நாம் நாமாக இருப்போம்


நண்பர் ஒருவருடைய வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் எப்பொழுதும் விதவிதமான dress அணிந்து கொண்டு தான் வருவார். விதவிதமான கூலிங் கிளாசை பயன்படுத்துவார். அருகில் சென்றாலே மணம் கப கப என்று வீசும். காலில் விதவிதமான சப்பல்கள், கேன்வாஸ் ஷூ அணிந்து கலக்குவார். கார், பைக்கை எப்பொழுதும் மாற்றிக்கொண்டே இருப்பார். புது புது ரகங்களை வாங்கி பயன்படுத்துவார். இவையெல்லாம் எனக்கு பிரமிப்பாகவே இருக்கும். வாங்குற சம்பளத்தை அப்படியே செலவு செய்து விடுவாரோ? என்று எண்ணியவாறு வீட்டு விலாசத்தை கேட்டு வீட்டை அடைந்தேன்.

வீட்டின் வாசலில் ஒரு பெண் உங்களுக்கு யார் வேண்டும் என்று கேட்க sir பெயரைச் சொன்னதும் உள்ளே அழைத்துச் சென்றார். வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு திரைப்பட நடிகரின் படம், உள்ளே இன்னும் நுழைய பார்க்கும் இடமெல்லாம் விதவிதமான நடிகர்கள் photoவால் அலங்கரிங்கப்பட்டிருந்தது. இந்த படங்களில் எப்படி எல்லாம் heroக்கள் இருக்கிறார்களோ அப்படி எல்லாம் இவரும் மாறி இருக்கிறார் என்பதை உணர்ந்தேன். அந்த வீட்டில் பரிதாபமாக ஒரு பெண் காட்சியளித்தார். சிறு பிள்ளைகள் பஞ்சத்தில் அடிபட்ட பிள்ளைகள் போல் என் கண்முன் தோன்றினார்கள். இவர்களெல்லாம் இவரின் குடும்பத்தின் அங்கத்தினர்கள் என்றபோது எனக்கு அதிர்ச்சியாகி போனது!

சிலருக்கு நாம் நாமாக வாழாமல் மற்றவர்களைப் போல் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காக பல்வேறு முயற்சிகளை எடுக்கிறோம்.

ஒரு நாள் ஒரு சப்பாத்திக்கள்ளி மிகுந்த துக்கமாக இருந்தது. நான் மட்டும் ஏன் இப்படி அழகில்லாமல் இருக்கிறேன்! மாமரத்து இலைகள் மணக்கிறது, வாழை இலைகள் சாப்பிட பயன்படுகிறது. வேப்ப இலைகளை கூட கசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால் என்னை மட்டும் கடவுள் ஏன் இப்படி படைத்தார், யாரும் என்னை ஏறெடுத்துப் பார்ப்பதில்லையே?  என்று மிகவும் மனதுக்குள் வருத்தத்தோடு இருந்தது.

இதை உணர்ந்த கடவுள் அதன் அருகில் வந்தார். “ஏன் துக்கமாக இருக்கிறாய்?” என்றார். அது தன் வருத்தத்தை கூறிவிட்டு, “என்னை தங்க இலைகளைப் போல் மாற்றும்” என்று கெஞ்சியது.

கடவுள், “அப்படியே ஆகட்டும்” என்றார். உடனே அதன் இலைகள் தங்கமயமாக ஜொலித்தது. அதற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஆனால் அந்த வழியே போன மனிதர்கள் இதைப்பார்த்து வெட்டி எடுத்துவிட்டு போய்விட்டனர். தளிர்க்க விடாமல் தொடர்ந்து வெட்டினர். வலிதாங்காமல் கடவுளிடம் மீண்டும் மன்றாடியது. ஆண்டவரே என்று அழைத்ததும் ஆண்டவரும் வந்தார், “என்ன வேண்டும்?” என்றார்.

“தயவு செய்து என்னை மன்னியும், என்னை ஒரு வாழை இலையைப் போல் மட்டும் மாற்றிவிடும். அது போதும்” என்றது. உடனே கடவுள், “அப்படியே ஆகட்டும்” என்றார். வேலியின் ஓரத்தில் இருந்த அத்தனை சப்பாத்திக்கள்ளி செடியும் வாழை இலையைப் போல் மாறியது.

அந்த வழியே வந்த மாடுகள் இது நல்ல சாப்பாடு என்று நன்றாகத் தின்று விட்டு செல்ல ஆரம்பித்தது. கொஞ்சமும் வளரவிடாமல் ஆடு,மாடுகள் சாப்பிட அதற்கு மனம் பொறுக்கவில்லை. மீண்டும் கடவுளிடம் மன்றாடி, “ஆண்டவரே என்னை இந்த ஒரு முறை மட்டும் பொறுத்துக் கொள்ளும். என்னை யாரும் வெட்டி விட முடியாத, திருட முடியாத, ஆடு மாடுகள் சாப்பிட முடியாத strong ஆன இலையாக மாற்றி விடும். அது போதும்” என்றது.

கடவுள், “சரி அப்படியே ஆகட்டும்” என்றார். உடனே முள் உள்ள strongஆன இலைகளாக பழைய சப்பாத்திக்கள்ளியாகவே மாறிப்போனது.

இப்பொழுது தான் அது யோசித்தது. கடவுள் நன்றாக யோசித்துதான் படைத்திருக்கிறார். நாம் தான் அடுத்தவர்களை பார்த்து அப்படி இருந்தால் நன்றாக இருக்கும், இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிக்கிறோம். நாம் நாமாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று மனதில் யோசித்து சமாதானமாக இருந்தது.

இன்றைய தலைமுறை தொலைக்காட்சியில் தோன்றுகிறவர்களின் அழகு, ஆடை, அணிகலன்கள் ஒவ்வொன்றையும் பார்த்துவிட்டு அவர்களைப் போல மாற எண்ணி பல ஆயிரங்களை விரயம் பண்ணுகிறார்கள். அவர்கள் பணத்திற்காக நடிக்கிறார்கள், வேஷம் போடுகிறார்கள். நாம் வேஷம் போட்டுக் கொண்டே வாழ முடியுமா? அவர்கள் நிழல் உலகிற்காக வாழ்கிறார்கள். நாம் நிஜ வாழ்க்கை வாழ்கிறோம். அவர்கள் நெற்றியில் இருந்து வேர்வை சிந்தினாலும் காசு, சிந்தினதை துடைத்து விடுபவருக்கும் காசு. ஆனால் வேர்வை சிந்தாமல் வாழ நாம் நினைத்தால் பட்டினி தான் மிஞ்சும்.

வெயிலில் போனால் கலர் குறைந்து விடுவோம் என்று இன்றைய இளம் சமுதாயம் நிழலில் பதுங்குவதால் BE, ME முடித்துவிட்டு 10 ஆயிரத்திற்கும், 5 ஆயிரத்திற்கும்  நடையாய் நடக்க வேண்டியுள்ளது. Sun cream பூசிக்கொண்டு அலைவதால் உடலில் சூரியனிடமிருந்து பெறவேண்டிய விட்டமின்களையும் இழந்து அதற்கும் மாத்திரையை எடுத்துக் கொண்டு அலையும் பரிதாப நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.

ரெபேக்காள் மகா ரூபவதியும் (a beautiful unmarried young women came by with a water jar on her shoulder) புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள். (ஆதியாகமம் 24:16) இவள் ஓட்டங்கங்களுக்கும் தண்ணீர் எடுத்துக் கொடுப்பதற்கு ஆயத்தமாக இருந்தாள். இளம் வயதிலே பிறருக்கு உதவுவதற்கும்,  உழைப்பதற்கும் வருத்தப்படவில்லை. இன்றைய இளம் சமுதாயம் போட்ட மேக்கப் கலைந்து விடக்கூடாது என்பதிலே கவனமாக இருக்கிறது. நீங்கள் நீங்களாகவே இருங்கள். அப்பொழுதுதான் மகிழ்ச்சியாக வாழமுடியும். உங்களை கர்த்தர் எப்படி உருவாக்கினார்களோ அப்படியே வாழ முற்படுங்கள். உங்களை குறித்து ஒரு நோக்கம், திட்டம் கர்த்தரிடம் உண்டு. ஆகவே மகிழ்ந்திடுங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி