ஆயிரம் ஐடியாக்கள்
மணமகளை பார்த்து, “உன் வீட்டுக்காரன் சரியான வெடிவாலு, ஒரு இடத்தில் இருக்க மாட்டான், ஊரை சுற்றிக் கிட்டே அலைவான். ஊதாரித்தனமாக செலவு செய்வான் அதனால நான் சொல்லுகிறதைக் கேளு, உன் பாட்டி மாதிரி சொல்லுகிறேன்” என்றாள்.
புதிதாக வந்த மணமகளுக்கு தன் கணவனைப் பற்றி தொடக்கத்திலே காதில் ஓதியது தலையை சுற்ற ஆரம்பித்தது.
பாட்டி மீண்டும் ஆரம்பித்தார்கள், “பயப்படாதே, நான் சொல்கிறபடி செய் சரியாக வந்திடுவான். முதலிலேயே ஒரு பிடி பிடித்து விட்டால் வழிக்கு வந்து விடுவான். இவனை மாதிரி தான் என் வீட்டுக்காரரும்” என்றாள்.
சரி பாட்டி சரி என்று தலையை ஆட்டினாள். பாட்டி புராணம் தொடர்ந்தது, “முதல் நாளே வெளியே சுற்றி வருகிறதை விட்டு விடுங்கள் என்று கண்டிப்பாக சொல்லி வைத்துவிடு, அப்படி சுற்றிவிட்டு வந்தால் ஒரு ஆட்டம் ஆடி விடு! சம்பளத்தை அப்படியே ஒரு ரூபாய் விடாமல் கையில் மாதத்தின் முதல் நாளே வாங்கி விடு. ஒரு ரூபாய் குறைந்தாலும் நீ கத்துகிற கத்துதலிலே இருந்து அடுத்த மாதம் சரியாகி விடுவான் என்றாள்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்த மெர்ஸி பாட்டியிடம், “பாட்டி, தாத்தா நீங்க போட்ட கண்டிசன் படி எல்லாம் நடந்துக்கிட்டார்களா என்றாள்? “
பாட்டி கலகலவென்று சிரித்துவிட்டு சொன்னாள், “யாருக்கு தெரியும், நான் போட்ட கண்டிஷன்ல முதல் மாதம் வீட்டைவிட்டு போனவர்தான் இன்னும் வீடு பக்கமே வரல” என்று குண்டை தூக்கி போட்டாள்.
அடுத்த நிமிடமே மெர்சி பாட்டியின் கையை தட்டி விட்டு விட்டு, கணவனின் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டு போஸ் கொடுக்க ஆரம்பித்தாள். Smile Please போட்டோ கிராஃபர் சத்தம் கேட்டது! சாத்தான் நடையைக்கட்டினான்!!
திருமறையில் ஒரு அழகிய வசனம் நீதிமொழிகளில் உள்ளது. “விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும். கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.” (நீதிமொழிகள் 26: 20-22) பலர் கூறுகிற ஆலோசனைகள் என்பது தவறாய் கூட அமைந்துவிடுகிறது. பல முதியவர்கள் நல்ல ஆலோசனைகளை தான் கூறுகின்றனர். ஆனால் சிலர் தவறான ஆலோசனைகளைக் கொடுத்து குடும்பத்தை பிரித்துவிடும் பொல்லாதவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. குடும்ப வாழ்வின் துவக்கத்திலேயே விஷ விதைகளை தூவி விடும் விஷமிகளுக்கு கவனமாக இருக்கவேண்டியது இளம் தம்பதிகளுக்கு அவசியம்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment