உண்மையான சக்தி


வாழ்க்கையில் மனிதனை நோய்கள் தாக்குகிறது, எதிர்பாராத விபத்துக்கள் வாழ்க்கையில் நடந்து விடுகிறது. இருப்பினும் அவைகளுக்கு மத்தியில் மனம் சோர்ந்து போய் விடாமல் இருந்தால் ஏதோ ஒரு விதத்தில் நம்முடைய செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக வெளிப்பட்டு விடும்.

பல்கேரியா நாட்டிற்கு 2003ம் வருடம்  Dr.அப்துல் கலாம் அவர்கள் சென்றார்கள். அப்பொழுது அந்நாட்டின் தேசிய கலைக்கூடத்திற்கு போன போது அவர் உள்ளத்தை ஓவியங்கள் கவர்ந்தன. அந்த ஓவியங்களெல்லாம் பல்கேரியா ஓவியர்களால் வரையப்பட்டவைகள். அதில் ஒரு ஓவியம் அவரை மிகவும் கவர்ந்தது. அது ஜிலாட்ஜீ போஜதீவ் என்ற ஓவியர் வரைந்தது.

இந்த போஜதீவ் எண்ணற்ற ஓவியங்களை தனது வலது கையால் வரைந்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருடைய வலது கை செயல் இழந்து விட்டது. ஆனால் பல்வேறு காட்சிகள் அவர் உள்ளத்தில் வந்து முட்டியது. எப்படி அவைகளை ஓவியங்களாக வரைவது என்ற எண்ணம் வந்த போது தனது இடது கையை உபயோகப்படுத்த ஆரம்பித்தார். அவைகள் மிகவும் அழகாகவும், உள்ளத்தை தொடுவதாக அமைந்தது. அப்பொழுது தான் Dr. அப்துல்கலாம் அவர்கள், "ஒரு மனிதனின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், உணர்வுகளையும் அவன் உடலில் ஏற்படும் குறைபாடுகள் ஒன்றும் தடுத்து நிறுத்த முடியாது. ஏனென்றால் உண்மையான சக்தி என்பது உள்ளத்திலிருந்து வருகிறது. வாழ்க்கையில் அவர்கள் எடுத்துக் கொண்ட தீர்மானத்தை தொடர்ந்து செயல்பட வைக்கிறது", என்று கூறினார்.       

வாழ்க்கையில் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக  இருந்தாலும், வறுமையாக இருந்தாலும் நம் வாழ்க்கையை மேம்படுத்துகிறவர் ஆண்டவர். நாமாக நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுச் செய்துக் கொள்கிறோம்.

பணக்காரர்களைப் பார்க்கும் போது நாம் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து குறைவுபட்டுக் கொள்ளுகிறோம். நம்மை விட பொருளாதாரத்தில் கீழானவர்களைப் பார்க்கும் போது நம்மை நாமே உயர்த்திக் கொள்ளுகிறோம்.

நன்றாக படித்தவர்களைப் பார்க்கும் போது நாம் ஒன்றும் தெரியாதவர்கள் போல மாறிவிடுகிறோம். நமக்கு கீழே படித்தவர்களைப் பார்க்கும் போது எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசுகிறோம்.

நமக்கென்று கடவுள் வகுத்த ஓட்டத்தை மறந்து விடுகிறோம். "நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்திலே பொறுமையோடு ஒடக் கடவோம்" என்று பவுலடியார் குறிப்பிடுகிறார்.

கடவுள் நமக்கு கொடுத்த திறமைகளை நாம் எந்த சூழ்நிலையிலும் வெளிப்படுத்த முயலுவோம். நம்மை அழைத்த ஆண்டவர் முற்று முடிய வழி நடத்த வல்லவராக இருக்கிறார். நம்முடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்காக கடவுள் சில சிட்சைகளைக் கொடுத்திருக்கிறார் என்று எடுத்துக் கொண்டு பலவீனங்களுக்கு மத்தியில் சோர்ந்து போகாமல் செயல்படுவோம்.    

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்