மன்னிப்பதற்கும் ஒரு அளவில்லையா?


திருமண சான்றிதழ் வேண்டும் என்று என்னிடம் வந்தான் ராஜேஸ். எதற்காக திருமண சான்றிதழ் என்றுக் கேட்டேன்? எனது மனைவியோடு இனி வாழ முடியாது என்று முடிவுக்கு வந்து விட்டேன். எனவே divorce பண்ணுவதற்காக வக்கீலிடம் சென்றேன். அவர் திருமண சான்றிதழ் கேட்டார். எனவே தாருங்கள் என்றார்.

ராஜேஸ் பிரச்சனையைக் கேட்டறிந்தேன். இதற்கெல்லாம் போய் divorce பண்ணலாமா? இந்த ஒரு முறை மன்னியுங்கள். பிரச்சனையை மறந்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். அவரோ மன்னிப்பு எல்லாம் கொடுத்து கொடுத்து பார்த்து விட்டேன். இனி மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். அப்படி என்றால் திருமண சான்றிதழைத் தரமாட்டேன் என்று மறுத்துவிட்டேன். சில நாட்களுக்குள்ளாக வக்கீலிடம் இருந்து நோட்டீஸ் எனக்கே அனுப்பி வைத்துவிட்டார்!

மன்னிப்பு என்பது எந்த உச்சநிலைக்குச் செல்லலாம் என்பதற்கு உதாரணமாக ஒரு பேராயர் நடந்துக் கொண்டார். ஜீன் வால்ஜீன் என்ற பிரபல குற்றவாளி சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தான். ஆனால் அவனை வீட்டார் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே பசியோடு தெரு வீதியிலே அலைந்தான். பசியின் உச்சநிலையில் ஒரு வீட்டை தட்டினான். அது ஒரு பேராயரின் வீடு. தனக்கு பசிக்கிறது என்றான்.

உடனே எந்த ஒரு பதிலும் சொல்லாமல் தன் வீட்டிற்குள் அவனை அழைத்துச் சென்று உணவளித்தார். அப்பொழுது தன்னுடைய நிலையை எடுத்துச் சொன்னான். மனம் இறங்கி அவனுக்கு தன் வீட்டில் ஒரு அறையில் இன்று இரவு படுத்துக் கொள்ளுமாறு கூறினார். உணவு சாப்பிடும் போது அந்த அறையில் ஒரு வெள்ளி குத்து விளக்கைப் பார்த்தான். எவ்வளவு அழகாக இருக்கிறது. நல்ல விலை உயர்ந்ததே என்று எண்ணிக் கொண்டான்.

படுக்கை அறைக்குப் போனவனுக்கு வெள்ளி குத்து விளக்கு நினைவில் வந்துக் கொண்டே இருந்தது. அவனுக்கு தூக்கம் வரவில்லை. நடு இரவில் எழும்பினவன் அந்த குத்து விளக்கை தூக்கிக் கொண்டு மெதுவாக வீட்டைவிட்டு வெளியேறினான்.

தெருவழியாக வேகமாக நடக்க ஆரம்பித்தான். எதிர்பாராமல் அவ்வழியே வந்த காவலர்கள் அவனுடைய நடக்கையையும், குத்து விளக்கையும் பார்த்த உடன் கையோடு பிடித்து விசாரித்தனர்.

குத்து விளக்கில் பேராயர் பெயரும் இருந்ததால் ஜீன் வால்ஜினை கையோடு பேராயர் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

பேராயரின் வீடு தட்டப்பட்டது. பேராயர் கதவைத் திறந்த போது ஜீன் வால்ஜின் கையில் வெள்ளி குத்து விளக்கோடு நின்றான். நிலைமையைப் புரிந்துக் கொண்ட பேராயர் ஜீன் வால்ஜினை நண்பனே என்று கட்டி அணைத்துக் கொண்டார்.

என் நண்பனுக்கு என்னுடைய குத்து விளக்கை ஞாபக பரிசாகக் கொடுத்தேன் என்று காவலர்களிடம் கூறினார். பேராயரின் அன்பைப் பார்த்த காவலர்கள் ஜீன் வால்ஜினை அங்கே விட்டு விட்டு கிளம்பினர்.  

மறுகனமே ஜீன் வால்ஜின் பேராயரின் கால்களில் விழுந்து மன்னிப்புக்கேட்டான்.   தன் கண்ணீரினால் அவர் கால்களை கழுவி, தேம்பி தேம்பி அழுதான்.   பேராயரோ அவனை அணைத்து முத்தமிட்டார்.

அத்தோடு அவன் பழைய வாழ்வு முடிந்து புதிய அத்தியாயத்தை ஆரம்பித்தான்.

மன்னிப்பு என்பது எந்த கணவனையும் / மனைவியையும் / பிள்ளைகளையும் / பெற்றோரையும் / சகோதர சகோதரிகளையும் / நண்பர்களையும் புது மனிதர்களாக மாற்றக் கூடும். இனி மன்னிப்பதற்கு இடமே இல்லை என்று நீங்கள் கூறுவீர்களானால் இறைவனிடமும் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது.

ஒவ்வொரு முறையும் பரமண்டல ஜெபத்தை கூறும் போதும் மன்னிப்போம் என்று ஒத்துக் கொள்ளுகிறோம் அல்லவா? இயேசுவானவர் தன்னை சிலுவையில் அறைந்து துன்புறுத்தியவர்களைக் கூட மன்னித்தாரென்றால் உங்களை அந்த அளவிற்கு யாரும் துன்பப்படுத்த வில்லையே!   அப்படி இருக்கும் போது divorce பண்ண நீங்கள் பிரயத்தனம் பண்ணலாமா? ஒருவரை ஒருவர் மன்னியுங்கள் என்று பவுலடியாரும் ஏழு எழுபது முறை மன்னியுங்கள் என்று முடிவில்லா மன்னிப்பின் அளவை இயேசு கிறிஸ்துவும் நமக்கு கொடுத்துள்ளாரே. அப்படி இருக்க மன்னிப்பு என்பதை சுருக்கிக் கொள்ளலாமா?

நாம் பாவிகளாயிருக்கும் போது கிறிஸ்து இயேசு நமக்கு மன்னித்திருக்கிறார் அல்லவா?   அப்படி என்றால் தவறு செய்த யாராக இருந்தாலும் அவர்களை மன்னிப்பது நமது கடமை அல்லவா!  

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Post a Comment

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி