கூர்மையான ஆயுதம்



வார்த்தை என்பது வாழ வைக்கவும் செய்யும், வாழ்வை எடுக்கவும் செய்யும் என்பதற்கு நல்ல ஒரு உதாரணத்தை, நடந்த சம்பவத்தை மதிப்பிற்குரிய இறையன்பு IAS அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். திருமணமான பெண்கள் எவ்வாறு சுடு வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒரு பெரியவர் நன்றாக குடும்பத்திற்கு உழைத்துக் போடுகிறவர். ஒருநாள் தன்னுடைய தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு களைப்போடு மதியம் வெயிலில் வீட்டிற்கு வருகிறார். வேலை செய்து உழைத்த மனிதன் பசியோடு வீடு திரும்பினார். முகத்தை கழுவி விட்டு வீட்டிற்குள் நுழைந்தபோது மருமகள் மட்டும் வீட்டில் இருந்தாள்.

தனக்கு உணவு போட்டு தருவாள் என்று காத்திருந்தார். நேரம் ஆகியும் உணவு தராததால் மெதுவாக மருமகளிடம் “சாப்பாடு போட்டு தாம்மா” என்று கேட்டார்.

மருமகள் கேட்காதது போல் இருந்து கொண்டாள். எனவே மீண்டும் மருமகளிடம் உணவு கேட்டார். அவள் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டு “இவங்க எல்லாம் சாப்பாட்டுக்கு பதிலா வேறு எதையாவது சாப்பிடலாம்” என்றாள்.

கேட்ட வார்த்தை மாமனாரின் இருதயத்தை துளையிட்டது. முகமெல்லாம் வியர்த்தது. கடினமான வார்த்தையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே வெளியே போய் உட்கார்ந்தார். மாலை வேளையில் மகன் வந்தான். சாப்பிட்டீங்களா என்றான். இல்லப்பா, பசிக்கவில்லை என்றார். இரண்டாவது நாளும் சாப்பிடவில்லை. மருமகளே வந்து மன்னிப்புக் கேட்டாள். ஆனாலும் நாவினால் சுட்ட வடு மாறவில்லை. உறவினர்கள் வந்து கெஞ்சி பார்த்தனர். அவர்களைப் பார்த்து என்னை சாப்பிட வற்புறுத்தாதிருங்கள் . நான் இனி சாப்பிட்டால் அது மலத்தை சாப்பிட்டது போல் எனக்கு இருக்கும் என்று கையெடுத்து கும்பிட்டு என்னை விட்டு விடுங்கள் என்றார்.

பசி குடலை கிள்ளினாலும் அவர் ஒரு ஈரத் துணியை எடுத்து வயிற்றில் கட்டிக்கொண்டு பதினோராவது நாள் உயிரையே விட்டு விட்டார்.

பேசுகிற வார்த்தை என்பது உள்ளத்தை உடைத்து விடும். சாதாரணமாக பெரியவர்களை நீங்கள் பேசலாம். ஆனால் அவைகள் ஈட்டியை போன்று இதயத்தை பிளந்து விடுகிறது.

மனுஷர் பேசும் வீணான வார்த்தைகளை குறித்து நியாயத்தீர்ப்பின் நாளிலே கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்று திருமறை எச்சரிக்கிறது. உங்கள் நாவில் இருந்து புறப்படும் கடினமான வார்த்தைகள் மதிப்போடு வாழ்ந்த உங்கள் மாமனார் மாமியாரை படுத்த படுக்கையாக்கி விடும் வலிமை உள்ளது. இனிய வார்த்தைகள் எலும்புக்கு மருந்து போன்றது. நாம் எப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறோமோ அதே வார்த்தையை நீங்கள் வயதானபோது கேட்க நேர்ந்தால் உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பதை யோசித்து பாருங்கள். உங்களுக்கு பிறர் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே நீங்கள் செய்யுங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி