மன்னிக்க வேண்டுகிறேன்!



நானாவது அவனை மன்னிப்பதாவது? நான் உயிரோடு இருக்கும் வரையில் அது மட்டும் நடக்காது! நான் மன்னித்தாலும் எங்க அம்மாவைப் பற்றி பேசிய வார்த்தைகளை மட்டும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது!! அதை எப்படி மன்னிக்க முடியும்? என்னைப் பற்றி பற்றி பேசியது கூட பரவாயில்லை என்று எடுத்துக் கொண்டாலும், மற்றவர்களைப் பற்றி பேசியதை என்னால் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. நான் உயிரோடு இருக்கும் வரையில் அது மட்டும் நடக்காது என்று வீரவசனம் பேசுகிறவர்கள் தான் காவல் துறை வாசலிலும், நீதிமன்ற வாசலிலும் காத்து கிடப்பவர்கள்.

மன்னிப்பு கொடுப்பதும், மன்னிப்பை வேண்டுவதும் வாழ்க்கையில் இன்றியமையாதது. சிறிய தவறுகள் நாம் செய்வதால் கூட மற்றவர்கள் மனம் புண்படுமானால் அதற்கு வருத்தம் தெரிவிக்கப் பழகிக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் குடும்ப வாழ்வு என்பது மகிழ்ச்சி நிறைந்ததாகவே இருக்கும். குறிப்பாக சில பெற்றோர் கூட பிள்ளைகளை தவறாக தண்டித்து விட்டால் அதற்காக மனம் வருந்தி பிள்ளைகளிடம் வருத்தம் தெரிவித்துவிட்டால் பிள்ளைகள் பெற்றோர் உறவு என்பது வலுவாகவே அமையும்.  எனவே மன்னிப்பு என்பது செயலாக மாறும் போது மனிதனிடம் உள்ள உணர்வுகளிலேயே மாற்றங்களை  ஏற்படுத்தி, காயங்களை ஆற்றும் சக்தியாக மாறிவிடுகிறது. மன்னிப்பதால் ஒருவர் செய்த காரியம் மறந்து விடாது. ஆனால் பழிக்கு பழிவாங்கும் எண்ணம், கசப்பு என்பது மறைந்து விடுகிறது. உள்ளத்திற்குள் ஒரு சமாதானம் பரவி, கனமான உணர்வுகள் மறைந்துவிடுகிறது. அதே வேளையில் முரன்பாடுகளை நாம் விட்டுவிட வாய்ப்பாக அமைந்து விடுகிறது. 

ஸ்டுவர்ட் பிளாக்கி என்ற பேராசிரியர் எடின்பர்க் பல்கலை கழகத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்தார். அப்பொழுது புத்தகத்தை எடுத்து வாசிக்குமாறு மானவர்களிடம் கூறினார். எல்லா மாணவர்களும் வலது கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு வாசித்தனர். அப்பொழுது ஒரு மாணவர் மட்டும் இடது கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு வாசிப்பதை பார்த்தார். உடனே ஸ்டுவர்ட்க்கு கோபம் எரிமலையாய் வெடித்து சிதறியது. எரிச்சலோடு அந்த மாணவனைப் பார்த்து வலது கையில் புத்தகத்தை வைத்து ஒழுங்காக வாசி என்று கத்தினார்.

மாணவர் ஆசிரியரை பார்த்த வண்ணம் வலது கையினை சட்டைக்குள் இருந்து வெளியே காட்டின போது அந்த மாணவனுக்கு முழங்கை வரை கரமே இல்லாமல் இருந்தது. இதை சற்றும் எதிர்பாராத ஸ்டுவர்ட் அதிர்ந்துப் போனார்.

மாணவர்கள் எல்லாம் அமைதியாய் பேராசிரியரை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவர் மாணவனின் அருகில் வந்து, “Very sorry, உன் வலது கையைப் பற்றி தெரியாமல் பேசிவிட்டேன்” என்றார்.

ஒரு ஆசிரியர் தன்னிடம் மன்னிப்புக்கேட்பதை உணர்ந்த மாணவரின் உள்ளம் உடைந்துப்போனது. பின்பு அந்த ஆசிரியரின் தாக்கத்தினால் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார் என்பது வரலாறு.

ஆசிரியர், மாணவர் உறவில் மட்டுமல்ல எந்த உறவாக இருந்தாலும் மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு வழங்குவதும்  நடந்துக் கொண்டே இருக்கும் வரை உறவுகள் என்பது பிரிந்துப் போவதற்கு வாய்ப்பே இல்லை. அன்பு இருக்கும் வரை மன்னிப்பு என்பது நடந்துக் கொண்டே தான் இருக்கும். அன்பு என்று தனிந்துப் போகிறதோ அப்பொழுது தான் மன்னிக்கும் பண்பு என்பது வறட்சியாகி விடுகிறது.        

நீங்களோ எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள் கர்த்தரோ அதை நன்மையாக மாற்றினார். ஆகவே நீங்கள் செய்த காரியத்தை குறித்து வருத்தப்பட வேண்டாம் என்று யோசேப்பு தன் சகோதர்களுக்கு கூறி முழு மனதோடு தான் மன்னித்து விட்டதை அறிக்கையிடுகிறான். மன்னிப்பு என்பது தனது தகப்பன் மறையும் வரையில் தான் இருக்குமோ யோசேப்பின் சகோதரர்கள் நினைத்து பயந்தனர். ஆனால் தான் முழு மனதோடு மன்னித்துவிட்டேன். பழையதை நினைப்பதில்லை என்பதை வெளிப்படையாக கூறி சகோதரர்களை அன்பினால் பெலப்படுத்துகிறான்.

நம் வாழ்க்கையிலும் மன்னித்த பின்பு பழைய காரியங்களை நினைவூட்டி கொண்டே இருப்போமானால் குப்பையை கிளறுவது போல் மாறிவிடும். குப்பையை கிளர கிளர நாற்றம் தான் எடுக்கும். ஆகவே அதை செய்யாதிருங்கள். முழு மனதோடு மன்னித்து மகிழ்ச்சியோடு வாழ பழகிக் கொள்வோம். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி