பூதக்கண்ணாடி


சில வேளைகளில் பிள்ளைகளைப் பற்றி பெற்றோருக்கு மிகவும் கவலையாக இருக்கும்.என் மகன்/ள் எதன் மீதும் கவனம் செலுத்த மாட்டுக்காங்களே,இன்று ஒரு படிப்பை படிக்கிறேன் என்கிறான்/ள். அடுத்த வாரம் அந்த படிப்பிற்கெல்லாம் opportunity குறைவு என்று வேறே படிப்பு படிக்க வேண்டும் என்கிறானே/ளே என்று புலம்புவர்.

படித்த பிள்ளைகள் கூட பணி செய்கிற இடங்களில் நிரந்தரமாக பணி செய்யாமல் ஆறுமாதத்திற்கு ஒரு கம்பெனியில் பணிபுரிவர். இந்த கம்பெனியில் இது சரியில்லை, அது சரியில்லை என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி விட்டு குரங்குபோல் கம்பெனி கம்பெனியாக தாவிக் கொண்டே இருப்பார்கள். பெற்றோர்களுக்கு இது கவலையாகவே இருக்கும்.

இதைப் போன்றுதான் ஒரு தாய் தன் மகனை குறித்து கவலைப்பட்டாள். தன் மகனுக்கு அறிவு இருக்கிறது. ஆனால் எதிலும் கவனம் செலுத்த மாட்டேங்கானே என்று வருந்தினாள். தன் மகனின் கவன சிதறலை எப்படி சரி செய்வது என்று யோசித்தார்.

தன் மகனைப் பார்த்து வீட்டில் இருந்த (magnifying glass) பூதக்கண்ணாடியையும், ஒரு காகிதத்தையும் வெளியே எடுத்து வருமாறு கூறினார்.

உடனே அந்த சிறுவன் வீட்டிற்கு வெளியே எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்தான். அந்த தாய் அந்த காகிதத்தின் மேல் பூதக்கண்ணாடியை அசையாமல் பிடித்துக்கொண்டார். அம்மா ஏதோ வேடிக்கை காட்டுகிறார்கள் என்று அந்த சிறுவன் கவனித்துக் கொண்டே இருந்தான்.

திடீரென்று அந்தக் காகிதம் அந்த பூதக் கண்ணாடியின் ஒருமுகப்படுத்தப்பட்ட ஒளியில் தீப்பிடித்து எரிந்தது. உடனே அவன் அம்மாவிற்கு கை  தட்டினான்.

அந்த தாய் தன் மகனை பார்த்து, “மகனே நீயும் உன் மனதை ஒருமுகப் படுத்தினால் எந்த வேலையிலும் வெற்றி பெறலாம்” என்றார்.

அந்த பிஞ்சு உள்ளத்தில் பலமாய் அந்த வார்த்தைகள் பொறிக்கப்பட்டது. அந்த சிறுவன் வேறு யாருமல்ல நோபல் பரிசை தட்டிச் சென்ற, உலகம் போற்றும் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் தான்.

திருமறையிலும் ஒரு இளைஞர் இருந்தார். ராஜாவின் அரசில் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் தான் தடம் மாறி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். ஆகவே உணவில் கூட கட்டுப்பாட்டோடு இருந்து கொண்டு, அரசனது சிறப்பு உணவினாலும், அவன் பருகிவந்த திராட்சை ரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தி கொள்ளலாகாது என்று தானியேல் தம் உள்ளத்தில் உறுதி செய்துகொண்டார். அவ்வாறே தாம் தீட்டுப்படாதிருக்க அலுவலர் தலைவனிடம் அனுமதி கேட்டார்.” (தானியேல் 1:8) இவ்வாறு கட்டுப்பாட்டோடு வாழ்க்கை வாழ்ந்ததால் ஆட்சி மாறினாலும், அரசர்கள் மாறினாலும், காட்சி மாறினாலும் தானியேலின் காரியமோ ஜெயமாயிருந்தது.

நாம் எடுத்துக் கொண்ட தீர்மானங்கள், படிப்பு, வேலை எதுவானாலும் உள்ளத்தில் மகிழ்வோடும், மனநிறைவோடும், முழு முயற்சியோடும் செய்வதற்கு அர்ப்பணியுங்கள். மேலான, உயர்வான நிலையை அடைய வேண்டுமானால் சின்ன சின்ன காரியங்கள், இன்பங்கள், போன்றவற்றை பற்றி சிந்திக்க கூட இடம் கொடுக்கக்கூடாது. நமது சிந்தனைகள் ஒருமுகப் படவேண்டும்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி