வாழப் பழகுவோம்


குடும்ப வாழ்க்கையில் சிலர் கடந்த திருமணமாகாத காலத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். தான் எவ்விதமாக வாழ்ந்தேன் என்பதையே சொல்லிச் சொல்லி கணவனை பிரமிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் தான் வாழும் வாழ்க்கையை விட்டுவிட்டு இரண்டாவது திருமணம் செய்து நான் எப்படி வாழப்போகிறேன் என்று நடக்காத ஒன்றை கற்பனை செய்து குடும்ப வாழ்வை கரைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த இரண்டுமே குடும்ப வாழ்வில் சிக்கல்களை உருவாக்கி கொண்டிருக்கிறது. கடவுள் நமக்கு கொடுத்த வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் கொடுத்த கணவன்/மனைவி/பிள்ளைகளுடன் மன நிறைவோடு வாழ பழகிக்கொள்ளவேண்டும்.

ஒருநாள் புத்தர் தன்னுடைய சீடர்களுடன் நடந்து போய்க்கொண்டிருந்தார். போகிற வழியில் ஒரு மரம் நல்ல நிழலை கொடுத்துக் கொண்டிருந்தது. அதை பார்த்த உடன் சீடர்களுடன் அந்த நிழலில் அமர்ந்தார் .

ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று சொல்ல முடியுமா?என்றார் புத்தர்.

சீடர்கள் எல்லாரும் இது ஒரு எளிய கேள்வி தானே இதில் என்ன சொல்லப்போகிறார் என்று சீடர்கள் நினைத்துக்கொண்டே 70 ஆண்டுகள் என்றனர்.

புத்தர் அதனை தவறு என்று மறுக்கவே, மற்ற ஒரு சீடன் 60 என்றார்.

மீண்டும் தவறு என்றார் புத்தர்

என்ன சொல்வது என்று அறியாமல் சீடர்கள் புத்தரையே பார்த்தனர். மனிதன் 50 ஆண்டுகள் கூட வாழ இயலாதா? என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்கள்.

சற்று அமைதி காத்த புத்தர் தமது சீடர்களை பார்த்து சொன்னார். மனிதனின் வாழ்நாள் காலம் என்பது “ஒரு மூச்சு விடும் நேரம்!” என்றார்.

வாழ்க்கை என்பது ஒவ்வொரு நொடியும் வாழ்வதுதான். நடந்ததை நினைத்தோ,  வரப்போகிறதை நினைத்தோ வாழ்வை விரயம் செய்யாமல் கடவுள் கொடுத்த வாழ்க்கை துணையோடு பிள்ளைகளோடு திருப்தியாக வாழ பழகிக்கொள்ளவேண்டும். இல்லாத ஒரு வாழ்வுக்காக ஏங்கியோ, எதிர்பார்த்தோ கடவுள் தந்த வாழ்க்கையை நரகமாக்கிக் விடக்கூடாது.

"உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு."(நீதிமொழிகள் 5:15) "உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு." (நீதிமொழிகள் 5:18) என்று திருமறை நமக்கு வலியுறுத்துகிறது. வாழ்க்கை என்பது கடவுள் நமக்கு ஈவாக  கொடுத்துள்ளார். இதில் குறைகள் காணப்படலாம் ஆனால் அவைகளை எல்லாம் பெரிதாக நினைக்காமல் ஜெபத்தோடு பாரங்களை கடவுள் சமூகத்தில் தெரிவித்துவிட்டு அல்லது இறக்கி வைத்துவிட்டு மகிழ்ச்சியோடு நடப்போம். கர்த்தர் நம்மோடு இருந்து தண்ணீரைக் கடந்தாலும், அக்கினியில் நடந்தாலும் வாழ வழி கொடுத்து உதவிடுவார்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்