சிரமப்பட்டு சிகரத்தை அடை
குறுக்கு வழியில் முன்னேறுவது என்பது ஏணியில் ஏறுவது அல்ல எரிமலையில் ஏறுவது என்று ஒரு சுவரில் எழுதப்பட்டிருந்தது. காரணம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு பயின்று வந்தனர்.
இளைஞர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே வளர்க்கப்படுகிறார்கள். எந்த படிப்பை படித்தால் அதிக சம்பளம் பெறலாம் என்ற ஒற்றை சிந்தையுடனே படிக்கின்றனர். நாம் பார்க்கப்போகிற வேலையினிமித்தம் எத்தனை பேர் நன்மைப் பெறுவார்கள் என்ற சிந்தனையே இல்லாமல் போய் விட்டது. குறிப்பாக மருத்துவ படிப்புக் கூட சேவைச் செய்வதற்கு என்ன எண்ணத்தை இழந்து வருகிறது. மருத்துவம் சேவை என்ற நிலையிலிருந்து பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவருகிறது. எனவே கோடிகணக்கான பணத்தை MBBS படிப்பதற்கே செலவு செய்யும் பெற்றோர்கள் பெருகிவிட்டனர்.
எல்லா பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் தலைசிறந்தவர்களாக வந்து விட வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர கடினமாக உழைக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. அப்படியே பிள்ளைகளும், சந்தோஷமாக நேரத்தை பொழுது போக்குகளில் செலவிட வேண்டும் ஆனால் உச்சியில் அமர வேண்டும் என்று எண்ணுகின்றனர். IAS ஆக வேண்டும். ஆனால் News Paper கூட படிக்க மாட்டேன், IFS ஆக வேண்டும் ஆனால் computerல் தான் game விளையாடுவேன், உடற்பயிற்சி மேற்கொள்ள மாட்டேன் என்று எண்ணினால், எப்படி உயர்ந்த நிலையை அடைய முடியும்?.
கழுகு உயரமாக பறந்து சென்று ஒரு மலையின் உச்சியில் போய் அமர்ந்தது. அழகான தன்னுடைய கூட்டில் போய் இருக்க முயன்றபோது அருகிலே சிலந்தி ஓன்று அங்கு கூடு கட்ட அதுவும் திட்டம் போட்டது.
கழுகு சிலந்தியைப் பார்த்து, "நீ எப்படி இங்கே இவ்வளவு உயரத்துக்கு வந்தாய்", என்று கேட்டது.
சிலந்தி சிரித்துக் கொண்டே கழுகைப் பார்த்து, 'நீ கீழே இருந்து பறக்க முற்பட்டபோது என்னுடைய கூட்டில் உன் கால் பட்டு விட்டது. எனவே என் கூடு உன் கால்களில் ஒட்டிக் கொண்டதால் நானும் சேர்ந்து வந்து விட்டேன். பாவம், நீ கஷ்டப்பட்டு சிறகடித்து மேலே வந்தாய்! பார்த்தியா நான் ஈஸியா உன் காலில் அமர்ந்தே மேலே வந்து விட்டேன். இதுக்கெல்லாம் ஒரு luck வேண்டும்' என்று சொன்னது.
இப்படி பேசிக் கொண்டிருந்த போது ஒரு பலத்த காற்று வீச ஆரம்பித்தது. கழுகு அதை சமாளித்துக் கொண்டு அந்த உயர்ந்த மலையில் நின்றுக் கொண்டிருக்கும் போது சிலந்தி காற்றில் அடிபட்டு கண்கானாத இடத்தில் சுழற்றிக் கொண்டுப் போகப்பட்டது.
வாழ்க்கையில், 'குருட்டு பூனை விட்டத்தில் பாய்வது' என்பது ஒரு முறை தான். எப்பொழுதும் நமக்கு luck அடிக்கும் என்று காலத்தையும், நாளையும் ராசியையும் பார்த்து காத்துக் கிடந்தால் வாழ்க்கை பரிதாபமாக முடியும். நல்ல காலம் பிறக்கும் என்று கைரேகையைப் பார்த்து பார்த்து பல இளைஞர்கள் காலத்துக்காக காத்திருக்கின்றனர். ஆனால் கையே இல்லாதவன் உலகத்தின் உச்சியில் அமர்ந்து கண்களின் அசைவிலே கதையை நடத்தி விடுகிறான்.
யாக்கோபு என்பவர் எப்படி கடினமாக உழைத்தார் என்பதை திருமறை அழகாக விளக்குகிறது (ஆதியாகமம் 31:40,41) “பகலிலே வெயிலும், இரவிலே குளிரும் என்னை பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது: இவ்விதமாய் பாடுபட்டேன். பத்து முறை என் சம்பளத்தை மாற்றினீர்". என்று தன்னுடைய கடின உழைப்பை அவரே கூறுகின்றார். இவ்வாறு கடின உழைப்பும், இறைவனின் ஆசீர்வாதமும் இருந்ததினால் மிகப்பெரிய செல்வந்தனாக மாறினார் யாக்கோபு. உழைக்காமல் உண்ணக்கூடாது என்ற மனநிலை இளைஞர்களுக்கு வரவேண்டும். படித்து விட்டு computerல் ரம்மி விளையாடி பணம் சேர்க்கப் போகிறேன் என்று நினைக்கக் கூடாது. தவறான வழிகளில் பணம் சேர்க்க மாட்டேன் என்ற உறுதி ஒவ்வொரு இளைஞர்களும் இதயத்தில் எழுதிக் கொள்ள வேண்டும்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment