என்கவுண்டர்


சிக்காகோ நகரில் ஒரு நாள் மாலை வேளையில் ஒரு வாலிபன் என்கவுண்டர் செய்யப்பட்டான். அவன் உடலை குண்டுகள் சல்லடையாக துளைத்து எடுத்தது. அதை ஒரு நாளேடு பிரசுரித்துவிட்டு கீழே ஒரு வாசகத்தை குறிப்பிட்டிருந்தது. “யாருக்கு தெரியும், இந்த கால்கள் சரியான வழியில் நடத்தப்பட்டிருந்தால், சரியான இடத்தில் அவைகள் சென்றிருக்கும்.”

அந்த இளைஞன் பெயர் ஜான் டிலிங்கர். இவன் சிறுவயதாக இருக்கும் போது ஓய்வு நாள் பள்ளிக்கு வந்தான். ஆனால் அவன் செய்த சேட்டையை ஆசிரியர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இவனை எப்படியாவது வெளியே தள்ளினால் தான் நமக்கு நிம்மதி என்று அவனை வெளியே இழுத்து வந்து, “உன் காலடிகள் இனி இங்கே வரக்கூடாது” என்று கண்டிப்பாகக் கூறி அனுப்பிவிட்டனர். அப்பாடா நம்ம வேலையை இனி நிம்மதியாக செய்யலாம் என்று ஓய்வு நாள் பாடசாலை ஆசிரியர்கள் நினைத்தனர். ஆனால் அவன் இளைஞனான போதோ அவன் வாழ்க்கை முடிந்துவிட்டது.

இதைப் போன்று ஒரு சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த கொள்ளையன் முர்தசாவை காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர். அவன்  குண்டடிபட்டு கிடக்கிற சம்பவத்தை பார்க்கும்போது இளம் வயதிலேயே துப்பாக்கியைக் கொண்டு மிரட்டி கொள்ளையடித்து வாழ்ந்த முர்தசா வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட நன்மை என்ன? என்ற எண்ணம் மேலிட்டது.  ஒரு குடிசை வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பணத்தை பிடுங்கியும், நகையை பறிப்பதும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், வானத்தை நோக்கி சுட்டு மக்களை மிரட்டல் செய்யும் இந்த துணிகரம் எப்படி முர்தசாவிற்கு இளம்வயதில் வந்தது?

தொழில்நுட்பங்கள், அறிவியல், கம்ப்யூட்டரின் ஆக்கிரமிப்பு, செல்போனின் அளவுக்கு மிஞ்சிய நிலைமை எல்லாம் பெருகி வருகிற இக்காலத்தில் மனிதன் வாழ்வு பொருளற்றதாக மாறி வருகிறதா? பணம் வந்து விட்டால் வாழ்க்கை முழுவதும் சந்தோஷம் தானா? கஷ்டப்பட்டு சம்பாதித்தால் அது தவறா? கார் பைக், இல்லாமல் வாழ்ந்தால் அது வாழ்க்கை இல்லையா? நாம் இருக்கும் வரை எவ்வளவு சுகத்தை அனுபவிக்க முடியுமோ அவ்வளவு சுகத்தையும் அனுபவிப்போம் என்று எண்ணி யாரையும் கொன்றாவது, கொள்ளையடித்தாவது தன் pocket நிரம்ப வேண்டும். தன் குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்ற மனநிலை பெருகி வரும் போதுதான் இப்படிப்பட்ட துணிகரமான செயல்கள் அரங்கேறி வருகிறது.

வாழ்வின் அர்த்தத்தை பெற்றோரோ, சமுதாயமோ, சமய வாழ்வோ, கல்விச் சாலையோ, கற்றுத்தர வேண்டும். ஆனால் யாரும் இன்று நல் வாழ்க்கை முறையை கற்று தருவதில்லை. திருமறையில் “மாயை மாயை எல்லாம் மாயை” என்று பிரசங்கி கூறுவதால் வாழ்க்கையில் அர்த்தமே இல்லை என்று பொருள் அல்ல. மாறாக மாயையான இவ்வாழ்வில் “மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்”.என்று குறிப்பிடுகிறார்.(பிரசங்கி 3:12)

பிறருக்கு நன்மை செய்வதால் ஏற்படும் மகிழ்ச்சிக்கும், பிறருக்குத் தீமை செய்து, பிறருடையதை வன்முறையால் எடுத்துக் கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கும் வேறுபாடுகள் உள்ளது. தீமை செய்து பெறும் மகிழ்ச்சி என்பது எப்பொழுதும் ஆபத்தை கொடுக்கக் கூடியது. இதனை இளம் வயதிலேயே முர்தசா உணர்ந்து கொள்ளவில்லை. துப்பாக்கி இருப்பதால் எப்பொழுதும் வெற்றி என்று எண்ணி பிறரை பயமுறுத்தி, பணத்தை நகையை சேர்த்தான். ஆனால் அதை அனுபவிக்க இயலாது என்பதை மறந்து போனான். வாழ்வின் அர்த்தத்தை மறக்கும் போது வாழ்க்கை என்பது கரடுமுரடாக மாறிவிடுகிறது. ஆகவே சிறுவயதாக இருக்கும்போதே நல் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை கதைகள் மூலமோ வேறு பாடல்கள் வழியாகவோ இரத்த நாளங்களுக்குள் உங்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகளுக்கு அனுப்பிவிட மறந்துவிடாதிருங்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி