புலித் தோலைப் போர்த்த எலிகள்


ஹார்வார்டு பல்கலைக்கழகத்தை சார்ந்த Dr. டேவிட் மெக்லிலேண்ட் என்பவர் பல்வேறு துறைகளில் முதன்மையாக விளங்கிய மாணவர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். கல்லூரியில் படிக்கிற போது புலிகளாக, புயல்களாக கல்லூரியில் விளங்கியவர்கள்; ஆசிரியர்களால் பாராட்டுகள் பல பெற்றவர்கள், இவர்கள் எதிர்காலம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி ஆராய்ச்சிச் செய்தார்.

காலரை தூக்கி விட்டு பல்வேறு நிறுவனங்களில், அரசின் மேல் மட்டங்களில் எல்லாம் அதிகாரிகளாக சில வருடங்களுக்குள் நல்ல படித்தவர்கள் அலங்கரித்தனர்.   ஆனால் என்ன ஆச்சுவென்று தெரியவில்லை அவர்களுக்கு அப்பணிகள் திருப்தியளிக்கவில்லை.   காரணம் அவர்கள் அங்கே நிம்மதியாக செயல்பட முடியவில்லை. அங்குள்ள பணியாட்களிடம் பண்பாக பேசி வேலை வாங்கத் தெரியவில்லை. அளவுக்கு மிஞ்சிய கோபம் வெளிப்பட stress, tension, தலைவலி எல்லாம் வந்து விட்டது. இப்படிப்பட்ட மக்களுடன் பணியாற்றுவதை விட வேற இடத்திற்கு போய் விடலாம் என்று கம்பெனி கம்பெனியாக, transfer மேல transfer வாங்கிக் கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் சந்தோஷம் இல்லாமல் அலைய ஆரம்பித்தனர்.

ஆய்வின் இறுதியில் Dr. டேவிட் மெக்லிலேண்ட் கண்டு  கொண்ட உண்மை என்னவென்றால் மேலே கண்ட மாணவர்களெல்லாம் படிப்பில் புலிகள் ஆனால் நடைமுறை வாழ்க்கையில் எலிகள் என்பதைக் கண்டு கொண்டார். இந்த மாணவர்களுக்கு படிப்பறிவு (Academic Intelligence) அதிகமாக பெற்றிருந்தாலும், வாழ்வியல் அறிவு (Emotional Intelligence) என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஆகவே தான் பெரிய படிப்பு படித்த மாப்பிள்ளை, கைநிறைய சம்பளம் வாங்குகிறார், அமெரிக்காவில் உயர்ந்த அதிகாரியாக பணியாற்றுகிறார். ஆனால் மனைவியுடன் வாழமுடியாமல் தகிடதோம் போடுகிறாரே என்றால் மாப்பிள்ளைக்கு Academic intelligence தான் இருக்கிறதே தவிர Emotional intelligenceயை பெற்றுக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.   ஓ இதுதான் உண்மையா!

அப்படி என்னதான் வாழ்வியல் அறிவில்  (Emotional Intelligence ல்) இருக்கிறதோ தெரியாம போச்சுதே என்று நினைக்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை வாழ்வியல் அறிவு என்பது ஐந்து பகுதிகளாக நம்ம Dr. டேவிட் மேக்லிலேண்ட் கூறுகிறார்.

முதலாவது (Self awareness) தன்னைப் பற்றி சரியான கணிப்பு தேவை. வீட்டில் நான் யார்? வேலைத்தளத்தில் நான் யார்? வீட்டில் அதிகாரியாக நடந்துக் கொண்டால் வீட்டுக்காரர் நட்டு கழன்றுட்டோ என்று புலம்புவாள் மனைவிமார். எனவே தன்னைப் பற்றிய சரியான புரிந்துக் கொள்ளுதல் மிகவும் முதன்மையானது.

இரண்டாவதாக தன்னைத் தானே கட்டுப்படுத்தும் திறன் (Self Control) என்பது அடுத்த அவசியமான ஓன்று. திருமணமான பின்பும் வாலிபன் போல் கட்டுப்பாடு இல்லாமல் நடப்பதும், வீட்டிற்கு வராமல் நண்பர்களுடன் சுற்றிக்கொண்டே அலைவதும், சம்பளத்தை சரிவர செலவுச் செய்யாமல் கேட்பவர்களுக்கு எல்லாம் வாரி வழங்கிவிட்டு, வீட்டின் தேவைகளை சந்திக்காமல் குடும்பத்தை நட்டாத்தில் விட்டு விடும் பழக்கம் இருப்பவர்களைப்பார்த்தால் sir, கொஞ்சம் Self Control இல்லாதவர் அவ்வளவு தான்.                       

மூன்றாவதாக தன் முனைப்பு (motivation) என்பது அடுத்த முக்கியமான ஓன்று. சிலர் நினைத்தால் வேலைக்குச் செல்வர், IPL போட்டி என்றால் முக்கிய வேலையை மறந்து தலை வலிக்கிறது என்று பொய் காரணத்தைக் கூறிவிட்டு வீட்டிலேயே உட்கார்ந்துக் கொள்வார்கள். அடுத்த நாள் வேலையிலிருந்து பணியிடை நீக்கம் நடக்கும். இது தொடர்கதை ஆவதால் எந்த பணியிலும் பொறுப்புடன் செயல்படமாட்டார்கள். sirயை பிடித்து வைத்தால் அப்படியே உட்காரத்தான் தெரியும் அவ்வளவுதான்.          

நான்காவதாக கருணை (Sympathy) உடன் வாழ கற்றுக் கொள்ளுதல். சிலர் நன்றாக படித்தாலும் சாதிய சங்கங்களிலும், சமய சங்கங்களிலும், தீவிரவாத குழுக்களிலும் தீவிரமாக இறங்கி பிறரை மனிதர்களாக மதிக்காமல் முரட்டாட்டமாக  செயல்படுவர். பிறரின் உயிரைப் பற்றி அக்கரையற்றவர்களாக காணப்படுவர், பேசுவர், செயல்படுவர்.

ஐந்தாவதாக சமுதாய திறன் (Social Skills) இருக்க வேண்டும். சிலர் சமுதாயத்தைப் பற்றிய புரிந்துக் கொள்ளுதலே இல்லாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வாழ்ந்து விடுவார்கள். பிறருடைய உணர்வுகளை புரிந்துக் கொள்ளாமல் வளர்ந்து பெரியவர்களாகி விடுவர்.                                

"அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு" என பிரசங்கி கூறுகிறார். (பிர 12:12). படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்தி வாழ்வின் நடப்புகளை அறியாமல் போவதைத் தவிருங்கள். வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php 

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி