கஜானா காலி
பேசிக்கொண்டிருக்கும் போது தான் இருக்கிற அந்த வீடு வாடகை வீடு என்றும், கார், பைக் செல்போன் எல்லாமே EMIயில் வாங்கியது தான் என்றும் கூறி என்னை கலங்கடித்தார்.
கொஞ்சம் வருமானம் வருகிறது ஆனால் வீட்டில் எல்லாரும் ஆடம்பரமாக வாழ்ந்து பழகி விட்டார்கள் என்பது எனக்கு புரிந்தது. பேருந்துக்கு காத்திருக்கக் கூடாது என்பதற்காக பிள்ளைகளுக்கும் விலையுயர்ந்த பைக், கார்.
ஒரு நாள் மாலை வேளையிலே பேருந்து நிலையத்தில் சோகமாக அவர் நிற்பதைக் கண்டு, “என்ன இங்கே நிற்கிறீர்கள்” என்று கேட்டேன். அவரோ கண்ணீர் விட்டுக் கொண்டே, “என்ன சொல்லுகிறது என்று தெரியவில்லை. வீட்டிற்கு சரியாக வாடகை கொடுக்காததால் வீட்டை காலி செய்ய சொல்லி விட்டார்கள். காருக்கு சரியாக EMI கட்டாததால் finance காரர்கள் வண்டியை தூக்கிக் கொண்டு சென்றுவிட்டனர். அதனால் பேருந்துக்காக காத்து இருக்கிறேன்” என்றார்.
வாழ்க்கையில் அளவுக்கு மிஞ்சிய ஆடம்பரம் என்பது வாழ்க்கையை துன்பத்திற்குள்ளாக கொண்டுபோய் விட்டுவிடும்.
வில்வித்தையில் தேறின மனிதன் ஒருவன் இருந்தான். மிகக் கூர்மையாக அம்புகளை எய்து மிருகங்களை வேட்டையாடுவதில் கில்லாடி. ஆகவே அவனுடைய திறமை பலருக்கும் தெரிந்ததே.
ஒருநாள் யாரிடமும் இல்லாத அழகான வில் ஒன்றை செய்வதற்கு வில்லை செய்யும் மனிதரிடம் போனான். மிக அழகாக, நேர்த்தியாக செய்ய வேண்டும், எல்லாருக்கும் பிடிக்கும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அது போலவே மிகவும் உறுதியான, அழகான வில்லை செய்து கொடுத்தான்.
ஆனால் அந்த வில்லாளிக்கு அதில் திருப்தி இல்லை. இன்னும் அதை அழகு படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். எனவே மீண்டும் அழகான இயற்கையை, வளங்களை அந்த வில்லிலே செதுக்கி காண்பித்தான்.
இன்னும் திருப்தி ஏற்படவில்லை. எனவே இன்னும் கொஞ்சம் அழகு படுத்துங்கள் அப்பொழுதுதான் என் வில்லை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். என் வில்லை போன்று அழகான வில் உலகிலே இல்லை என்று பாராட்டுவார்கள் என்று கேட்டுக்கொண்டான்.
நன்றாக யோசித்து அந்த வில்லாளியையே அந்த வில்லில் அழகாக செதுக்கி கொடுத்தான். இப்பொழுது மிகவும் பிடித்துப்போனது. அதை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் காட்டிற்குச் சென்றான். விலை உயர்ந்தது மதிக்க முடியாதது என்ற பெருமை கொண்டவனாக செருக்கோடு சென்றான்.
ஒரு காட்டு மிருகத்தை குறிவைத்து தன் வில்லில் நாணை ஏற்றினான். அந்தோ பரிதாபம் விலைஉயர்ந்த வில் நொடிந்து போனது.
பலருடைய வாழ்க்கையிலும் ஆடம்பரம் என்பது இப்படித்தான் வாழ்க்கையை நொடிந்து விழ செய்துவிடுகிறது. முன்னோர் காலத்தில் செல்வச் செழிப்பாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது கையில் பணம் இல்லை என்றால் அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முற்பட வேண்டும்.
பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் ஏன் அவர்களைப் போன்று வாழக்கூடாது என்று ஆடம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இவ்வாறு ஆடம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வட்டிக்கு மேல் வட்டிக்கு பணத்தை வாங்கிவிட்டு கடன்காரர்களிடம் அசிங்கமான பேச்சை வாங்கிக்கொண்டு, அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர். சூழலுக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ள முற்படுங்கள்.
பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான். (நீதிமொழிகள் 15:27) மனரம்மியமோ நித்திய விருந்து. (நீதிமொழிகள் 15:15) ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டு.(நீதிமொழிகள் 13:7). இந்த திருமறை வாக்கியங்கள் எல்லாம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தெளிவாக எடுத்துரைக்கிறது. போதுமென்ற மனதுடன் மகிழ்ச்சியுடன் வாழ பழகிக் கொள்ளுவோம். பொருள்களால் தான் மகிழ்ச்சி என்பதல்ல. இருக்கிறதில் கர்த்தருக்கு நன்றியுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment