மாறாதது எது?


நண்பர் ஒருவரை சந்தித்துப் பேசி கொண்டிருந்தேன். அவர் நான் பேசிக் கொண்டிருக்கும் போது சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே இருந்தார். ஒரு சிகரெட் புகைத்து முடிந்தது. ஐந்து நிமிட இடைவெளியில் அடுத்ததை புகைத்துக் கொண்டிருந்தார். அவரிடம், "ஏன் இவ்வாறு தொடர்ந்து புகைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்" என்று கேட்டேன்.

என் மனைவி என்னை விட்டு பிரிந்துப் போனதை நினைக்கும் போதெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மன அழுத்தம் எனக்கு அதிகம் அது உங்களுக்கு புரியாது. அவள் நல்லவள் தான். ஆனால் அவள் பிரிந்துப் போய் விட்டாள். என் பிள்ளைகளைப் பார்ப்பதற்கும் என்னை அனுமதிப்பதில்லை. இதை நினைத்தாலே எனக்கு mood அவுட்டாகி விடுகிறது. வேலைக்குப் போகிற மனமே வருவதில்லை. காலையிலேயே குடித்தால் தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக உள்ளது என்று பேசிக்கொண்டே அடுத்த சிகரெட்டை எடுத்தார்.

மன அழுத்தம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வருகிறது. சிலருக்கு ஓயாத வேலைப்பளு, சிலருக்கு கணவன் செயல்பாடுகளைப் பார்க்கும் போதும், சிலருக்கு பிள்ளைகள் எப்பொழுதும் Cell Phone யை பயன்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போதும், சிலருக்கு மனைவியின் நடத்தையைப் பார்த்தும், பிள்ளைகளுக்கு பெற்றோர் எப்பொழுதும் ஆலோசனைக் கூறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போதும் மன அழுத்தம் வருகிறது. எல்லாரும் சுதந்திரமாக, யாருடைய கட்டுப்பாடும் இன்றி, நினைத்தபடி எல்லாம் வாழவேண்டும் என்று ஆசை. நினைத்த போதெல்லாம் விடுமுறை தரவேண்டும், ஒரு நாள் முழுவதும் செல்லைப் பார்த்தாலும் பெற்றோர் கண்டிக்கக் கூடாது, வாங்கின சம்பளத்தையெல்லாம் தான் விரும்பினபடி செலவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நம்முடைய விருப்பத்திற்கு மாறாக செயல்படும் போது மன அழுத்தம் வந்து விடுகிறது.

பனிப் பிரதேசத்தில் வாழ்கிற கரடிகள் எல்லாம் அதன் தட்பவெட்ப சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளுகிறது. அந்த குளிரைத் தாங்க முடியாமல் ஒரு நாளும் இது என்ன வாழ்க்கை என்று ஒரு கரடியும் இதுவரை தற்கொலைச் செய்துக் கொண்டதில்லை, புலம்பிக் கொண்டும், குறைச் சொல்லிக் கொண்டும் கூட அலைவதில்லை.   அவைகளெல்லாம் சூழ்நிலைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுகிறது. இதைப் போன்று நம்முடைய வேலையைக் குறித்தும், மேலதிகாரிகளின் செயல்பாடுகளைக் குறித்த நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை உடையவர்களாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

மாற்ற முடிந்ததை நாம் மாற்றிக் கொள்ள முற்படலாம். ஆனால் மாற்ற முடியாத காரியங்களை முழு மனதுடன்  ஏற்றுக்கொள்ள பழகிக் கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம். 

மன அழுத்தத்தை சமாளிப்பதைக் குறித்து டாக்டர் சித்ரா அவர்கள் கீழ்கண்ட வழி முறைகளைக் குறிப்பிடுகிறார்.

  1. மனம் விட்டும் நமது காரியங்களைப் பேச வேண்டும்
  2. உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கென்று சரியான நபர்களைத் தெரிந்துக் கொண்டு பேசவேண்டும்.
  3. Positive thinking யை வளர்த்துக் கொள்ள முற்பட வேண்டும்
  4. பிரச்சனைகள் வரும் முன்னே அதை சந்திக்க துணிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  5. பிரச்சனைகள் வந்தாலும் சரியான உணவை எடுத்துக் கொள்ளவும், சரியாக தூங்கவும், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்வதையும் தவிர்க்கக் கூடாது. 
  6. பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் வழிகளையும், அதன் காரணங்கள் என்ன என்பதை ஆராயவும் நேரம் செலவிட வேண்டும். பிரச்சனை வந்தவுடன் மனைவி/கணவன்/ பிள்ளைகளை விட்டு விட்டு ஓடிவிடக்கூடாது.

திருமறையில் யோசேப்பு செல்லமாக வளர்க்கப்பட்டவன். ஆனால் எதிர்பாராத பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டான். ஆனால் அவைகளை மேற்கொள்ள முற்படுகிறான். தான் பிரச்சனையிலிருந்து மீளவே முடியாது என்று தன் முயற்சி அனைத்தையும் விட்டு விடவில்லை. நேர்மையை, பரிசுத்தத்தை உண்மையை, விட்டு விட்டு ஓடிவிட விரும்பவில்லை. நிதானமாக நின்று மேற்கொண்டு ஜெயிக்கிறான்.   யோசேப்பைப் போல் வாழ நாமும் கற்றுக்கொள்ளுவோம்.   கர்த்தர் நம்மோடிருக்கிறார்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி