இறுதி மூச்சு வரை போராடு


மனிதனின் வாழ்க்கை என்பது மனிதனுக்கு நம்பிக்கை இருக்கும் வரையில் தான். நம்பிக்கையை இழக்கும் போதே மனிதனின் பாதி உயிர் போய் விடுகிறது. மீதி உள்ள வாழ்க்கை நடைபிணமாகவே வாழ்கிறான்.

நெப்போலியனை எல்பா தீவில் சிறை வைத்தனர். ஆனால் அவன் தப்பி, வந்து புது படையை உருவாக்கினான். வெற்றி வாகைச் சூட வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரான்சுக்குள் நுழைந்தான். அவன் எதிர்பார்த்தது போல் பிரான்சு நாட்டு வீரர்கள் அவனை எதிர்கொண்டனர். இருப்பினும் நெப்போலியனின் துடுக்கான பேச்சு, வீரமிக்க சிங்க நடை, பிரான்சு நாட்டு படை வீரர்களுக்கு அதிர்ச்சியையும், மிரட்சியையும் கொடுத்தது. நெப்போலியன் கெம்பீரமாக நின்று படை வீரர்களைப் பார்த்து எப்படி கெர்ஜித்தான் என்றால் “என்னை சுடவேண்டுமானால், சுட்டுத் தள்ளுங்கள். ஆனால் நீங்கள் சுடப்போவது உங்களது மன்னன், உங்களது மாவீரன் என்பதை மறந்து விடாதிருங்கள்” என்று நெஞ்சை நிமிர்த்தியவாறு நின்றான். அந்த நெருப்பை கக்கும் பேச்சினிலே அத்தனை படைவீரர்களும் நெப்போலியனோடு இணைந்தனர். ஆட்சி நெப்போலியன் கையில் வந்து விழுந்தது.

ஆனால் அதே நெப்போலியன் செயின்ட் ஹெலனாத் தீவில் அடைக்கப்பட்ட போது (Saint Helena) (அக்டோபர் 1815) இங்கிலாந்து தேசம் அவரை ஒரு கைதி என்பதை எப்பொழுதும் நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தது. கட்டுப்பாடுகளுக்குள்  மாட்டிக்கொண்ட நெப்போலியன்  நம்பிக்கையை இழந்தான். அதன் பின்பு தப்பிச் செல்லக் கூடிய வழிமுறைகள் அவனுக்குக்  கிடைத்தாலும் மனநொடிவினால் முயற்சியை இழந்தான். “மனதின் சக்தி வாளின் சக்தி என்ற இரு சக்திகள் உலகை ஆளுகின்றன. காலப்போக்கில் மனதின் கூர்மைக்கு முன் வாளின் கூர் மழுங்கிப் போய் விடுகிறது” என்றார் நெப்போலியன்.

உயிர்த்தெழுந்த இயேசுவானவரும் தனது சீடர்களைப் பார்க்கும் போதெல்லாம் பயப்படாதிருங்கள், பயப்படாதிருங்கள் என்று ஊக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தார். மூன்றரை ஆண்டுகள் தன்னோடு இருந்த சீடர்கள் தன் குரு இல்லாமல் பணிச் செய்து பழக்கம் இல்லாமல் தவித்த போது மீண்டும் மீண்டும் வந்து ஊக்கப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவரின் பெலனைப் பெற்று ஊக்கத்துடன் பணியாற்ற ஊக்குவிக்கிறார். அதன் பின்பே உத்வேகம் பெற்று சீடர்கள் உலகமெங்கும் அருட் பணியாற்ற விளைகின்றனர்.

குடும்ப வாழ்விலும் ஏற்படுகிற பிரச்சனைகளைக் கண்டு சமாளிக்க முடியாமல் சிலர் தற்கொலை செய்துக்  கொள்ளுகின்றனர். இக்கட்டுரையை எழுதும் போது மருத்துவர் ஒருவர் இளம்வயதிலேயே தற்கொலைச் செய்துக் கொண்ட நிகழ்வு என் மனதைக் கலங்க வைத்து விட்டது. நம்பிக்கையை எப்பொழுது இழக்கிறோமோ அப்பொழுது பிரச்சனைகள் நம்மை கீழே தள்ளிவிட்டு நம்மை ஆளுகைச் செய்து விடுகிறது, நாமும் சோகமே உருவானவர்களாக மாறி விடுகிறோம். அதற்கு பதிலாக பிரச்சனையை ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என்று தீர்க்கமாக நீங்கள் இறங்கும் போது இறைவனின் அருளால் பிரச்சனையை மேற்கொண்டு விடலாம். 

இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களோடிருப்பேன் என்றும், வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டியிருக்கிறது என்ற உயிர்த்த இயேசு உங்கள் பிரச்சனைகளை மேற்கொள்ள உங்களுக்கு உதவிட ஆயத்தமாயிருக்கிறார், பயப்படாதேயுங்கள்! போராடுங்கள்!! வெற்றி நிச்சயம் !!!

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி