எண்டார்பின்ஸ்
இதைப் பார்த்துக்கொண்டிருந்த போது மும்பையில் சொகுசுக் கப்பலில் போதை விருந்து நடத்தப்பட்டதில் ஒரு நடிகரின் மகன் பிரதானமாக செயல்பட்டு மாட்டிக் கொண்டது நினைவுக்கு வந்தது.
கார்டிலியா என்ற சொகுசு கப்பலில் நவராத்திரியன்று சிறப்பு பயணம் செய்வதற்காக பெரும் பணக்காரர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் துறையை சார்ந்தவர்கள் பதிவு செய்திருந்தனர். மும்பை துறைமுகத்திலிருந்து கப்பல் கிளம்பியவுடன் உற்சாகம் மேலோங்க ஆரம்பித்தது. நடனம், ஆட்டம் என்று கப்பலையே அமர்க்களம் செய்ய ஆரம்பித்தனர். போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ரகசியமாக இருந்ததை உணராமல் போதையில் ஆடியபோது பிடிபட்டனர். நடிகரின் மகனிடம் மட்டுமே கோகைன் 13 கிராம், எம்டி 5 கிராம், கஞ்சா 21 கிராம், எம்டி எம் ஏ போதை மாத்திரைகள் என பறிமுதல் செய்யப்பட்டது.
ஏன் இப்படி இளைஞர்கள் செய்கிறார்கள்? நம்முடைய மூளையில் உள்ள எண்டார்பின்ஸ் மற்றும் இதர இன்ப ரசாயனங்கள் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. பொதுவாக உடற்பயிற்சியின் போது கூட அது சுரந்து மகிழ்ச்சியை தரும். ஆனால் இந்த இன்ப ரசாயனங்கள் குறைவாக சுரக்கும் போது போதை பொருட்கள் அல்லது மதுவை குடித்து மகிழ்ச்சியாக இருக்க சிலர் நினைக்கின்றனர். ஆனால் இவர்கள் நாளடைவில் இவைகளை எடுத்துக் கொண்டால் தான் மகிழ்ச்சி என்று நினைத்து அடிமைகளாக மாறிவிடுகின்றனர்.
பிரபலங்களோடு பழகுவதற்கு இவைகளை எடுத்துக் கொண்டால்தான் நாம் சமமாக மதிக்கப்படுவோம் என்று எண்ணுகின்றனர். Teen ageல் உள்ளவர்கள் பெரியவர்களோடு பழகும் போது நானும் பெரியவன் தான் என்று காட்டிக்கொள்ள குடிக்க ஆரம்பிக்கின்றனர். குறிப்பாக தேர்தல் போன்ற நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர்.
குறிப்பாக பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகள் குடித்தால் வீட்டிற்குள்ளேயே குடித்து விட்டு அமைதியாக இருக்க வேண்டும் என்று அடக்கி வைக்கின்றனர் அல்லது அனுமதி கொடுக்கின்றனர். இவ்வாறு வீட்டிற்குள்ளேயே குடித்து பழகுபவர்கள் நாளடைவில் வெளியிடங்களிலும் வாய்ப்பு கிடைக்கிற இடங்களிலும் குடிக்கின்றனர். பின்னர் இவர்களை கட்டுப்படுத்த முடியாது. குடிக்கிறவர்கள் நாளடைவில் போதைப் பொருள்களையும் பயன்படுத்த முடிவெடுக்கிறவர்களாக மாறுகின்றனர். தன் விஷயத்தில் தலையிட பெற்றோருக்கு எந்த விதத்திலும் உரிமை இல்லை என்று சொல்லிக்கொள்கிற பிள்ளைகள் குடி போதைக்கு அடிமையாக நான்கு மடங்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள்.
உங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் குடிகாரர்களாக, போதைக்கு அடிமையானவர்களாக இருக்க வேண்டாம் என்று எண்ணினால் ஓய்வு நாள் பாடசாலை, பாடகர் வரிசை, வாலிபர் கூடுகை, ஆலயத்தை சுத்தம் செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபட அனுமதி கொடுங்கள். அப்பொழுது பிள்ளைகள் நல்ல தகவல் பரிமாற்றத்துடனும், குடியை குறித்த எதிர்மறை எண்ணத்துடனும், குடியை வெட்கக்கேடான செயல் என்று எண்ணும் எண்ணமும் வளர்ந்து விடும். நல்ல வாலிப தலைவர்கள் கண்காணிப்பில் வளரும் இளம் தலைமுறை முற்றிலும் போதைகளை தவிர்க்கிறவர்களாகவே வளர்த்தெடுக்கப்படுகிறார்கள்.
நீதிமொழிகள் 31 ஆம் அதிகாரத்தில் லேமுவேலுக்கு அவன் தாய் மதுபானம் ராஜாவுக்கு அழகல்ல என்று கூறுகிறாளே, அதனை உடனடியாக அவன் கேட்டு நடந்திருப்பான் என்று நினைக்கிறீர்களா? ஏன் 80% பிள்ளைகள் மது பழக்கத்தை பற்றி பெற்றோர் என்ன சொல்கிறார்களோ அதன்படி தான் நடக்கிறார்கள் என்பது உண்மையான தகவல். அடேயப்பா எவ்வளவு நல்ல விஷயம் என்று நினைக்கிறீர்களா? ஆமாங்க, உண்மைதான். நான் குடிப்பதை என் பெற்றோர் கேள்விப்பட்டால் என்ன நினைப்பார்கள்! என்று பிள்ளைகள் இந்த விஷயத்தில் மட்டும் நல்ல பிள்ளைகளாய் இருக்கிறார்களாம்.
ஆரம்பிச்சிட்டீங்களா, உங்கள் பேரப்பிள்ளைகளுடன், பிள்ளைகளுடன் இப்பொழுதே குடிப்பழக்கத்தின் தீமைகளை பற்றி பேச ஆரம்பித்திடுங்க, முடிந்தால் பார்க்கிற இளைஞர்களிடம் எல்லாம் குடி,போதை பற்றிய தீமைகளையும், வாழ்வை அழித்துக் கொண்டவர்களின் முடிவை குறித்தும் கலந்துரையாடுங்கள். சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் முடிந்தவரை மதுவை தொடுமுன்னே காதில் போட்டு வையுங்கள்.
மதுக்கடைகளின் வருமானம் அதிகம் என்று 24 x 7 என்று கடைகளை திறக்கும் முன் நற்செய்தியை நன்று உரைப்போம்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment