செருப்பு தைக்கலாமா?
அதற்கு பேராயர் அவர்கள், "இப்பொழுது இரவு யாரும் வருவதற்கு வாய்ப்பில்லை, நாளைக்குத் தானே உங்களுக்குத் தேவை, பார்த்துக்கொள்ளுவோம். இப்பொழுது நீங்கள் படுக்கைக்குப் போங்கள்" என்று அனுப்பி வைத்தார்கள்.
காலையில் வேகமாக புறப்பட்டார்கள் திரு. சவரிராயன் அவர்கள். வெளியே வரும் போது தான் தன்னுடைய செருப்பு அறுந்துப் போய் இருந்ததே என்று யோசித்துக் கொண்டு வெளியே வந்தார்கள்.
ஆச்சரியம் காத்திருந்தது. அவருடைய செருப்பு நன்றாக தைக்கப்பட்டிருந்தது. அதனை அணிந்துக் கொண்டு கீழே பேராயர் அவர்களிடம், "ஐயா யாரைக் கொண்டு தைத்தீர்கள்" என்றார் சவரிராயன் அவர்கள்.
அதற்கு பேராயர் சிரித்துக்கொண்டே, "வேறு யாரும் அல்ல நான் தான் தைத்தேன்". ஒரு முறை இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு கப்பலில் பயணித்தபோது தோல் பை தைக்கும் சிலர் எனக்கு நண்பர்களானார்கள். அவர்களிடம் கற்றுக்கொண்டது இப்பொழுது அவசரத்திற்கு உதவியுள்ளது" என்று கூறி பிரமிக்கவைத்தார்கள்.
இன்று நம் பிள்ளைகள் தாழ்மையுடன் எந்த பணியையும் செய்யும் மனம் இல்லாதவர்களாய் வளர்ந்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு வேலையும் இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடந்தாலும் கர்வத்தோடு வாழ பழகி வருகிறார்கள். "தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறவர் கர்த்தர்" (நீதிமொழிகள் 3:24). மேன்மைப்பட வேண்டுமானால் தாழ்மையாய் நடக்க பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்.
எந்த வேலைச் செய்தாலும் உண்மையாய், மனநிறைவோடு செய்ய கற்றுக்கொடுங்கள். அலட்சியமாக பணிகள் செய்வதும், இந்த சம்பளத்திற்கெல்லாம் இப்படி கஷ்டப்பட வேண்டுமா என்று வேண்டா வெறுப்போடு பணிச் செய்வதை நிறுத்துங்கள். எவ்வளவு உயர்ந்தாலும் தாழ்மையாய் நடந்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.
ஆண்டவர் இயேசு, போதகராக இருந்தாலும் சீடர்களின் கால்களைக் கழுவி தாழ்மையை நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். அவரின் வழியை பின்பற்றுகிறவர்கள் அவரைப் போல தாழ்மையுடன் வாழ முயற்சிச் செய்யுங்கள்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment