பம்பளிமாசா? ஆரஞ்சா?
இறங்கின உடன் இளைஞர்களாக இருந்ததால் உடனே சிட்டாய் அங்கும் இங்கும் பறக்க ஆரம்பித்து விட்டனர். Control பண்ணுவதே அழைத்துவந்த தலைவர்களுக்கு கஷ்டமாகிவிட்டது. அதற்குள்ளாக சிலர் அங்குள்ள பழங்களை பறித்துக் கொண்டு வந்துவிட்டார்கள். ஏய் ஆரஞ்சுப்பழம் கிடைத்தது என்று மகிழ்ச்சியுடன் கூறிக்கொண்டு தோலை உறிக்க ஆரம்பித்தனர். ஆனால் உறிக்க முடியவில்லை. எங்கள் நிலைமையை பார்த்த மலைவாழ் மக்கள் எங்களை பார்த்து சிரித்து கொண்டே, “இது ஆரஞ்சு அல்ல, பம்பளிமாஸ், இது இன்னும் பெரிதாக வேண்டும். அப்பொழுதுதான் சுவையாக இருக்கும்” என்றார்கள்.
அவர்கள் சொன்னது போலவே சாப்பிட்ட பிறகுதான் தெரிந்தது சுவையின் வேற்றுமை. ஆரஞ்சு போல இருப்பதால் பம்பளிமாஸ் ஆரஞ்சாக மாறமுடியாது. ஒவ்வொன்றுக்கும் சுவை வேறு, இது ஆண்டவரின் படைப்பின் ரகசியம்.
வாலிபர் கூடுகை ஆரம்பிக்கப்படும் முன் வாலிபர் கூடுகைக்கு வந்த பேச்சாளரிடம் கூட்டத்தை ஏற்படுத்திய தலைவர் தன் இரண்டு மகன்களையும் அழைத்து முன்னே கொண்டு வந்துவிட்டார். இவர்கள் இரண்டு பேரும் twins. ஆனால் Dani நன்றாக படிக்கிறான், அனனியா ஒரு நேரமும் படிக்க உட்காரவே மாட்டான். எப்பொழுதும் பாட்டு, ஜாலி, விளையாட்டு, பிரண்ட்ஸ் என்றே சுற்றிக்கொண்டே அலைகிறான். கொஞ்சம் புத்தி சொல்லுங்க என்றார். அவர்கள் இரண்டு பேரையும் ஜெபித்து அனுப்பிவிட்டு, வாலிபர் கூடுகையை ஏற்படுத்திய தலைவரிடம் கூறினார், “சின்னவன் ஆயிரமும் சிறியவன் பெலத்த ஜாதியுமாவான்” என்று திருமறை கூறுவது போல அனனியாவை சாதாரணமாக நினைத்து ஒதுக்க வேண்டாம். ஒவ்வொருவரையும் ஆண்டவர் ஒவ்வொரு விதமான திறமைகளுடன் படைத்துள்ளார். எனவே அவர்களுடைய திறமைகளை கண்டுபிடித்து விளக்கிலுள்ள திரியைத் தூண்டி எழுப்புவது போன்று தூண்டி எழுப்புங்கள் என்றார்.
வருடங்கள் உருண்டோடியது. அனனியா விளையாட்டில் அதிக திறமையுடன் விளையாடினான். state-levelல் ஜொலிக்க ஆரம்பித்தான். யாரும் எதிர்பார்க்காமல் Railwayயில் பணியும் கிடைத்தது. டேனி நன்றாக படித்தான் பலமுறை bank exam எழுதினான். கஜினியை போன்று தொடர்ந்து போர் தொடுத்து கொண்டேதான் இருக்கிறான்.
பிள்ளைகளின் திறமைகள், அறிவு என்பது ஒரே பள்ளியில் படிப்பதினால் சமமாக இருக்கும் என்பதல்ல. ஒரே வீட்டில் வளர்க்கப்படுவதினாலும் சமமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
படித்த பெற்றோர்களின் பிள்ளைகள் சிலவேளை பிறப்பிலே அறிவாளிகளாகவும், ஆர்வமுள்ளவர்களாகவும் வளரக்கூடும். அதேவேளை படிப்பில் ஆர்வமற்றப் பிள்ளைகளாகவும் வளரக்கூடும். அதேபோன்று ஏழ்மையாக பொருளாதார சமூகப் பின்னணியில் பிறந்து பின் நாட்களில் நல்ல சமூக சூழலால் உந்துதல் ஏற்பட்டு எகிறி குதிக்கிற திறமையான பிள்ளைகளும் உண்டு. இது சமூகத்தில் ஏற்படுகிற தாக்கத்தின் விளைவினால் உருவாகும் பிள்ளைகள். தாங்கள் வாழ்வில் முன்னேறி காட்ட வேண்டும் என்ற வெறித்தனமும் பலவேளை பிள்ளைகளை உச்சநிலைக்குக் கொண்டு செல்லவும் முடியும்.
இருப்பினும் கடவுளுடைய சித்தம் நம் பிள்ளைகள் வாழ்வில் நிறைவேற ஒப்புக்கொடுப்பதும், ஜெபிப்பதும், அவர்களோடு கூட quality time கொடுத்து பேசுவதும் உரையாடுவதும் இன்றிமையாதது.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment