என்னவாக விரும்புகிறாய்?
திடீரென்று வந்த cellphone அழைப்புதான் அவளை நிலைகுலையச் செய்தது. விமானம் தரையிறங்கும் போது பனி மூட்டத்தால் தடம் மாறி விபத்திற்குள்ளானதில் கணவன் இறந்து போனான் என்ற செய்தியை அவளால் நம்ப முடியவில்லை. அதைக் கேட்ட உடன் அவள் கத்தினாள், கதறினாள், வேதனைப்பட்டாள். இருப்பினும் வாழ்வை Sam க்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று மன அமைதியானாள்.
Sam வளர ஆரம்பித்தான், ஒரு நாள் தாயின் மடியில் உட்கார்ந்துக் கொண்டு, அம்மா நானும் flight யை உம் என்று உட்கார்ந்துக் கொண்டு ஓட்டுவேன். நீங்கள் பின்னால் உட்கார்ந்துக் கொள்ளுங்கள் என்றான். இதைக்கேட்ட ஷைனிக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. என்னப்பாடு பட்டாலும் பரவாயில்லை, தன் மகன் ஒரு விமானி ஆகக் கூடாது. என் கணவனை இழக்கக் கொடுத்த அந்த பணிக்குச் செல்லவா என் மகனை அனுப்புவேன்? ம் கூம் கூடவே கூடாது. இப்போது சொன்னால் சரி வராது என்று மனதிற்குள் மனக் குமுறலை அடக்கி வைத்துக் கொண்டாள். காலம் வரும் போது சரியாக மன மாற்றம் செய்து விட வேண்டும் என்று கவனமாக இருந்தாள்.
வருடங்கள் ஓட ஆரம்பித்தது. அம்மாவிடம் வந்தான் Sam. அம்மா, அம்மா நான் என்னவாகவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என்று கேட்டான். அம்மா அவனிடம் "நீ டாக்டர் ஆகவேண்டும் என்பது எனக்கு ஆசை மகனே. ஆனால் அதை நீ ஏற்றுக் கொள்வாயோ இல்லையோ தெரியவில்லையே" என்று யோசித்துக் கொண்டு மெதுவாக கூறினாள், நீ என்னவாக வேண்டும் என்று விரும்புகிறாய் என்பதை நமது போதகரிடம் சொல். அவர் உனக்காக ஜெபித்து அசிர்வதித்து அனுப்புவார் என்று கூறி மெதுவாக போதகர் வீட்டிற்கே வந்தார்கள்.
மகனை போதகர் முன் அறையில் உட்கார வைத்து மகிழ்வோடு பேசினார். Sam உடைய ambition பற்றி பேசியபோது விமானியாக மாற வேண்டும் என்று பெருமையோடு சொன்னான். அவன் பேச பேச ஷைனியின் கண்கள் குளமாயிற்று. போதகர் ஜெபித்து Samயை தன் மகனுடன் விளையாட உள் அறைக்கு அனுப்பினார்.
ஷைனி போதகரிடம் கண்கள் கலங்க, "ஐயா என் கணவனை விமான விபத்திலே இழந்ததில் இருந்து நான் இன்னும் மீளவே இல்லை. ஆனால் என் மகனும் அதே வேலையில் சேரவேண்டும் என்று கேட்கும் போது என் இதயம் எல்லாம் ரணமாகிறது" என்றாள்.
போதகர் "உங்கள் வீட்டில் என்னென்ன பொருட்கள், Photosகள் வைத்துள்ளீர்கள்," என்றார்.
அதற்கு ஷைனி, "என் கணவர் விமானியாக இருந்த போது உள்ள Photo, பணியாற்றிய விமான Photos, பல்வேறு நாடுகளின் விமான நிலையத்தில் அவர்கள் எடுத்த Photos, அவர்கள் வாங்கிய award எல்லாம் வைத்திருக்கிறேன்" என்றாள்.
போதகர் கூறினார் உங்கள் மகன் டாக்டர் ஆகவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், "அது சம்பந்தமான Photosயை சுவர்களில் மாட்டி வையுங்கள். கவலைப்படாமல் விமானம் சம்பந்தமான போட்டோவை எடுத்து தற்சமயம் Sam கண்ணில் படாமல் மறைத்து வையுங்கள் என்றார்.
ஷைனிக்கு இது கஷ்டமாக இருந்தாலும் போதகர் நனமைக்காகவே கூறுவார் என்று நினைத்துக்கொண்டு தலையை அசைத்துவிட்டு சென்றாள்.
பள்ளிச் சென்று திரும்பிய Sam அம்மா என்று கூப்பிட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். அம்மா என்னைப் பார்த்து எங்க Sir சொல்லுறாங்க நீ பெரிய டாக்டர் ஆக மாறுவாய் என்று பாராட்டுறாங்க. நான் டாக்டர் ஆகட்டுமா அம்மா! என்றான்.
ஷைனியின் கண்களில் இருந்து கண்ணீர் பனித்துளியாய் விழ தலையை அசைத்து சரி மகனே, அம்மாவிற்கு டபுள் ஓகே என்றாள்.
நாம் நம் பிள்ளைகளை வளர்க்கும் போது அவர்களின் எதிர்காலங்கள் குறித்து பேசி உரையாடவேண்டும். அந்த உரையாடலில் அவர்களின் எதிர்காலம் குறித்த பார்வையைத் தெளிவுப்படுத்த பெற்றோருக்கு வாய்ப்பு உண்டு. சில வேளைகளில் தவறான நண்பர்களின் தவறான வழி நடத்துதல்கள் பிள்ளைகளின் வாழ்வில் இடையூறுச் செய்யலாம். அப்பொழுது பேசி சரிச் செய்யலாம். அதற்காக பெற்றோரின் கனவுகளை, ஏக்கங்களை பிள்ளைகளுக்குள் புகுத்தக் கூடாது. அவர்களுக்குள் காணப்படும் திறமைகளுக்கு ஏற்ப வழிநடத்த வேண்டும். சில வேளைகளில் பெற்றோரின் அனுபவங்களை பிள்ளைகளோடு பகிர்ந்துக்கொள்ளும் போது வாழ்வில் ஏற்படும் சவால்கள் குறித்து அவர்கள் சிந்திக்க இடமுண்டு.
சாமுவேலின் தாய் அன்னாள் தன் மகனை கடவுளுடைய ஆலயத்தில் கொண்டு வந்து விட்டு "இந்த பிள்ளைக்காக விண்ணப்பம் பண்ணினேன்... அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக் கொடுக்கிறேன் என்றாள். அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துக் கொண்டான்." (1சாமுவேல் 1:27,28). பிள்ளை கர்த்தருடைய சமூகத்தில் வளர்ந்த போது ஒரு நியாயாதிபதியாக (judge) ஆக, இறை வாக்கினராக, ஆசாரியனாக உருவெடுத்து பெரிய மனிதனாக இஸ்ரவேல் தேசத்தில் விளங்கினான். காரணம் அவர் கர்த்தரின் ஆலயத்தில் வளர்ந்ததால் தான்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment