உஸ்.... அமைதி


புதிதாக திருமணமான சுஜின், அனு மகிழ்ச்சியாக வாழ  எண்ணி புதிதாக ஒரு வீட்டை எடுத்து சென்னையில் குடியேறினர். திருமணமான உடன் மனைவி பேசுவதெல்லாம் அமைதியே உருவான சுஜீனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. என்ன எல்லா பெண்களும் இப்படித்தான் அடைமழையாக பொழிவார்களா? என்று ஆச்சரியப்பட்டான். நாட்கள் போக போக மனைவி தன்னை புரிந்துக் கொள்வாள் என்று நினைத்து துவக்க காலத்தில் தொடர் அமைதியைக் காட்டினான்.

இது ஒரு தொடக்கம் தான் இன்னும் எப்படியெல்லாம் பேசுவேன் என்பது போல் அனு உடைய நடவடிக்கைகள், பேச்சுகள் அமைந்தன. பொறுத்துப் போன சுஜின் சண்டைபிடிக்க ஆரம்பித்தான். அவள் பேசுவதற்கெல்லாம் மறுப்பு பேச ஆரம்பித்தான். “ஒருவர் பொறை இருவர் நட்பு” என்ற பழமொழி வானத்தில் பறக்க, இருவரும் பொறுக்க மனமில்லாமல் எடுத்ததெற்கெல்லாம் ஏட்டிக்குப் போட்டியாக பேசவும், செயல்படவும் ஆரம்பித்தனர்.

ஒரு நாள் பிரச்சனை பெரிதாகவே அனு அந்த ஆலயத்திலுள்ள போதகரிடம் போய் முறையிட்டாள். அவள் அந்த போதகரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். அவர் குடும்ப பிரச்சனைகளுக்கு நல்ல ஆலோசனை வழங்குபவராகவும், தேவைப்பட்டால் நாட்டு மருத்துவமுறைகளில் உதவிச் செய்பவராகவும் இருப்பதை திருச்சபை பெண்கள் மூலம் அறிந்திருந்தாள்.

பிரச்சனையின் விபரங்களை நன்றாக கேட்டுக்கொண்ட போதகர் விடைபெறும் போது ஒரு மருந்து பாட்டிலைக் கொடுத்து, “எப்பொழுதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு மூடி மருந்தை வாய்க்குள் ஊற்றிக் கொள்ளவும், பிரச்சனை முடியும் வரை வாய்க்குள்ளே வைத்திருக்கவும்” அறிவுறுத்தினார்.

வீட்டிற்கு போனவுடனே பிரச்சனை மெதுவாக ஆரம்பித்தது. உடனே ஓடிபோய் ஒரு மூடி மருந்தை எடுத்து வாய்க்குள் ஊற்றிக் கொண்டாள். ஆனால் வாயைத் திறந்தால் மருந்து வெளியே வந்து விடும் என்பதால் பேச முடியாமல் செய்கையிலேயே முடித்துக் கொண்டாள். பாட்டில் ஒரு வாரத்திற்குள் முடிந்து விட்டது.

அடுத்தவாரமும் போதகரிடம் ஓடினாள் ஐயா, “மீண்டும் ஒரு பாட்டில் மருந்தைக் கொடுங்கள்” என்றாள்.

போதகர் அவளிடம், “பிரச்சனை எல்லாம் எப்படி இருக்கிறது” என்றார். அதற்கு அவள் “ஐயா ஒரு வாரமாக நான் நிம்மதியாக இருக்கிறேன். பிரச்சனை வந்தாலும் உடனே முடிந்து விடுகிறது” என்றாள்.

போதகர் அவளிடம், "இது ஒரு பெரிய மருந்தல்ல. நீங்களே தயார் செய்துக் கொள்ளலாம். தண்ணீரும் சர்க்கரையும் தான் சேர்த்திருக்கிறேன். நீங்கள் எதிர் பேசாவிட்டால் பிரச்சனை முடிந்து விடும்” என்றார்.

உண்மையை உணர்ந்த அனு தன் கணவனிடம் சண்டை என்று வந்தால் இடத்தை காலிச் செய்து விடுவாள். பிரச்சனையும் முடிவுக்கு வந்தது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக ஆரம்பித்தது.

“பேசாதிருந்தால் மூடனும் ஞானியாவான்” என்று நீதிமொழிகள் புத்தகம் கூறுகிறது. மேலும் எதைக்காத்தாலும் காக்கா விட்டாலும் நாவைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. நாவு ஒரு தீக்குச்சிக்கு சமானம். அது ஒரு காட்டையே எரித்துவிடும் சக்தி அதற்கு இருக்கிறது. எனவே சண்டை வரும் குடும்பங்களிலெல்லாம் யாராவது ஒருவர் நாவை காத்துக் கொண்டாலே பிரச்சனை முடிவுக்கு வந்து விடும். ஒருவர் கோபப்பட்டால் அடுத்தவர் நாவை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டாலே போதுமானது.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி