My Dear Son
ஹிட்லரின் தந்தை அலாய்ஸ் ஹிட்லர். அவரின் தாயார் ஒரு யூதரின் வீட்டில் வேலைச் செய்து வந்துள்ளார். தந்தை யார் என்று அலாய்க்கும் தெரியவில்லை, ஹிட்லருக்கும் தெரியவில்லை. அலாய்ஸ் ஒரு சுங்க அதிகாரியாக வேலைப் பார்த்ததினால் தண்னைப் போன்று சுங்கத் துறையில் பணியாற்ற விரும்பி தன் மகன் ஹிட்லரை வளைக்க முயற்சிப் பண்ணினார். தன் மகன் ஒழுக்கமாக வாழவேண்டும் என்று over கண்டிப்பாக வளர்க்கப்பட்டார். எந்த தவறுச் செய்தாலும் அதற்கு அடிதான் பதிலாக அமைந்தது. தகப்பனின் அன்பு, அரவணைப்பு என்பது, என்னவென்றே தெரியாமல் கண்கொத்திப் பாம்பாகவே தன் தந்தையைப் பார்த்தார் ஹிட்லர்.
தன் தகப்பன் தன் விருப்பத்தை தன் மேல் திணிப்பதை விரும்பாத ஹிட்லர் தன் தகப்பனையும், அவர் தன் மேல் கொண்ட கனவையும் சேர்ந்தே வெறுத்தார். உங்கள் கனவை நான் நிறைவேற்றமுடியாது. நான் ஒரு ஓவியனாகவே மாற விரும்புகிறேன் என்று பட்டென்று போட்டு உடைத்தார் ஹிட்லர். இதை கேட்டதும் பொங்கி எழுந்த அலாய்ஸ் தன் மகனை அடித்து உதைக்க ஆரம்பித்தார். இந்த மனுஷனோடு எங்க அம்மா கிளாரா எப்படி தான் வாழ்கிறார்களோ என்று புலம்ப ஆரம்பித்தார் ஹிட்லர்.
எதிர்பாராத விதமாக அலாய்ஸ் மரித்துப்போனார். தன் கனவை நனவாக்க விரும்பி புயலாக புறப்பட்டார். ஆனால் அவரது கனவுகள் நிறைவேறாமல் தட்டு தடுமாறினார். தன் தந்தையை வெறுத்தாலும், தந்தையின் சொத்தை விற்றதில் வந்த பணத்தை அவர் வெறுக்கவில்லை. ஆனால் யூத இனத்தை வெறுக்க ஆரம்பித்தார். ஜெர்மனியில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள் பட்டினியால், பசியால் வாடும் போதும் இங்குள்ள யூதர்கள், அவர்களின் குழந்தைகள், பிள்ளைகள் கொழு கொழுவென்று வாழ்கிறார்கள். இதற்கு காரணமான யூதர்களை அழித்தால் தான் ஜெர்மனி மக்கள் செழிப்பாக வாழ முடியும் என்று முடிவுக்கு வந்தார்.
“ஹிட்லர் ஒரு ரத்த வெறி பிடித்த மிருகம்” என்று நேச நாடுகள் குறிப்பிடும் அளவிற்கு மோசமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் என்றால் அவரின் இளமைப்பருவம் இனிமையாக அமையாத ஒரு காரணம் என்று சிக்மெண்ட் பராய்டு இப்பொழுது உயிரோடு இருந்திருந்தால் கூறியிருப்பார்.
திருமறையில் ஒரு வாக்கியம் கீழ்கண்டவாறு கூறுகிறது. “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக" (எபேசியர் 6:4). பிள்ளைகளை நல் வழிப்படுத்துவது அவசியம் தான். அதற்காக எப்பொழுதும் பாம்பைப்போல் கொத்திக் கொண்டே அலையக் கூடாது. ஒரு நேரம் அதட்டினால் அடுத்த நேரம் அணைத்துக் கொள்ளுங்கள். அதிகமாக அடிக்கடி அடிப்பது அல்லது கண்டிப்பது என்பது பிள்ளைகள் உள்ளத்தில் வலுவான காயத்தை ஏற்படுத்தி விடும். கோபப்படுவதும் வேண்டும், கொஞ்சுவதும் வேண்டும். முடியாது என்று மறுக்கவும் வேண்டும், தேவையான வேளையில் நமது தாராளத்தை வெளிப்படுத்தவும் வேண்டும். பிள்ளைகள் அதிகமாக கோபப்பட்டு தவறான முடிவுகளை எடுக்காத அளவிற்குப் பார்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமான கண்டிப்பு சில வேளைகளில் அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கு தடையாக மாறிவிடும். எனவே அன்போடு சேர்ந்த கண்டிப்பே சிறப்பானது.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment