ஜீனியஸ் (Genius)


நண்பருடைய வீட்டிற்கு சென்றிருந்தேன். மகிழ்ச்சியோடு பேசி சிரித்துக்கொண்டிருந்தோம். அவருடைய மகள் டீ, ஸ்னக்ஸ் உடன் இடைசெருகலாக வந்தாள். அவளைப் பார்த்த உடன் நலம் விசாரித்தேன், "உன் கணவர் நன்றாக இருக்கிறாரா என்று!" அவள் தலையை அசைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

அவள் முகத்திலே மகிழ்ச்சி களை இழந்திருப்பதை உணர்ந்து நண்பரிடம் கேட்டேன். உன் மருமகன் எப்படி? என்றேன். அவன் உள்ளத்திலிருந்து கோபங்கள் பொத்துக்கொண்டு வந்தது, "அவனைப் பற்றி மட்டும் கேட்காதே அவன் ஒரு மனுஷனே கிடையாது. நானும் எவ்வளவோ அவனுக்கு புத்திச் சொல்லிப் பார்த்து விட்டேன். அது திருந்தாத ஜென்மம்.   அதனால் என்  மகள் இப்பொழுது என்னோடு தான் இருக்கிறாள்."  

நீ யாரைக் கொண்டாகிலும் பேசிப் பார்த்தாயா? என்றேன். அதற்கு நண்பன் அவனிடம் யார் பேசினாலும் திருந்த மாட்டான். நான் ஒரு ஊழியக்காரன். நான் பேசியே திருந்தா விட்டால் அவனை யாரும் திருத்த முடியாது என்று முற்றுப் புள்ளி வைத்தான்.  

உன் மருமகன் எப்பொழுதாவது Phone பண்ணினானா? என்றேன். அதற்கு அவன், "அவன் Phoneபண்ணினாலும் என் மகளை எடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அவள் சின்னப் பிள்ளை.  அவள் அவனை எப்படி சரிபடுத்த முடியும்?" 

ஒரு மாணவன் ஒருவன் பள்ளிக்குத் தாமதமாக வந்தான். அதற்குள்ளாக அன்றைய கனக்குப் பாட வேளை முடிந்து விட்டது. கரும்பலகையில் இரண்டு கணித வினாக்கள் எழுதப்பட்டிருந்தது.   அதை மட்டும் எழுதிக் கொண்டான். வீட்டில் போய் அவைகளைச் செய்து செய்து பார்த்தான்.   மிகவும் கஷ்டமாக இருந்தது. இறுதியாக சில நாட்களுக்குப் பின் விடையைக் கண்டுபிடித்து பேராசிரியரிடம் காட்டினான். அவர் அதைப் பார்த்து பரவசமாயிப் போனார்.

இரண்டு வாரங்களுக்கு பின் பேராசிரியர் நெய்மன் மாணவருடைய வீட்டிற்கு வந்தார். மாணவனை முதுகில் தட்டிக் கொடுத்துச் சொன்னார், "எப்படி இதற்கு விடைகள் கண்டுபிடித்தாய்.   இந்த கணிதத்திற்கு இதுவரை விடை கண்டு பிடிக்கப்படவில்லை என்று தான் நான் எழுதிப் போட்டிருந்தேன். ஆனால் அதற்கான விடை என் மாணவனே கண்டுபிடித்திருப்பது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறது" என்றார். இந்த மாணவர் தான் பிற்காலத்தில் கணித வல்லூநராக விளங்கிய டான்ட்ஜீக்.

தீர்வு காண்பது என்பது சாவி போன்றது. பூட்டு என்று ஓன்று இருக்குமானால் சாவி என்று ஓன்று இருக்கத்தானேச் செய்யும்.   குடும்பத்தில் சமாதான குறைச்சல் என்று ஒன்றை சத்துரு கொண்டு வந்தால் சமாதான பிரபு என்ற இறைவன் அதைச் சரிச் செய்யத்தானே இருக்கிறார். "நான் சர்வ வல்லவர் என்னால் செய்யக் கூடாத காரியம் ஓன்று உண்டோ" என்று சொல்லும் இறைவன் ஏன் உங்கள் குடும்ப வாழ்விற்கு நல்ல தீர்ப்பை தந்து சேர்ந்து வாழ உதவமாட்டார். நீதிபதியின் தீர்ப்புக்காக காத்திருக்கிற நீங்கள் நீதிபரராகிய இறைவன் இணைத்ததை கழற்றி விடத் தானே இவ்வளவு முயற்சி.

சமாதான பிரபு இல்லாததினால் தானே சமாதான குறைச்சல். மன்னிக்க சொன்னவர் இயேசு, ஆனால் மன்னிக்க முடியாததால் தானே இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம்.   இயேசுவே இவ்வீட்டில் தலைவர் என்று எழுதி மட்டும் வைத்து என்ன பயன்! பிரித்து விடுகிறவனாகிய பிசாசு அல்லவா மறைமுக தலைவனாக இருந்துக் கொண்டிருக்கிறான்.   ஜீனியஸ்சாக கர்த்தர் உங்களைப் படைத்து சேர்த்து வைத்திருக்க, கை கட்டி, கை கூப்பி கூனி குறுகி நிற்க வைத்தது யார்? இயேசுவா? அல்லது சத்துருவா?

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி