உம் ... என்று இருக்காதீங்க


Dr. அப்துல் கலாமோடு பணிச் செய்கிறவர்கள் ஏதாவது தவறு செய்து விட்டால் அதனை கூச்சல் போட்டு பேசாமல் சிரித்துக் கொண்டே பேசி விடுவார். அதேப் போல் மற்றொரு தலை சிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தன்னுடைய சார்பு நிலைக்கோட்பாட்டைப் பற்றி மக்களுக்கு விளக்கும் போது 'ஒரு அழகான பெண்ணுக்கருகில் 2 மணி நேரம் அமர்ந்திருந்தாலும் அது 2 நிமிடமாகத்தான் தான் தெரியும். ஆனால் ஒரு சூடான அடுப்பின் மீது 2 நிமிடம் இருந்தால் அது 2 மணி நேரம் போல் தான் தெரியும்' என்று அறிவியலை இளைஞர்களுக்கு சிரிக்க சிரிக்க கூறும் பழக்கம் உடையவராக இருந்தார்.

பிறரை சிரிக்க வைத்து மக்களை தன் வசப்படுத்துபவர்கள் எல்லாம் மிக சிறந்த படைப்பாளர்களாக, திறமைசாலிகளாக, மக்களை எப்பொழுதும் தன்வசப்படுத்துகிறவர்களாகவும், பிரச்சனைகளை லாவகரமாக கையாளும் சக்தி நிறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். நகைச்சுவை உணர்வு என்பது இன்று அனேகருக்கு என்னவென்றே தெரியாமல் போய் விடுகிறது.

குழந்தைகளுக்கு ஒரு சிறிய சத்தம் கொடுத்தாலும் அதை கேட்டு உடனே சிரித்து விடும். நாம் விதவிதமாக சத்தம் கொடுக்க கொடுக்க பிள்ளைகள் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவிற்கு சென்று விடும். Sunday School  போன்றவற்றிலும் ஏதாவது சிரிப்பாக கதை சொன்னாலும், action songs போட்டாலும் பிள்ளைகள் சிரித்து மகிழுவர். ஆனால் வயதாக வயதாக  மனிதன் சிரிப்பு என்பதை தொலைத்து விடுகிறான். நாம் சிரித்தால் நம்மிடம் வேலைபார்ப்பவர்கள் சரியாக வேலைச் செய்ய மாட்டார்கள். எனவே உம் என்று தான் இருக்க வேண்டும். வீட்டிற்கு வந்தாலும் பிள்ளைகள் அல்லது மனைவியிடம் அதிகம் பேசி கல கலவென்று சிரித்து விடக்கூடாது. அப்படி சிரித்து விட்டால் யாரும் நம்மை மதிக்கமாட்டார்கள். எனவே மிகவும் கண்டிப்பாகத் தான் வீட்டில் இருக்க வேண்டும் என்று தப்பு கனக்குப் போட்டு விடுகிறார்கள். எனவே வீடு என்பது சிறைச்சாலைப் போன்று காணப்பட்டு விடுகிறது. எதற்கு வீட்டுக்குப் போகிறோம் என்று கணவன் / மனைவி / பிள்ளைகள் நினைக்கும் அளவிற்கு மகிழ்ச்சிக்கு இடம் இல்லாமல் வெறுமையாகி விடுகிறது.

கணவனின் நகைச்சுவை உணர்வு மனைவிக்குப் பிடிக்கும், கணவனின் நகைச்சுவையை ரசிக்கும் திறன் மனைவியிடம் இருந்தால் அது கணவனுக்குப் பிடிக்கும் என்று உளவியல் அறிஞர் எரிக் ப்ரெஸ்லர் கண்டு பிடித்துள்ளார். அவருக்கு கனடா நாடு. ஆனால் அது இந்தியர்களுக்கும் பொருத்தமானது தான். யாராவது எதையாவது சும்மா சொல்லிவிட்டு போய் விடுவாங்க என்று நினைக்காமல் அதை உறுதிச் செய்ய எண்ணி மற்றொரு உளவியல் நிபுணர் கில் கிரின்க்ராஸ் களமிறங்கினார். இதை 'அவன் அவள் அன்லிமிட்டெட்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் அதன் ஆசிரியர்.

கில் அப்படி என்னச் செய்தார் என்று நினைக்கிறீர்களா? அது தான் இருக்கிறதே வலைத்தளம். அதில் வலையை போலி accountகளில் விரித்தார். இதில் சில ஆண்கள் பெயரிலும், சில பெண்கள் பெயரிலும் உருவாக்கினார். அவைகள் எல்லாவற்றிலும் ஒரு 'ஜோக்’ ஒன்றை பெவிக்கால் போட்டு பேஸ்ட் பண்ணி விட்டார். ஒரு வாரம் கழித்து வலைத்தளத்தில் பார்த்தால் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆண்கள் பெயரில் போடப்பட்ட ஜோக்கை பெண்கள் வாசித்து விட்டு ஒ Super, Super என்று like வந்து குவிந்தது. ஆனால் பெண்கள் பெயரில் போடப்பட்ட ஜோக் ஒன்றையும் ஆண்கள் ஏறெடுத்தே பார்க்கவில்லை.

இதிலிருந்து கில் கண்டுபிடித்தது என்னவென்றால் ஆண்கள் எப்பொழுதுமே ஜோக் அடித்து மனைவியை/மற்றவர்களை சிரிக்க வைக்க நினைக்கின்றனர். ஆனால் பெண்கள் ஜோக் அடித்து தங்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று ஆண்கள் நினைப்பதில்லை. ஒட்டு மொத்தத்தில் தன் நகைச்சுவைக்கு மனைவி சிரித்தாலே போதும் என்று ஆண்கள் நினைக்கின்றனர் என்பது தான் உண்மை என்பதை கில்லும் கண்டுக் கொண்டார்.

ஆண்வர்க்கங்களே! எங்கேயாவது கிடைத்த பழைய மொக்க ஜோக்கை சொல்லி மனைவியை வெறுப்பேற்றாமல் timely Joke அடியுங்கள். உங்க மனைவி மகிழ்ச்சியாயிடுவாங்க.

அன்னாள் துக்கத்தோடு இருந்த போது 10 பிள்ளைகளைப் பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்று உணர்ச்சிவசப்பட்டு எல்க்கானா சொல்லுகிறான். ஆனால் அவளுக்கு மகிழ்ச்சியில்லை. (1சாமுவேல் 1:8). ஆனால் ஈசாக்கு எப்படி மகிழ்ச்சியாக ரெபெக்காளை வைத்திருந்தார் என்பதை அபிமெலேக்கு பக்கத்திலிருந்து பார்க்கவில்லை. ஆனால் தூரத்திலிருந்தே அந்த குடும்பம் மகிழ்ச்சியாய் இருக்கிறது என்பதைப் புரிந்துக் கொண்டான். (ஆதியாகமம் 26:8). கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.   சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் (பிலிப்பியர் 4:4).  

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்