நடமாடும் திருமறை
ஒருவர் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘King James Version’ தான் சிறப்பானது. அதற்கு நிகர் எதுவுமில்லை. மூலம் மொழியோடு மிகவும் இணைந்து செல்வது இதுதான். ஆகவே இதைத் தவிர வேறு எந்த மொழிபெயர்ப்பும் ஈடு இணை கிடையாது என்றார்.
மற்றொருவர் தற்பொழுது வந்துள்ள Contemporary Translation தான் சரியானது. இன்றைய இளைஞர்களுக்கு புரியும் விதத்தில் உள்ளது. இதைத்தான் எல்லாரும் பின்பற்ற வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில், தமிழ் வழி கல்வி பயின்ற ஒருவர் கையில் பொது மொழிபெயர்ப்பு இருந்தது. அவர் நமது தாய்மொழியில் எவ்வளவு இனிமையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதைத்தான் ஒவ்வொரு தமிழனும் வாசிப்பது சிறந்தது என்று உரக்க அடித்துக் கூறினார்.
இவ்வாறு காரசாரமாக பேசிக் கொண்டிருக்கும் போது புதிதாக இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒரு இளைஞர் அந்தக் கூட்டத்தில் அமைதியாக கேட்டுக் கொண்டே இருந்தார். எந்தவிதமான argumentயையும் செய்யாமல் இருப்பதை பார்த்த மற்றவர்கள் அந்த இளைஞனிடம் சரி, நாங்கள் இறையியல் கற்றவர்கள், நீ இப்பொழுது தான் இயேசுவை ஏற்றுக்கொண்டு திருமறையை படிக்க ஆரம்பித்திருக்கிறாய். நீ எதை follow up பண்ணுகிறாய்? என்றனர்.
அதற்கு அவன், “எங்க அம்மா மொழிபெயர்த்த திருமறையை தான் பின்பற்றுகிறேன்” என்றான்.
கேட்டவர்களுக்கு எல்லாம் ஒரே ஷாக். “என்ன சொல்லுகிறாய் புரியவில்லையே” என்றனர்.
அதற்கு அவன், “எங்க அம்மா திருமறையின் ஒவ்வொரு பக்கத்தையும் வாழ்க்கையாக மொழிபெயர்த்துள்ளார். அதைப் பார்த்து, படித்து தான் நான் கிறிஸ்தவனாக மாறினேன்” என்றான்.
இதைக் கேட்ட இறையியல் கற்ற இளைஞர்களுக்கு வெட்கமாகி விட்டது. நாமெல்லாம் எந்த மொழிபெயர்ப்பு சிறந்தது என்று போட்டிப்போடுகிறோமே தவிர நமது வாழ்க்கை திருமறையின் வார்த்தைக்கு நேராக அமைவதை குறித்த அக்கறை இல்லாமல் போய் விட்டோமே என்று மெதுவாக இடத்தை காலி செய்தனர்.
பவுலடியார் தமது திருச்சபை மக்களைக் குறித்து குறிப்பிடும்போது நீங்கள் எங்களது நிருபங்கள் என்றும், “நற்கந்தம்” என்றும் குறிப்பிடுகிறார். இன்று 3 பேர் உள்ள வீட்டில் ஐந்து திருமறை இருக்கிறது. ஆனால் அந்த ஐந்தும் பல நாட்களாக தூசி தட்டப்படாமல் இருக்கிறது. நமது வாழ்க்கைக்கும் திருமறை வசனங்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விட்டது. நமது பிள்ளைகள் நம்முடைய வாழ்வை பார்த்துவிட்டு, திருமறைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் இருப்பதால், அவர்கள் திருச்சபைக்கு வருவதுமில்லை, திருமறையை படிப்பதில் நாட்டமும் இல்லாமல் போய்விடுகிறது.
என்று திருமறையின் வார்த்தைக்கு ஏற்ப நடக்க நினைக்கிறோமோ அப்போது நமது வாழ்வு மற்ற மக்களுக்கு முன்பாக மிளிர ஆரம்பிக்கிறது. பிறரை கவர்ந்து இழுக்க ஆரம்பிக்கிறது. ஆரம்பிப்போம்! திருமறையின் வார்த்தைக்கு ஏற்ப வாழ்க்கையை செதுக்க!!
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment