இன்னும் கொஞ்சம்
பலவேளைகளில் நமது துணையின் அருமையை நாம் உடனே உணருவதில்லை. இவனை/ளை விட ஒரு நல்ல துணையை நாம் தேர்ந்தெடுத்தால் என்ன? என்று இருக்கிற கணவனை/மனைவியை வேண்டாம் என்று divorce பண்ணி விடுகிறோம். அவர்களை இழந்த பின்பு தான் அவர்களுடைய அருமையை நாம் உணருகிறோம். இவனை/ளைக் காட்டிலும் முதலில் நாம் திருமணம் செய்த நபரே எவ்வளவு better என்று சிலர் உணருகின்றனர்.
சிலர் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளாமல் பிள்ளைகளுடன் வாழும் போது தான், சே சே .. எவ்வளவு அவசரப்பட்டு divorce வாங்கி விட்டோம். இப்படி நாம் வாழ்வதை விட கணவனோடு/மனைவியோடு வாழ்ந்திருந்தால் எவ்வ்ளவு நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணி வருத்தப்படுகின்றனர்.
ஒரு பெண் தன் கணவனோடு கஷ்டப்பட்டு வாழ்ந்துக் கொண்டிருந்தாள். தன் கணவனை பாரமாகவும், வேண்டா வெறுப்போடும் பார்த்து வந்தாள். தன் கணவன் இறந்துப் போனால் நல்ல ஒரு மனிதனை திருமணம் செய்து சந்தோஷமாய் வாழலாம் என்று எண்ணினாள். கடவுளிடம் வேண்டுதலும் செய்தாள். ஆண்டவரே என் கணவன் நல்லவனாக வாழ உதவிச் செய்யும். இல்லையென்றால் இவரை எடுத்துக் கொள்ளும், வேறு ஒரு கணவனை தாரும் என்று மன்றாடினாள்.
கடவுளும் அவள் ஜெபத்தைக் கேட்டார். கணவன் சாகும் நிலையில் படுத்த படுக்கையானான். அவர்களுடைய உறவினர்கள் எல்லாம் வந்து பார்த்தார்கள். அவனுடைய நல்ல குணங்களையும், தன் மனைவியை எவ்வளவாய் உயர்த்தி தங்களிடம் பேசினான் என்பதையும் எடுத்து உயர்வாய் பேசினார்கள். இவனுக்கு இப்படி ஒரு நோய் வந்துவிட்டதே என்று வருந்தினார்கள்.
அவளுடைய உறவினர்களும், இவள் கணவன் இறந்து போனால் நம்மிடம் ஏதாவது help கேட்பாளோ என்று மறைந்துக் கொண்டனர்.
முன் வேலைக்கு அவள் புறப்படும் போதெல்லாம் அவன் உதவிச் செய்தான். இப்பொழுது தன்னந்தனி ஆளாக கஷ்டப்பட்டதை உணர்ந்து பார்க்கும் போது இந்த கணவன் இருந்தால் நல்லது போன்று தோன்றியது.
மீண்டும் கடவுளிடம் மன்றாடி, ஆண்டவரே என் கணவரை எனக்கு தந்துவிடும், தவறாக விண்ணப்பம் பண்ணிவிட்டேன் என்று கெஞ்சினாள். கடவுள் அவள் மன்றாட்டுக்கு பதிலாக மீண்டும் கணவனுக்கு சுகம் கொடுத்தார்.
ஆண்டவரே நான் மகிழ்ச்சியோடு வாழ்வது எப்படி, திருப்தியோடு வாழ்வது எப்படி என்பதைப் புரிந்துக் கொண்டேன். இனி இப்படிப்பட்ட தவறான விண்ணப்பங்களை ஏறெடுக்க மாட்டேன் என்று ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டாள்.
உண்மையான அன்பு என்பது என்ன? என்பதை புரிந்துக் கொள்ளாமல் பிறரைப் பார்க்கும் போது நம்முடைய கணவன்/மனைவி இப்படி இல்லையே என்று வருத்தப்படக்கூடாது. பிறருடைய வாழ்க்கையில் ஒரு முகத்தை தான் நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் அவர்களிடம் ஒளிந்துள்ள கோர முகத்தை அவரவர் மனைவி/கணவன்/பிள்ளைகள் மட்டுமே அறிந்திருப்பர்.
“சூரியனுக்குக் கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவ வாழ்வை அனுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக் கீழே படுகிற பிரயாசத்திலும் பங்கு இதுவே" (பிரசங்கி 9:9) என்று திருமறை கூறுகிறது. அழகுள்ளவர்கள் கிடைத்தால் சந்தோஷம் என்று நினைக்கலாம். ஆனால் குணமில்லாத அழகுள்ள பெண், பன்றியின் மூக்கிலுள்ள மூக்குத்திக்கு சமானமானவர்கள் என்று திருமறை நம்மை யோசித்து, முடிவெடுக்க அழைக்கிறது.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment