பயனற்ற உழைப்பு


ராபர்ட் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று தன் பிள்ளைகள் மற்றும் மனைவியை விட்டுவிட்டு வெளிநாடு சென்றார். கை நிறைய சம்பளம் கிடைத்தது. தங்க கட்டிகளாக சம்பாதித்து அவ்வப்போது ஊருக்கு கொண்டு வருவார். பிள்ளைகளை நல்ல பள்ளிகளில் படிக்க வைத்தார். பெரிய வீட்டை கட்டினார். ஊரிலேயே பெரிய பணக்கார குடும்பமாக தலைநிமிர்ந்து நின்றது.

பிள்ளைகள் வளர வளர தாயின் சொல்லைக் கேளாமல் ஊருக்குள் ஊதாரியாக சுற்றினர். பள்ளியில் படிப்பதற்கு பதிலாக பள்ளியை கட் அடித்துவிட்டு சுற்றுலா தலங்களுக்கு நண்பர்களோடு சுற்றி மகிழ்ந்தனர். தாயிடம் ஏமாற்றி பணத்தை வாங்கிக்கொண்டு ஜில் அடித்து அடித்து மகிழ்ந்தனர். தகப்பனார் சம்பாதித்து அனுப்பிய பணத்தை மனைவி வட்டிக்குக் கொடுத்து ஏமாந்தாள். 

வயதான போது ஊரில் இருந்து விட வேண்டும் என்று வந்தபோது அவர் பிள்ளைகள் போக்கிரிகளாகவும், மனைவி ஆடம்பர வாழ்விலும் குருவி சேர்ப்பது போல் சேர்த்த அவர் சம்பாத்தியம் காற்றில் பறந்து போனதைப் பார்த்து உயிரையே விட்டு விட்டார். பிள்ளைகளின் வாழ்வு அவருக்கு பெரும் சோகத்தை கொடுத்தது.

இதைப் போலத்தான் பல வேளைகளில் நாம் எதற்காக உழைக்கிறோம் என்பதே தெரியாமல் கண்மூடித்தனமாக வாழ்ந்துவிட்டு நடக்கும் செயல்களை பார்த்து சோகத்தில் மூழ்கி விடுவோம்.

நெப்போலியன் ரஷ்யாவின் மீது படை எடுக்கும் போது மிகவும் தெளிவாக திட்டமிட்டார். ரஷ்ய மன்னர் ஜார்ஜுக்கு ராணுவ ஆலோசகராக இருந்த ஜெனரல் ராபர்ட் தாமஸ் வில்சனின் புத்தகங்களை எல்லாம் கற்று Nook and Corner ஐ அறிந்திருந்தார்.

1812 ஜூன் மாதம் ரஷ்யாவிற்குள் நுழைந்து மாஸ்கோ வரை அவர் படைகள் புகுந்து அமர்க்களம் செய்தது. அக்டோபருக்குள் ரஷ்யா தன் வசம் வந்துவிடும் என்று கணக்குப்போட்டு செயல்பட்டார் நெப்போலியன்.

ரஷ்ய வீரர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்த நெப்போலியன் மாஸ்கோவில் முகாமிட்ட போது தண்ணீர், உணவு கிடைக்காமல் கஷ்டப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. காரணம் ரஷ்ய மன்னர் முதலாம் அலெக்சாண்டர் செய்த மாஸ்டர் பிளான். பனிப் பொழிவினால் ஏற்பட்ட குளிரானது ஊசி போன்று எலும்புகள் வரை குத்தியது. நிலைமை மோசமான போது நெப்போலியன் கொள்ளையடித்த தங்கத்தை உருக்கி கட்டிகளாக மாற்றி பிரான்ஸுக்கு திரும்ப முடிவெடுத்தார்.

சுமார் 80 டன் தங்க கட்டிகளுடன் 200க்கும் மேற்பட்ட வண்டிகளில் ஏற்றி ஏலேலோ ஐலசா என்று புறப்பட்டது. ஆனால் சுமார் 300 கிலோ மீட்டர் பயணம் வந்தபோதே 6 லட்சம் வீரருடன் வந்த நெப்போலியன் சில ஆயிரம் வீரர்களுடன் திரும்பினதை உணர்ந்தார். தங்கத்தைக் கொண்டு சென்ற வண்டியை தள்ளி விட ஆர்வம் இல்லாமல் தவித்தார் நெப்போலியன். என்ன செய்வது என்று யோசித்தவர் யாருக்கும் தெரியாமல் ‘செம்லெவோ’ ஏரியில் தங்கத்தை புதைத்தார். வாய்ப்பு வரும்போது தோண்டி எடுக்கலாம் என்று நினைத்தார். ஆனால் நெப்போலியன் திரும்ப வந்து அதை தோண்டவும் இல்லை, ரஷ்யர்களால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை! யாருக்கும் பயனில்லாமல் போனது நெப்போலியனின் படையெடுப்பும்  தங்கமும் இன்றுவரை!!

பலர் வாழ்க்கையிலும் இப்படித்தான் கண்மூடித்தனமாக உழைப்பதாக நினைத்து உழைத்து, பணத்தை, தங்கத்தை சேமிக்கின்றனர். ஆனால் பிள்ளைகள், மனைவி ஆகியோர் இறுதிவரையில் அவர்களுடன் நிலைப்பதில்லை. பிள்ளைகள் பயனற்றவர்களாக மாறி சேர்த்துவைத்த அனைத்தையும் குடித்தே அழித்து விடுகின்றனர். இப்படி குடித்தே அளிப்பதற்காகவே நெற்றி வியர்வை சிந்த பாடுபடுகிறார்கள். திட்டமிட்டு வாழ முற்படுங்கள்.

"தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்..." (பிரசங்கி 2:26) என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php 

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி