எனக்கும் உன்னை பிடிக்கலை


சலோமி கண்ணீரோடு வந்து ஆலயத்தில் ஜெபித்து முடித்து விட்டு அருகே நின்று கொண்டிருந்த என்னிடம் வந்தார்கள். ஐயா எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. என் மகனை நினைத்தால் என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. சிறுவயது முதற்கொண்டே நான்தான் வளர்த்துள்ளேன். அவன் அப்பா அவன் 2 வயதாக இருக்கும்போதிலிருந்து வெளிநாட்டில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவனுக்கு இப்பொழுது வயது 16 ஆகிவிட்டது. +2 படிக்கிறான். எதற்கெடுத்தாலும் என் மீது எரிச்சலோடே நடந்து கொள்ளுகிறான். அதோடு இருந்தால் பரவாயில்லை, என்னை அவனுக்கு பிடிக்கவே இல்லையாம். என்னை பார்க்கவும் பிடிக்கவில்லை என்று என்னை பார்த்து நேரடியாகவே சொல்லுகிறான். அவன் அப்பா தான் அவனுக்கு பிடிக்கும் என்று சொல்லுகிறான். இப்படி நன்றிகெட்ட பிள்ளையை நான் வளர்த்து என்ன பயன்? இப்பொழுதே என்னை பிடிக்கவில்லை என்கிறான் என்றால் நான் இருந்து என்ன பயன்? இவனுக்காக நான் வேலைக்கே போகாமல் விழுந்து விழுந்து வளர்த்து ஆளாக்கியது எல்லாம் வீணாயிற்று என்று சொல்லிவிட்டு சிறு பிள்ளையை போல் தேம்பித் தேம்பி அழுதார்கள்.

நான் அவர்களை பார்த்து உங்கள் மகனுக்கு என்ன response சொன்னீர்கள் என்றேன்.

அந்தப் பெண், “நானும் பதிலுக்கு உன்னையும் எனக்கு பிடிக்கவில்லை. நீயும் என் பிள்ளை இல்லை. உன் அப்பாவிடம் போய் படி. நான் நன்றாக வேலைக்கு போய் மனரம்மியமாக வாழ்கிறேன் என்று சொல்லிவிட்டு கவலை தாங்காமல் தான் இப்பொழுது ஆலயத்திற்கு வந்தேன்” என்றார்கள்.

மறுபடியும் அவர்களிடம் வருத்தப்படாதிருங்கள் என்றேன். நீங்கள் உங்கள் மகனிடம், “என்னை ஏன் பிடிக்கவில்லை?” என்று கேட்டிருக்க கூடாது என்றேன்.

சலோமி யோசித்துவிட்டு, நான் அப்படி கேட்டிருக்கலாம். ஆனால் அவனுக்காக என் வாழ்க்கையையே முற்றிலுமாக கொடுத்து விட்டேன். அவன் நன்றாக இருந்தால் நான் நன்றாக இருப்பதாக நினைத்து அவன் பக்கத்திலேயே இருந்து படிக்க வைக்கிறேன். அவனுக்கு நான் செலவிட்ட என் தியாகம் வீணாய் போய் விட்டது. அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றார்கள்.

உங்கள் வருத்தம் புரிகிறது சலோமி. ஆனால் உங்கள் மகனுக்கு உங்களை பிடிக்கவில்லையா? அல்லது அவனை ஓயாமல் நீங்கள் படிக்கச் சொல்லுவது பிடிக்கவில்லையா? என்று குறுக்காக ஒரு கோட்டை போட்டு மறைத்தேன்.

சலோமிக்கு கொஞ்சம் மூளையில் பொறி தட்டியது போல் இருந்தது. முதலாவது நான் படிக்கச் சொல்வது தான் அவனுக்கு பிடிப்பதில்லை. என்னோடு கேரம்போர்டு விளையாடினால் அவனுக்கு எவ்வளவு நேரம் ஆனாலும் தெரியவே செய்யாது. என்னோடு எப்போதும் விளையாட ரெடி தான். என்னோடு ஊர் சுற்ற வேண்டுமானால் எப்பொழுதும் ரெடிதான்.

இப்பொழுது cataract ஆபரேஷனை தொடங்கினேன். உங்கள் மகனுக்கு உங்களை பிடிக்கும், நீங்கள் படிக்கச் சொல்வது தான் பிடிப்பதில்லை என்று தெளிவு படுத்தினேன்.

உங்கள் மகனுக்கு பாசம் என்பது உங்கள் மேல் குறையவில்லை என்பதை வேண்டுமானால் சோதித்துப் பாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டேன்.

சில வாரம் கழித்து சலோமி அவர்கள் மீண்டும் என்னை பார்த்து, “ஐயா என் மகனை கடந்த வாரம் முழுவதும் படிக்க சொல்லவில்லை. மிகவும் சந்தோஷமாக என்னிடம் அன்பாக பழகுகிறான்” என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டார்கள். “என்னை நேசிக்கிறான், அது போதும்” என்றார்கள்.

பிள்ளைகள் கூறும் வார்த்தைகளை நாம் வரிக்குவரி அர்த்தம் பார்க்க முற்படுவோமானால் தவறாக புரிந்து கொள்வோம். தற்பொழுது பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக படிப்பதில் நாம் நாட்டம் காட்டுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இப்பொழுது பெற்றோர் பிள்ளைகளை பார்த்து “படி” என்று சொல்வதே கெட்டவார்த்தை போல் நினைக்கிறார்கள். காரணம் அளவுக்கு மிஞ்சிய pressureயை நாம் படிப்பில் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

காற்றுள்ள பந்தை நாம் தண்ணீருக்குள் ஓயாமல் அழுத்திக் கொண்டே இருக்கிறோம். அது கொஞ்சம் விட்டாலும் மேலே வந்துவிடும். இவ்வளவு நேரம் அழுத்தியும் அது தண்ணீருக்குள் இருக்கவில்லையே என்று வருத்தப்பட முடியுமா? முடியாது. அதே போல்தான் சிறுபிள்ளைகளின் சுபாவங்கள், விளையாட்டுகள், பேசி மகிழ்வது போன்ற எல்லாவற்றையும் துறக்க சொல்லி ஒரே மூச்சாக படிக்க சொல்லுகிறோம். அது அவர்களுக்கு விருப்பமில்லை. ஆகவே நீங்கள் வேறு ஏதாவது வேலை செய்ய போனவுடன் bookயை தூக்கி மூலையில் போட்டு விட்டு விளையாட பேச ஆரம்பித்துவிடுவார்கள். காரணம் இயற்கையான மனித சுபாவ உணர்ச்சிகளை நாம் புரிந்து கொள்ளாததுதான்.

“பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல்,... வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4) என்று திருமறை கூறுகிறது. படி படி என்று சொல்வது தான் கோபத்தை மூட்டுகிறது என்றால் சற்று மாற்றி யோசியுங்கள். பிள்ளைகளுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுடன் விளையாடி, பேசி மகிழ நேரம் ஒதுக்குங்கள். அதன்பின் படிக்கச் சொல்லுங்கள். தானாக படிக்க ஆரம்பிப்பார்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி