிந்து கொண்ட பின்பு, அவர்கள் தவறான சிந்தனையில் செயல்பட்டால், நறுக்கென்று தவறான கருத்துக்கு முரண்பட்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

பிலேயாம் தீர்க்கனுக்கு பணத்தின் மீது ஆசை. ஆகவே இஸ்ரேல் மக்களை சபிப்பதற்காக புறப்படுகிறான். ஆண்டவர் வேண்டாம் என்று கூறினாலும் உள்ளமெல்லாம் பண ஆசையால் நிறைந்திருக்கிறது. எனவே மீண்டும் ஆண்டவரிடம் அனுமதி கேட்கிறான். ஆண்டவர் போ என்று கூறுகிறார். ஆனால் போகிற வழியிலே தேவனுடைய தூதன் உருவின பயத்துடன் நின்றான். பின்புதான் தெளிவை பெறுகிறான். அதன்பின்பு இறுதிவரையிலும் கர்த்தர் எதைச் சொன்னாரோ அதை மட்டுமே அவன் கூறிவிட்டு திரும்புகிறான். இறைவன் சரியானபடி எச்சரித்ததினால் பணத்திற்காக தவறாக பேச முடியாமல் போய்விட்டது.

ஆண்டவர் கூட இவ்வாறு மனிதன் வழி விலகிப் போகும் போது சரியான வழிக்கு கொண்டுவர வித்தியாசமான அணுகுமுறையை கையாள்கிறார். நாம் எவ்வாறு, எப்படிப்பட்ட முறைகளை கையாள்கிறோம்?

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

கலாச்சார நீரோடையில் அடித்துச் செல்லப்படும் திருச்சபை

நற்கிரியை செய்யும் பெண்

கவர்ச்சியா? கண்ணியமா?