எது சுதந்திர தினம்


பெண் சிநேகிதிகள் இருவர் திடீரென்று ஒரு உணவு விடுதியில் சந்தித்துக்கொண்டனர். பல நாட்களுக்கு பின்பு ஒருவரை ஒருவர் சந்தித்தப் போது மிகுந்த சந்தோஷப்பட்டனர். இருவருடைய உடையிலேயும் தேசியக் கொடி இருந்தது. அன்று ஆகஸ்ட் 15, உடனே சுதந்திர தின வாழ்த்துக்கள் என்றாள் ஒரு சிநேகிதி. மற்றவள் கூறினாள், "எனக்கு உண்மையான சுதந்திரம் நாளைக்குத்தான்"  என்றாள்.

'என்னடிச் சொல்லுகிறாய்', என்றாள் சினேகிதி. 'ஆமாண்டி என் அத்தை எங்களை விட்டு போன நாள், ஆகஸ்ட்  16.   அதுதான் எனக்கு உண்மையான சுதந்திர தின நாள்" என்றாள்.

ஆமா உனக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துவிட்டதா என்றாள் அடுத்தவள்.

இவ்வாறு மாமியார் மருமகள் பல இருக்க சில உறவுகள் இனிமையானதாகவும் இருக்கத்தான் செய்கிறது.

இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருக்கும் போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்  பயணத்தை மேற்கொண்டார். அந்த வழியாக வரும்போது தன் மகனையும் பார்த்து விட்டு சென்று விடலாம் என்று ராஜீவ் காந்தியைப் பார்க்கச் சென்றார். அந்த சமயத்தில் எதிர்பாராத ஒன்றை கேட்க ராஜீவ் திகைத்தார்.

இந்திரா காந்தி அவர்கள் தன் மகனைப் பார்த்து "நாளைய தினம் என் மருமகளைப் பார்க்க வேண்டும்.   அழைத்து வா!" என்றார்கள். ஒரு கனம் அதிர்ந்துப் போனார் ராஜீவ் இது எப்படி தெரியும் என்று! 

இந்திரா அம்மையார் புன்முறுவலோடு தன் மகனைப்பார்த்து "நீ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நீ என்னச் செய்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்குத் தெரியாதா" என்றார்.

தான் திருமணமாகப் போகும் பெண்ணோடு  மறுநாள் ஆஜரானார் ராஜீவ். அப்பொழுது சோனியாவின் உடையிலே ஒரு இடத்தில் தையல் பிரிந்திருந்தது. அதைப் பார்த்து இந்திரா காந்தி அவர்கள் ஒரு ஊசி நூலால் தன் கையினால் தைத்துவிட்டார்கள். இதில் சோனியா அவர்கள்  நெகிழ்ந்து விட்டார்கள். உடனே சோனியா, இந்திரா காந்தி அம்மையாரைப் பார்த்து, "நான் உங்களை அம்மா என்று அழைக்கலாமா?" என்றார்.

இதை சற்றும் எதிர்பாராத இந்திரா காந்தி அவர்கள் சோனியாவைப் பார்த்து, "எனக்கு பெண் பிள்ளை இல்லையே என்று நினைத்தேன். நீ எனக்கு மருமகளாக வந்தாலும் எனக்கு நீ மகள் தான்" என்று அணைத்துத்துக் கொண்டார்கள்!

திருமறையில் ஈசாக்கு தன் மகனாகிய யாக்கோபை பெத்துவேல் வீட்டில் போய் அங்கே திருமணம் பண்ணும் படி ஆலோசனைச் சொல்லுகிறான். அதேப் போல் "கானானியருடைய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினால்" ஆபிரகாமின் குமாரனாகிய இஸ்மவேலின் மகளை திருமணம் செய்கிறான் (ஆதியாகமம் 28 :8,9).   காரணம் குடும்பத்திற்கு வருகிற பெண் குடும்பத்தை கட்டி எழுப்ப வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

நான் என் இஷ்டபடி திருமணம் செய்வேன் என்று பிள்ளைகள் கூறலாம். ஆனால் திருமணம் என்ற உறவானது முழு குடும்பத்திலும் ஒரு வளர்ச்சியை, தாக்கத்தை உருவாக்கக் கூடியது. குடும்ப பின்ணனி என்பதை பார்க்கலாமா? அதுவெல்லாம் அவசியமில்லை என்று இளைஞர்கள்/இளம்பெண்கள்  நினைக்கலாம். அழகாக இருக்கிறாளா/னா? சம்பாதிக்கிறாளா/னா ? குடும்பத்தை நடத்துவாளா/னா? அதுபோதும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அதைத் தாண்டி குடும்பத்தோடு ஒத்துப்போகும் நிலை,   எல்லாரையும் ஒன்றினைத்துக் கட்டி எழுப்புதல் என்பது மிகவும் அவசியம்.

திருமணமானவுடன் மாமியார், மாமனார் வனவாசம் போய் விட வேண்டும் என்று  யாரும் நினைக்கக் கூடாது. இசைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அது தான் உண்மையான சுதந்திரம்.  

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்