தரமான நேரம் (Quality time)
அன்று சைமனுடைய company யில் இருந்து family get-together ஓன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் சைமனுடைய companyயில் பணிபுரியும் workers யாவரும் தங்கள் தங்கள் குடும்பத்தோடு ஆஜரானார்கள். பலர் குடும்பங்களை துலைத்துவிட்டு married bachelor ஆக வந்திருந்தார்கள்.
Programmeல் பல கலை நிகழ்ச்சிகள் நடந்துக் கொண்டிருந்தது. இடை இடையே கேள்விகள் கேட்டு பணியாளர்களை உற்சாகப்படுத்தி பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார் அந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த ஜோயல்.
தீடீரென்று ஒரு couple முன் வர அழைப்புக் கொடுத்தார். எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க சைமன், கிரேனாப்புவை எல்லாரும் கையைக் காட்ட, வழியில்லாமல் இருவரும் முன்னுக்குச் சென்றனர்.
ஜோயல் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார், "உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய இரகசியமாக நீங்கள் கருதுவது எது? நீங்கள் இருவரும் வெவ்வேறு துறைகளில் பணியாற்றுகிறிர்களே. உங்களுக்குள் எப்படி ஒத்துப் போகிறீர்கள்" என்றார்.
இருவரும் சிரித்துக் கொண்டே நின்றார்கள். இறுதியாக “Quality time” என்றார்கள்.
அதை சற்று விளக்குங்கள் என்று ஜோயல் மீண்டும் கூறினார்.
அப்பொழுது Dr.கிரேனாப் மைக்கைப் பிடித்துக் கொண்டு, “நாங்கள் இருவரும் வெவ்வேறு பணிகளைச் செய்தாலும், இரவில் வீட்டிற்கு வந்த பின் பிள்ளைகளைத் தூங்க வைத்த பின்பு சிறிது நேரமாவது பேசிக் கொண்டிருப்போம். மனம் விட்டு அரை மணி நேரமாவது சில வேளை 15 நிமிடமாவது பேசிவிட்டுத் தான் படுப்போம். நாங்கள் சேர்ந்து பேசிக்கொள்ளும் நேரம் குறைவாக இருந்தாலும் செல்போனை எடுக்காமல் தள்ளி வைத்துவிட்டு அருகருகே உட்கார்ந்து பேசுவோம். ஏதாவது எனக்கு கஷ்டம் இருக்கும் போது அதை சைமனிடம் கூறுவேன். அவர் கேட்டுக் கொண்டே இருப்பார். சில வேளை என் தலையை தடவி விட்டு, கரங்களை அழுத்தமாக பிடித்து தைரியம் சொல்லுவார். அதேப் போல் சைமனுடைய office ல் ஏதாவது காரியம் என்றால் என்னிடம் கூறுவார். நான் அவர் தலைமுடியை ஒரு கலைப்பு கலைத்து விட்டு நீங்கள் சிங்கம். உங்களை யாராவது மிஞ்ச முடியுமா என்பேன். அவ்வளவு தான் அவருக்குள் ஒரு தன்னம்பிக்கை உருவாகும். ஆயிரம் வேலை இருந்தாலும் இறைவனிடம் நேரம் செலவிடுவதற்கு அடுத்த படியாக “தரமான நேரத்தை” நாங்கள் செலவிடுவதால் தான் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்” என்று முடித்தாள்.
உட்கார்ந்திருந்த married bachelorகள் புழுவாக நெளிந்தனர். எப்பொழுதும் cell phone, laptopம் மாக அலைந்ததால் குடும்பம் கைவிட்டுப் போய் விட்டதை உணர்ந்தனர். சிலர் cellphone ல் இருந்து Still I love you என்று தங்கள் மனைவி/கணவருக்கு SMS அனுப்ப ஆரம்பித்தனர்.
ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபேக்காளோடே விளையாடிக் கொண்டிருக்கிறதைக் கண்டான். (ஆதியாகமம் 26:8) என்று திருமறை குறிப்பிடுகிறது. இது ஒரு விதத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரும் மனம் விட்டு சந்தோஷமாக வாழ்ந்த வாழ்க்கையைக் குறிக்கிறது. சில வேளைகளில் மனைவி வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது கணவன் மெதுவாக பின்புறம் ஒரு தட்டு தட்டி விட்டு நன்றாக வேலைச் செய் என்று சிரித்து மகிழ்வது போல் ஈசாக்கு செயல்பட்டிருக்கக்கூடும்.
இன்றைய இளந்தலைமுறை ஒன்றாக இருந்தாலும் ஆளுக்கொரு mobileலில் game விளையாடிக் கொண்டிருக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பேசி, மகிழ்ந்து விளையாடியது அந்த காலம். இதினால் உறவு வலுப்பட்டது. ஆனால் கணவன் மனைவி இருவரும் இயந்திரத்துடனே, cell phoneல் தனித்தனியாக விளையாடி நேரத்தைப் போக்குகின்றனர். இதனால் தனித்தனியாக மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர். ஆனால் உறவு அறுபட்டு விடுகிறது. குடிகாரன் தான் மட்டும் குடித்து மகிழ்வது போல் இன்றைய சமுதாயம் தனி மனித சந்தோஷத்தை முன் வைப்பதால் கூட்டு சந்தோஷம் துலைந்து விடுகிறது. இதனால் குடும்ப உறவு அறுந்து விடுகிறது. வலைத்தளத்தில் மூழ்க மூழ்க குடும்பம் உறவும் மூழ்க ஆரம்பித்து விடும் என்பதை மனதில் கொண்டு கவனமாக “தரமான நேரத்தை” குடும்பத்துடன் செலவிட முன் வருவோம்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment