மன்னிக்க பெலன் தாரும்
சற்று அதிர்ந்து போன நான், “ஏன் என்னப் பிரச்சனை என்று கேட்டேன்?”
என் மகன் உடனும் என்னுடனும் அவள் ஒத்துப்போவதில்லை என்றார். எங்கள் குடும்பத்தின் மீது அவளுக்குப் பாசமே இல்லை. என் மனைவி என்னை விட்டு விட்டு திருமணமான 5 வருடத்திலேயே மரித்துப் போய் விட்டாள். நான் இவனை 4 வயதிலே இருந்தே தனியாக வளர்த்து வந்தேன். இவன் என்னை விட்டு பிரிந்ததே இல்லை. ஆனால் மருமகளோ தனிக் குடித்தனம் போக வேண்டும் என்று ஒத்தகாலிலே நிற்கிறாள். வீட்டில் எப்பொழுதும் செல்போனும் கையுமாகத்தான் இருக்கிறாள். குடும்பத்தைக் குறித்து அக்கறையே இல்லை. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவள் கேட்க மாட்டேன் என்கிறாள். பல முறை நான் advice செய்து விட்டேன். என் மகன் பல முறை அவளை அவள் வீட்டிலிருந்து அழைத்து வருவான். இனி அவளை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்றார்.
நான் ஒரு முறை மீண்டும் மன்னியுங்கள் என்றேன். அதற்கு அவர் “மன்னித்து மன்னித்து என் மகனோடு அவள் இருந்தது போதும்” என்று சத்தத்தை உயர்த்த ஆரம்பித்தார். அப்படி என்றால் மன்னிக்கக் கூடாதா?
ஹிட்லர் தன்னுடைய படைபலத்தினால் எதிரிகளை சிதறடித்து, அவர்களில் பலரை சிறை கைதிகளாக மாற்றி முகாம்களில் சித்திரவதைச் செய்து வந்தார். அந்த முகாம்களில் கொர்ரி, பெஸ்டி என்ற சகோதரிகள் அடைக்கப்பட்டிருந்தனர். சித்திரவதைத் தாங்காமல் பெஸ்டி சிறையிலேயே மரணத்தை தழுவினாள்.
உலகப்போர் முடிந்த பின் கொர்ரி சித்திரவதை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டாள். அவளுடைய வேதனைகளை மனதில் சுமந்தவளாக மன்னிப்பின் அவசியத்தை பற்றி ஆலயங்களிலே விளக்கமாக கூறிவந்தாள். அவள் அன்று ஒரு ஆலயத்தில் பேசின பேச்சு மக்கள் மனங்களை கலங்க வைத்தது. மன்னிப்பின் சிந்தையை உடையவர்களாக அநேகர் மாறினர். அவள் பேச்சைப் பாராட்டி ஆலய ஆராதனை முடிவுற்றதும் அவள் கைகளைக் குலுக்கி பாராட்டினர்.
வரிசையில் பலர் கை குலுக்கி நிற்க ஒரு கரம் நீட்டியது. அந்த முகத்தைப் பார்த்த போது கொர்ரியின் மலர்ந்த முகம் வாடிப்போனது. அந்த கைகள் தான் தன் சகோதரி பெஸ்டியை சித்திரவதைச் செய்தது. இவனை எப்படி மன்னிப்பது என்று என்று மனங்கலங்கினார்.
இயேசுவே மன்னிப்பைப் பற்றி பேசிய எனக்கு மன்னிக்கும் இதயம் தாரும் என்று மனதிற்குள் ஜெபிக்க, அவள் கை அவனை நோக்கி நீட்டியது. கைக்குலுக்கி மன்னிப்பின் மான்பை செயல் வடிவமாக்கினாள். கண்களெல்லாம் குளமாக மாறி தாரைத் தாரையாக ஓட ஆரம்பித்தது. முழுமனதோடு மன்னித்தவராக அடுத்த நபரிடம் கை குலுக்க ஆரம்பித்தாள்.
எத்தனை முறை தான் மன்னிக்க வேண்டும்? எந்த எந்த குற்றத்தை மன்னிக்கலாம்? எதை மன்னிக்கவே கூடாது? என்று கேள்வி எழுப்பினால் இயேசு கிறிஸ்து கூறும் பதில், "எத்தனை முறையும் மன்னிக்கலாம்”. எந்த குற்றத்தை கணவன்/மனைவி/பிள்ளைகள் செய்தாலும் உயிர் இருக்கும் வரை இயேசு கிறிஸ்துவைப் போல் மன்னிக்க வேண்டும். (கொலோ 3:13)
நாம் பிறரை மன்னித்தால் அதற்கு பெயர் அன்பு. அதே மன்னிப்பு கடவுளிடம் இருந்து வந்தால் இரக்கம். ஒருவேளை அந்த மன்னிப்பு உங்களிடம் இருந்து வெளிப்பட்டால் நீங்கள் ஞானமுள்ளவர்கள் என்கிறார் ஒரு இறைபணியாளர். நீங்கள் யார் என்பதை நீங்கள் தான் முடிவு பண்ண வேண்டும். மன்னிப்பு இருக்கும் வரையில் தான் குடும்பம் உயிர்ப்புடன் இருக்க முடியும் என்பதை மறந்து விடாதிருங்கள்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment