எண்டார்பின்


என் நண்பனுடைய வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டை பார்த்து அசந்து போனேன். இந்த சிறிய வயதிலேயே கஷ்டப்பட்டு உழைத்து சொந்தமாக இந்த cityயில் இவ்வளவு பெரிய வீடு கட்டியிருப்பது மகிழ்ச்சியை கொடுத்தது.

இவ்வளவு பெரிய வீட்டை கட்டினவன் நாம் Trainல் இருந்து இறங்கிய உடன் ஒரு காரில் வந்து நம்மை அழைத்துச் சென்றிருக்கலாமே! ஏன் பழைய bikeல் வந்து நம்மை pick up பண்ணினான். அதுவும் signalல் இருந்து கிளம்பும் போது அடிக்கடி off ஆகிவிட்டது. அதை start பண்ணுவதற்குள் அவனுக்கும் எனக்கும் போதும், போதும் என்று ஆகிவிட்டதே என்று நினைத்துக்கொண்டேன்.

வீட்டிற்குள் நுழைந்ததும் உட்காரச்சொன்னான். பழைய காலத்தில் உள்ள chairயை  பத்திரமாக வைத்திருந்ததை எனக்கு உணர்த்தியது. மெதுவாக, கவனமாக உட்கார்ந்துகொண்டேன். ஏனென்றால் என் காலை நான் சரியாக கீழே வைக்க விட்டால் அந்த chair என் காலை வாரி விட்டு விடும் என்ற பயம் தான்!

திடீரென்று செல் கத்தியது, ஓடிவந்து எடுத்தான். செல் பழைய பட்டன் மாடல் பத்திரமாக வைத்திருந்தான். Old is Gold என்றேன்! அவன் சிரித்துக்கொண்டே இதற்கெல்லாம் காசு செலவழிக்க முடியுமா? என்றான். பரவாயில்லையே சிக்கனக்காரனாக இருக்கிறானே என்று நினைத்துக்கொண்டேன்.

மாலை வேளையில் அப்படியே வெளியே போய் வருவோமா என்றேன். சரி என்று கிளம்பிய போது அவனுடைய மகன் ஓடி வந்து Dad என்னையும் என்றான்!

உடனே நண்பன், “நீ பக்கத்தில் இருக்கிற parkல் போய் விளையாடு” என்றான். இப்படி இவங்கள எல்லாம் கூட்டிகிட்டு அலைந்தால் செலவு என்னவாகும். அது வேண்டும், இது வேண்டும் என்று ஒரே தொந்தரவாக இருக்கும். அதனால தான் ஒரு நாளும் wifeயையோ, பிள்ளைகளையோ வெளியே கூப்பிட்டுக் கொண்டு போகிறது கிடையாது” என்றான்.

அதிர்ந்துபோனேன். அப்புறம் எப்படி Time போகும் என்று கேட்டேன். அதற்கு அவன், காலையில் officeக்கு கிளம்பி விட்டால் இரவு பத்து மணிக்கு தான் வீட்டிற்கு வருவேன். ஞாயிறு மட்டும் தான் விடுமுறை. அதையும் அப்படியே டிவி பார்த்துவிட்டு துணிகளைத் துவைத்து விட்டு, வருகிற phoneயை attend பண்ணி விட்டு அப்படியே நேரத்தை போக்க வேண்டியது தான் என்றான்.

இப்பொழுது தான் புரிந்தது எப்படி வீட்டை கட்டி இருக்கிறான் என. ஆனால் வாழ்க்கையை கொஞ்ச நாளில் தொலைத்து விட்டான்.

வாழ்க்கை என்பது பணம் சேர்க்க இருவர் சேர்ந்து திட்டமிடுவது அல்ல. வாழ்க்கை என்பது கலகலப்புடன், மகிழ்ச்சியாக வாழ்வது தான். திருமணமானவுடன் மகிழ்ச்சியை மறந்து, பிறந்த பெண் குழந்தைக்காக பணத்தை deposit செய்வதும், நகை சேர்க்கும் திட்டத்தில் இணைத்து கொள்வதும் மட்டுமல்ல. அவ்வப்போது வெளியே செல்வதும் மகிழ்ச்சியாக ஆடி, பாடுவதும் கூட முக்கியமானது.

சின்ன சின்ன டூர், ஊர் சுற்றுதல், நண்பர்களோடு பேசி,  சிரித்து ஜோக் அடித்து வாழ்தல், beach, falls என்று குளித்து மகிழுதல் எல்லாம் நம்மை மகிழ்ச்சியோடே வாழ வைக்கிற அம்சங்கள்.

நான் உற்சாகமாக மகிழ்ச்சியோடு இருக்கும்போது ‘எண்டார்பின்’ என்ற Happy ஹார்மோன்கள் உடலில் சுரந்து உள்ளத்தை மகிழ்ச்சியாக வைக்கிறது. நாம் சின்ன சின்ன ஊர் சுற்றலில் ஈடுபடுத்திக் கொள்ளும் போது Happy ஹார்மோன்கள் சுரந்து மகிழ்ச்சியையும்,திருப்தியையும்  கொடுக்கிறது.

மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் திருமணம் செய்கிறோம். ஆனால் அன்றாடம் பல்வேறு வேலைகளை செய்து மனதளவிலும் உடலளவிலும் சோர்வுறும் போது கொஞ்சம் நாம் வாழ்க்கை styleயை மாற்றி ஆடிப் பாடினால் இந்த எண்டார்பின் சுரந்து மகிழ்ச்சியான நிலைக்கு நம்மை கொண்டு செல்லுகிறது.

சில வேளைகளில் ஆராதனை என்ற பெயரில் ஆட்டம், பாட்டம் போடும்போது கூட மக்கள் ஆடி, பாடின உடன் இந்த எண்டார்பின் தான் சுரந்து சந்தோஷத்தை கொடுக்கிறது. ஆகா என்ன ஆராதனை என்பர். அதனால் ஆராதனையில் ஆட்டம் பாட்டம் தேவை என்று கூறவரவில்லை.

“கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” (பிலிப்பியர் 4:4) என்று பவுலடியார் குறிப்பிடுவது ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்க்கைக்கும் முக்கியமானது. குடும்பத்தை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல கார் வாங்குகிறோம். அதை ஓட்டிச் செல்லுகிறோம். யாரும் காரை தூக்கி சுமக்க மாட்டோம். சிலர் குடும்பத்தை தூக்கி சுமந்து கஷ்டப்படுகின்றனர். அதை இனிமையாக ஓட்டிச்செல்ல மறந்துவிடுகின்றனர்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி