தலையை தாழ்த்தலாமா?
புத்தமதத்தை தழுவிக் கொண்ட பின் அசோகர் வாழ்வு முற்றிலும் மாறிப்போனது. குறிப்பாக புத்த துறவிகள் யார் வந்தாலும் தலைதாழ்த்தி வணக்கத்தை, மரியாதையை செலுத்துவார். இதைக்கண்ட யஹஸ் என்ற மந்திரிக்கு இது பிடிக்கவில்லை. எனவே பேரரசர் இவ்வாறு தலை வணங்குவது நல்லதல்ல என்று ஒருமுறை அவரிடமே கூறிவிட்டார்.
இவ்வாறு இருக்கும்போது ஒருநாள் பேரரசர் அசோகர் தன்னுடைய மந்திரிசபையில் உள்ள எல்லா மந்திரிகளையும் பார்த்து “நீங்கள் எல்லாரும் நாளை வரும் போது ஒரு உயிரினத்தின் தலையை கொண்டு வர வேண்டும் என்று கூறினார். அந்தப் பட்டியலில் யஹஸ் மந்திரிக்கு மனித தலை கொண்டு வரவேண்டும் என்றார்.”
எல்லாரும் அப்படியே கொண்டுவந்தனர். அவர்களை பார்த்து அரசன் அப்படியே கொண்டு போய் சந்தையில் விற்று விட்டு வாருங்கள் என்றார். எல்லாரும் விற்று விட்டு பேரரசரிடம் வந்தார்கள். ஆனால் யஹஸ் கொண்டு போன மனித தலையை யாரும் வாங்கவில்லை என்ற செய்தியை அரசருக்கு அனுப்பினார். உடனே அரசர் அதனை விலைக்கு விற்காவிட்டாலும் பரவாயில்லை, சும்மா இனாமாக கொடுத்து விட்டு வாருங்கள் என்று மீண்டும் செய்தி அனுப்பினார்.
இரவு ஆன பின்பும் யாரும் வாங்கி செல்லவில்லை. அரசர் அவரிடம் இது ஏன் என்றார்.
“அருவருப்பாக இருப்பதால் யாரும் வாங்க மாட்டேன் என்கிறார்கள்” என்றார் யஹஸ்.
இப்பொழுது அசோகர் சொன்னார் இந்த அருவருப்பான யாரும் ஏற்காத தலையை தான் நானும் வைத்துள்ளேன். இதனை மேன்மையாக கருதி மேட்டிமையாக நான் நடந்து என்ன பயன் என்றார்?
திருமறையும் இந்த வாழ்க்கையை பற்றிக் கூறும்போது, “மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.” [பிரசங்கி 3:12,19] என்று கூறுகிறது. வாழ்க்கையில் பெருமையுடன் பிறரைக் மதியாமல் வாழ்ந்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதிருங்கள். எல்லாருடன் உயிரோடிருக்கும் கொஞ்ச நாட்களில், வருடங்களில் பழகி அன்பை வழங்கி, மகிழ்ச்சியோடு இருங்கள். அப்பொழுது தேவசமாதானம் உங்கள் இருதயத்தை நிரப்பும்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment