மாற்றங்கள் நம்மிடமிருந்தே


இரண்டாயிரம் ஆண்டுகளாக சீன மக்களின் வாழ்க்கையையும், பண்பாட்டையும் ஒரு மனிதரின் கருத்துக்கள் ஆக்கிரமித்துள்ளது. சீனாவின் வட கிழக்கு மாநிலமான ஷான்டுங் பகுதியில் லூ என்னும் இடத்தில் கி.மு. 551 ல் பிறந்தவர். இளமையிலேயே தந்தையை இழந்தவர். தாயோடு வறுமையில் வாழ்ந்து பின்பு அரசாங்கத்தில் சிறிய அதிகாரியாக பொறுப்பேற்றவர். பின்பு அந்த அதிகார பொறுப்பை விட்டு விட்டு நல்ல கருத்துக்களான தனி மனித அறவொழுக்கத்தையும், அற நெறியின் அடிப்படையில் அரசாங்கம் இயங்கவேண்டும் என்றும் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

அவர் உயிரோடு வாழ்ந்த போது அக்காலத்திலிருந்த ஆட்சியாளர்கள் அவருடைய திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவர் மரித்த பின்பு தான் அவருடைய வார்த்தைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொண்டனர். குறிப்பாக சீன அரசின் தத்துவமாகவே மாறிப்போய் விட்டது என்றே கூறலாம். ஹான் வம்ச காலத்தில் அரசாங்க அலுவலர்களை அரசு பணிக்குத் தேர்வு செய்யும் போது கூட இவரின் நூல்களில் இருந்து தான் அறிவை சோதித்துப்பார்த்தனர்.

சீன மக்களின் பெரும்பாலானோரின் லட்சியமாகவே மாறும் அளவிற்கு பெரும் தாக்கத்தை உருவாக்கிய அந்த மனிதர் வேறு யாருமில்லை கான்பூசியஸ் தான். இயேசு கிறிஸ்து கூறிய “பிறர் உனக்கு எதைச் செய்ய வேண்டாம் என விரும்புகிறாயோ, அதை பிறருக்கு செய்யாதே” என்ற கருத்தை கான்பூசியஸ்ம் முக்கியத்துவப்படுத்தினார்.

குடும்ப வாழ்வின் மாமனார், மாமியார், பெற்றோர் வயதாகும் போது பிள்ளைகள், மருமக்கள், பேரக்குழநதைகள் அலட்சியமாக அவர்கள் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளாமல் நடத்தி விடுகின்றனர். ஆனால் நாம் எதைச் செய்கிறோமோ அது தான் நமக்கும் செய்யப்படும் என்பதை மறந்து விடாதிருங்கள். என் மகன், என் மகள் என்னை நன்றாக பார்த்துக் கொள்வான்/ள் என்று நீங்கள் அவர்கள் உள்ளத்தில் ஊட்டி வளர்க்கலாம். நீங்கள் அவர்களிடம் பேசி வளர்ப்பதைக் காட்டிலும், உங்கள் செயல்களே அவர்கள் வாழ்க்கையில் தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. நீங்கள் மற்றவர்கள் எதை உங்களுக்குச் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ அதையேச் செய்யுங்கள். 

உங்கள் கணவன்/மனைவி உங்களை மதிக்க வேண்டும் என்று எண்ணினால் முதலில் நீங்கள் உங்கள் துணையை மதியுங்கள். நீங்கள் கொடுக்கிற மதிப்பிலேயே அவர்களும் உங்களை மதிக்கத் துவங்குவார்கள். மற்றவர்கள் உங்களை உயர்வாக மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களே தவிர நீங்கள் பிறரை மதிக்க என்னச் செய்ய வேண்டும் என்று சிந்திப்பதில்லை.

நீங்கள் புலம்பிக்கொண்டே இருக்கிறீர்கள்! என்னை ஒருவரும் மதிப்பதில்லை, என்னை இந்த வீட்டில் யாரும் கண்டுக் கொள்வது இல்லை என்று புலம்பாதிருங்கள். நீங்கள் பிறரை மதிப்பாய் நடத்திப் பாருங்கள் அவர்களும் மாற ஆரம்பித்துவிடுவார்கள்.   மாற்றங்கள் உங்களிடத்தில் இருந்து இன்றே துவங்கட்டும். 

நாம் உலகத்தை, கணவனை, மனைவியை, பிள்ளைகளை மாற்ற முயற்சிக்கும் முன் நாம் நம்மை மாற்றிக் கொள்ளுவோம்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்