இது உன் பிள்ளை


சில பிள்ளைகள் நன்றாகப் படித்து மார்க் பெற்று விட்டால் என் பிள்ளை இப்படித்தான் படிப்பான் என்று பெருமைப்பட்டுக்கொள்வர். மாறாக பள்ளியில் ஏதாவது சேட்டை பண்ணினான் என்று complaint வரும்போது பார்த்தியா உன் பிள்ளை பண்ணின வேலையை! பார்த்தியா உன் பிள்ளை எடுத்திருக்கிற மார்க்கை! நீயே sign போட்டு விடு என்பர்.

பிள்ளைகள் எடுக்கிற மதிப்பெண்ணை பொருத்தே நல்ல பிள்ளை, கெட்ட பிள்ளை என்று பெற்றோர் பல வேளைகளில் தீர்மானிக்கிறார்கள். புத்தக அறிவை (Academic Intelligence) மட்டும் வைத்தே இவன் பெரிய ஆளாக வருவான் என்று தீர்மானித்து விடுகிறோம். ஆனால் பிள்ளைகள் புத்தக அறிவை தாண்டி உள்ள திறமைகளை (Non-Academic Intelligence) நாம் மறந்துவிடுகிறோம். இன்று புத்தக அறிவை மட்டும் பெற்றவர்களை விட பிறர் திறன்களை வளர்த்துக் கொண்ட பலர் உலகை ஆண்டு வருகிறார்கள். படிப்பில் மட்டுமல்லாமல் பிள்ளைகளிடம் ஓவியம் வரைதல், கம்ப்யூட்டரில் புலமை, கவிதையில் புலமை, சில வேலைகளில் பிள்ளைகளிடம் modern technology குறித்த நுண்ணறிவு இருக்கலாம். அவர்களிடம் எந்த திறமைகள் இருக்கிறதோ அதை ஊக்குவிக்கும் போது அவர்கள் வாழ்க்கையானது பிரகாசமாக அமையும். சச்சின் டெண்டுல்கர், தோனி போன்றவர்கள் படிப்பில் கில்லாடிகள் அல்ல தான். ஆனால் விளையாட்டில் கில்லாடிகள். இன்று உலகம் முழுவதும் அவர்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர்களோடு படித்த முதல் மதிப்பெண் பெற்ற நண்பனை உலகம் அறியவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

“Your Thomas is too stupid to learn” என்ற ஒரு துண்டு சீட்டை எழுதி அந்த சிறுவனின் pocketல் வைத்து அனுப்பினார் ஆசிரியை. இதை பார்த்த அந்த தாய் தன் மகனை அணைத்துக்கொண்டு No No என்று கண்ணீர் மல்க கூறினார். என் மகனுக்கு நானே கற்றுக் கொடுப்பேன் என்று முடிவு பண்ணினாள் அந்த தாய். பிள்ளையின் உள்ளிருந்த ஆற்றலை தூசி தட்டி எழுப்பினாள். பள்ளிக்கு செல்லாத பிள்ளை உருப்படுமா என்ற எண்ணம் எழலாம்! ஆனால் பள்ளிக்குச் செல்லாத பிள்ளை scientist ஆக மாறியது. ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து பிடித்தார்.

ஒருநாள் மின்சார கட்டணம் கட்ட சென்றபோது அலுவலர் sir உங்க பெயரை சொல்லுங்கள் என்றபோது திருதிருவென்று விழித்தார். வந்து வந்து என்று தலையை சொரிந்து கொண்டிருந்தார்.

திடீரென்று நண்பன் ஒருவர் உள்ளே வந்து “என்ன தாமஸ் இங்கே என்ன விசயமா வந்தீங்க” என்றார்.

“Oh My name is Thomas” என்றார். நினைவு சக்தியில் அபாரமாக இருந்தால்தான் பெரிய ஆளாக மாற முடியும் என்று நினைப்பது தவறு என்பதை உணர முடிகிறதா! பள்ளியில் கொடுத்த பாடங்களை வார்த்தை மாறாமல், கமா,கொட்டேஷனோடு படித்து vomit பண்ணினால் தான் உலகில் ஸ்டார் ஆக முடியும் என்று நினைக்கிறீர்களா? இல்லை. திறமைகள் என்பது பல வேளைகளில் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் வைரக்கல் போன்றது. மண்ணுக்குள் கிடைக்கும் வரை மின்னாது. ஆனால் சிறிது பட்டை தீட்டினால் பளபளக்கும். பார்ப்போரை கவர்ந்து இழுக்கும். கடவுள் நமக்கு கொடுத்த பிள்ளைகளின் உள்ளத்தில் மறைந்துக் கிடக்கும் திறமைகளை கண்டு உற்சாகப்படுத்த வேண்டும்.

யோசேப்பு சிறுவயதாக இருக்கும்போதே கனவு காண்கிறான். தன் சகோதரர்கள் தன்னைச் சுற்றிலும் நின்று வணங்குவதை போன்று குறிப்பாக ஒன்றும் குறிப்பாக தன் பெற்றோர் கூட தன்னை சுற்றி சுற்றி வரும் காலம் வரும் என்ற போதும் அவன் தகப்பனாகிய யாக்கோபுக்கே சற்று கசப்பாக தான் இருந்தது. ஆனால் அவன் வாழ்க்கையில் உண்மை, தூய்மையான வாழ்க்கை, நேர்மை, நம்பிக்கை துரோகம் இழைக்காமல் இருப்பது, இறைவனுக்கு பயந்து தவறான காரியங்களுக்கு விலகுவது துன்பம் வந்தாலும் அதையும் ஏற்றுக் கொள்ள தயங்காமல் இருப்பது போன்ற நற்குணங்கள் அவனை மென்மேலும் உயர்த்தியது. இறைவனின் பார்வையில் தான் இருப்பதாக உணர்ந்த அவரின் முன்னேற்றத்தை யாராலும் தடை செய்ய முடியவில்லை. எனவே படித்தாலும், படிக்காவிட்டாலும் நம்முடைய பிள்ளைகள் நம்முடைய பிள்ளை தான் என்பதை பிள்ளைகள் காது கேட்க உரக்கச் சொல்லுங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php 

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி