கொஞ்சம் Adjust பண்ணிக்கோங்க


ஒருவர் கோபத்திலே தன் மனைவியை அமெரிக்காவில் கொன்று விட்டார். அதை நீதிமன்றம் உறுதி செய்ததால் 21 வருடம் சிறையில் கம்பி என்ன வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்தத் தண்டனையே தனக்கு அதிகபட்ச தண்டனை என்று சிறைவாசம் செய்ய போனவருக்கு அடுத்த ஒரு அடி காத்திருந்தது.

அவருக்கு மூன்று பிள்ளைகள் முத்தாய் இருந்தார்கள். இவர்கள் தாயின் அன்புக்கு ஏங்கினார்கள். இறந்துபோன தாயின் அன்பை திரும்ப பெற முடியாததால் பிள்ளைகள் தன் தந்தை மீதே வழக்குப் போட்டனர். எங்கள் தந்தை எங்களிடமிருந்து தாயை பிரித்து எங்களை அன்புக்கு ஏங்க வைத்ததால் இவர் எங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகினர்.

நீதிபதியும் அவர்களுடைய பக்கத்தில் உள்ள நியாயத்தை கேட்டு 1,50,00,000 டாலர் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பளித்து விட்டு சென்றார். இப்பொழுது தான் மனைவியின் அருமை அவருக்கு புரிய வந்தது. பேசாமல் கோபத்தை அடக்கி விட்டு, வாலை சுருட்டிகிட்டு வெளியே போய் ஒரு டீ குடித்துவிட்டு வந்திருந்தால் கோபம் அடங்கி போய் இருக்குமே! வீணாக மனைவியை கொன்றுவிட்டு நீதிமன்றமும், சிறைத்தண்டனையும் அனுபவித்து வாழ்க்கை முழுவதுமே துன்பத்தை அனுபவிப்பது அவசியமா என்று புலம்புகிறார் அந்த மனுஷன்.

திருமறையிலும் அம்னோன் என்ற வாலிபன் ஆசைப்பட்டு தாமாரை மனைவியாக்கிக் கொள்ளுகிறான். பின்பு அவளை வெறுத்து, வீட்டை விட்டே விரட்டி விடுகிறான். நாட்கள் உருண்டது ஒரு நாளில் அவன் வாழ்வே வீணாய் போனது. (2 சாமுவேல் 12) அவசர அவசரமாக திருமணம் செய்வது, அவசர அவசரமாக பிரிந்து விடுவது என்பது, எடுத்தேன், கவிழ்த்தேன் என்று வீராப்புடன் செய்து கொள்ளலாம். இது துவக்கத்தில் பெரிய சாதனை போன்று தான் தெரியும். ஆனால் நாளடைவில் அதனுடைய பிரதிபலன் மிகவும் கசப்பாக இருக்கும்.

காவல் துறைக்கு செல்வதும், நீதிமன்றம் செல்வதும் உங்கள் கோபத்தின் வெளிப்பாடு அல்லது ஈகோவின் வெளிப்பாடு. கொஞ்சம் adjust பண்ணினால் மிகப்பெரிய வேதனையான அனுபவங்களில் இருந்து விடுபடலாம். உங்கள் பொன்னான நேரத்தை எல்லாம் நீதிமன்றத்தில் காத்துகிடப்பதிலேயும், உங்கள் பணத்தை எல்லாம் வக்கீலுக்கு கொடுத்துவிட்டு வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் போல் அலைய நேரிடும்.

மாப்பிள்ளையாக/மணப்பெண்ணாக மாலை அணிந்து வலம் வந்த நீங்கள் கை கட்டிக்கொண்டு, கும்பிடு போட்டுக் கொண்டு பரிதாபமாக வாய்தா வாய்தாவாக அலைய வேண்டுமா? கொஞ்சம் adjust பண்ணினால் கோபம் ego எல்லாம் குறைந்து விடும். மறுநாள் வாழ்வு சீராக சென்று விடும். நமது கோபமெல்லாம் மாலையில் சூரியன் மறைவதற்கு முன்பே முடிந்து போகட்டும். பேசாத மனைவியோடு/கணவனோடு சும்மா பேசிப் பாருங்கள். அவர்கள் எதிர்பார்ப்புடன் தான் இருப்பார்கள், “எப்பொழுது பேசுவார்கள் என்று”.

கோபப்படுகிறவர்களைக்காட்டிலும் முதல் முதலாவது கணவன்/மனைவியோடு பேசுகிறவர்கள் தான் குணத்தில் சிறந்தவர்கள்!

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி