டென்சன் டென்சன்...

சிந்துவும் அவளுடைய அம்மா சாலினியும் காலையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் போது Birthday Visitக்காக வீட்டிற்குள் நுழைந்துவிட்டோம். பார்த்த அவர்கள் ஐயா, நாங்க அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டிருக்கிறோம். மாலை வரமுடியுமா? என்றார்கள். Ok என்று கிளம்பும் போது நீங்கள் என் மகளுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். அவள் இன்று Exam எழுதப் போகிறாள். எனக்கு ஒரே டென்சனாக இருக்கிறது. அவளை நினைத்து நினைத்து எனக்கே எல்லா நோயும் வந்துவிடும் போல் இருக்கிறது என்று பதறிக் கொண்டே மகளுக்கு தலையை வாரிக் கொண்டு இருந்தார்கள். ஐயா எனக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். இவள் எழுதப்போகிற Exam யை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு பட படவென்று எனக்கு அடிக்கிறது என்று பதறிக் கொண்டே எங்களை வழி அனுப்பினார்கள். 

எனக்கு ஒரு சந்தேகம் மகள் 2nd Std தானே படிக்கிறாள். அப்படி இருக்கும் போது இவர்களுக்கு ஏன் இத்தனை டென்சன் என்று நினைத்தவாறு இடத்தை காலி செய்தேன். வீட்டிற்கு வந்த போது இப்படிப்பட்ட வீணான டென்சனை குறைக்க என்ன வழி இருக்கிறது என்று மெதுவாக பார்த்த போது ஒரு பெண்மணி தன் வீட்டில் உள்ள மரத்தைப் பிடித்துக் கொண்டும், செடிகளைப் பார்த்துக் கொண்டும் பேசுகிறதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். இது டென்சனை குறைக்கும் வழியா அல்லது நட்டு எதுவும் கழன்றுவிட்டதின் அர்த்தமா என்று யோசித்த போதுதான் உண்மை புலப்பட்டது.

புகை மண்டலத்திற்குள் வாழ்ந்துக் கொண்டிருக்கிற கம்பியூட்டர் மனிதனுக்கு வீட்டில் உள்ள சிறு மரங்கள் அருகில் நின்று ஆக்சிஜனைப் பெற்று கொள்வது அவசியம். அதனோடு உங்கள் காரியங்களைக்குறித்துப் பேசி கொண்டோ அல்லது சின்ன ஜெபம் மனதிற்குள் செய்து கொண்டோ வந்தால் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுவிடும் என்பது உண்மைதான். அவ்வப்போது மரங்கள் உள்ள பகுதிகளுக்குச் சென்று சிறிது நேரத்தை செலவிட்டால் உள்ளத்தை யாரோ ஒருவர் வருடி விட்டது போன்ற உணர்வு நமக்கு மேலோங்கும், டென்சன் Switch off செய்யப்பட்டு விடும். 

கொரானா கால சூழலால் Computer முன்னே விழுந்து கிடக்கும் இன்றைய தலை முறை வீட்டிற்குள்ளேயே மரங்களை வளர்க்க முற்படுங்கள். Computer யையே பார்த்து பார்த்து கண்ணுக்கும் Pressure உள்ளத்துக்கும் Pressure. இது ஜாஸ்தியாகாமல் இருக்க அவ்வப்போது வீட்டிற்குள்ளே உள்ள சிறு செடிகளை பார்த்து டென்சனை குறைக்க முற்படுங்கள். வீட்டிற்குள்ளே 'Indoor Plants' களை வளர்த்து டென்சனுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்படலாம்.

ஆலயங்களுக்குச் செல்வது, இறைப்பணிகளில், சேவைப் பணிகளில், பண்டிகைகளில், ஆலய பாடகர் வரிசையில் பாடல்களைப் பாடுவது எல்லாமே No tension வழிமுறைகள் தான். குறிப்பாக உபவாசக்கூடுகைகளில் பங்கு கொண்டு உடலையும் இறைவனின் ஆலயமாக கருதி செயல்படுவதும் கூட மனதினை இனிமையாக மாற்றக் கூடிய செயல்கள் தான். 

சிலர் 24x7 என்ற முறையில் தொழில்களைச் செய்து வருகிறார்கள். எங்களுக்கு மூச்சு விடவே நேரமில்லை என்று ஓடிக் கொண்டே இருக்கிறீர்களா? நிச்சயமாக டென்சன் ஒவராகி தூக்கத்தையே நீங்கள் இழக்க நேரிடும். உங்கள் மூளை எப்பொழுதும் பணம், பணம் என்றும், தொழில், தொழில் என்றும் அடித்துக் கொண்டே இருப்பதால் relax என்றால் என்ன என்பதே தெரியாமல் போய் விடுகிறது. குறிப்பாக தினமும் 15 நிமிடமாவது, "Relax Please". இதை நமது உடற்பயிற்சியோ, dietடோ நமக்கு தரமுடியாது.

இந்தியாவில் ஆண்டு தோறும் மூன்று கோடி மக்களுக்கு மாரடைப்பு வருகிறதாம். இதில் 1 கோடி மக்களின் வயது முப்பது முதல் நாற்பது தான். இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தத்தினால் ஏற்படும் தாக்கம். இவர்களை 'A' வகை பெர்சனாலிட்டி கொண்டவர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

இந்த வகை இளைஞர்கள் எப்பொழுதுமே என்ன நினைப்பார்களென்றால் என்னால் தான் உலகமே இயங்குகிறது. நான் இல்லையென்றால் கம்பெனி இல்லை, தொழில் இல்லை, எல்லாம் நின்று விடும் என்று நினைத்துக் கொண்டு உலகத்தை தலைமேல் வைத்து சுமப்பார்கள். எனவே சாப்பிட நேரமில்லை, உடற்பயிற்சி செய்ய நேரமில்லை, நண்பர்கள், உறவினர்களோடு செலவிட நேரமில்லை, joke அடிக்க நேரமில்லை, joke அடிப்பவர்களின் joke யைக் கேட்டு ரசிக்க நேரமில்லை. 

எப்பொழுதும் சீரியஸ், எல்லாவற்றிலும் சீரியஸ். வீடு எப்பொழுதும் மயான அமைதியாகவே இருக்கும். அவர்களோடு இருப்பவர்களும் அந்த டென்ஷனோடு வாழ வேண்டிய சூழலுக்குள்ளாகி விடுவார்கள்.

எப்பொழுதும் டென்சனே வாழ்க்கையாக மாறும் போது கார்டினல், அட்ரீனலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து இரத்தத்தோடு கலந்து விடுகிறது. இதன் விளைவால் இரத்த குழாய்கள் சுருங்கி இரத்த அழுத்தத்தை அதிகரித்து விடுகிறது. விளைவு மாரடைப்பு. Don’t get tensed. கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு வாசியுங்கள், Relax Please.

ஈசாக்கு 4000 வருடத்திற்கு முன்பாகவே ரிலாக்ஸ் பண்ணவும், சாயங்காலத்தில் தியானம் பண்ணவும் அப்படியே வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பியதை பார்க்க முடிகிறது.   'ஈசாக்கு சாயங்கால வேளையிலே தியானம் பண்ண வெளியிலே போயிருந்தான்.' (ஆதியாகமம் 24:63). இயேசுவானவர் கூட திரளான மக்கள் கூட்டம் தன்னை நெருக்கி காலை வேளையில் வந்தாலும் இரவு வேளைகளில் தனியாக ஜெபிப்பதற்கு சென்று விட்டார். சில வேளைகளில் சீடர்களைக் கூட தம்மிடமிருந்து அனுப்பிவிட்டு தனிமையாக ஜெபித்தார். இவைகளெல்லாம் நமக்கு கற்றுத்தரும் பாடமென்ன என்பதை சிந்தித்துப்பாருங்கள். காட்டு புஷ்பங்களை கவனித்துப் பாருங்கள் என்று இயேசுவானவர் மக்களை உற்றுப் பார்க்க அழைக்கிறார் என்றால் தனிமையாக ரிலாக்சாக இவைகளின் செயல்பாடுகளை இயேசுவானவர் உற்று கவனித்துள்ளார். நாமும் இயேசுவைப் போல அவ்வப்போது வேலைப் பளுவை ஓரங்கட்டி விட்டு ஜெபிப்பதற்கு, relax ஆக இருப்பதற்கு  மரங்கள் உள்ள பகுதிகளை தேர்வு செய்துக் கொண்டு வாழ பழகிக் கொள்வோம். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்