நேரம் நல்ல நேரம்


ராஜேஷ் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்பொழுது அவர்களுடைய வாலிப வயது மகன், மகள் பற்றி என்னிடம் பகிர்ந்துக் கொண்டார். அப்பொழுது மகனும் நானும் பேசி 12 வருடங்கள் ஆகிறது என்று வருத்தப்பட்டுக் கொண்டார். நாங்கள் இருவரும் ஏதாவது பேசினாலே உடனே சண்டை வந்து விடும். எனவே பேசுவதே இல்லை. ஏதாவது பேச வேண்டுமானால் என் மனைவியிடம் அவன் சொல்லுவான். அதேப்போல் நான் அவனிடம் கூறவிரும்பினால் என் மனைவியின் மூலமாகவே பேசி communicate பண்ணிக் கொள்ளுவோம் என்றான்.

பிள்ளைகளிடம் படிப்பை பற்றி மட்டும் பேசினால் இப்படித்தான் சண்டை வந்துக் கொண்டே இருக்கும் என்பதை நண்பர் மறந்துவிட்டார். ஏனென்றால் பள்ளிக் கூடங்கள் எல்லாம் பிள்ளைகளை மதிப்பெண் எடுக்கவைக்கும் Computer என்று தான் நினைத்துக் கொள்ளுகிறார்கள். வாரத்தில் ஏழு நாளும் பள்ளி கூடம் நடத்த வேண்டும். 24x7 என்பது போல் பிள்ளைகள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பிள்ளைகளை பாடாய்படுத்துகிறார்கள். 

பிள்ளைகளின் மன நிலையைப் பற்றி கொஞ்சமும் அக்கரை இல்லாமல் தங்கள் பள்ளிக்கூடத்தில் படித்த பிள்ளைகள் அதிகம் பேர் மருத்துவம் படிக்கிறார்கள், உயர்ந்த  வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்பதை புகைப்படம் எடுத்து ஒட்டி அவர்கள் admission யை பெருக்குவதிலே அவர்கள் குறிக்கோளாக இருக்கிறார்கள்.

இப்படி machineஐ போல் நடத்தப்படும் மகனைப் பார்த்து நண்பர் ராஜேஸ் படிப்படி என்று வீட்டிலேயும் கூற அவனுக்கு தகப்பன் மீது கோபம் பொங்கி எழ அவன் காட்டு கத்து கத்த ஆரம்பித்தான். குக்கரில் உணவை சமைக்க அடுப்பில் வைத்தால் சூடு ஏற ஏற விசில் தான் அடிக்கும் என்ற சிறிய சித்தாந்தத்தை  ராஜேஸ் மறந்து அவர் பங்குக்கு சூடு ஏற்ற மகன் கத்த ஆரம்பித்தான் என்பதைப் புரிந்துக் கொண்டேன். அவருக்கு ஒரு உதாரணத்தை கீழ்கண்டவாறு கூற ஆரம்பித்தேன்.

ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர் அமெரிக்காவில் தன் தகப்பனார் தன்னை எப்படி வழி நடத்தினார் என்பதை பற்றி கூறினேன். அவருடைய தகப்பனார் ஒரு அழகான பரிசை தன் மகனுக்கு ஒரு நாள் வழங்கினார். அதைப் பிரித்துப் பார்க்கும் போது தகப்பனார் ஒரு துண்டு சீட்டில் "மகனே இன்று முதல் தினமும் ஒரு மணி நேரம் நான் உன்னோடு செலவிடுவேன்" என்று எழுதியிருந்தார்.

அந்த வார்த்தையின் படியே ஒவ்வொரு நாளும் என் தகப்பனார் என்னோடு ஒரு மணி நேரம் செலவிட்டு விடுவார். சில வேளை இருவரும் சேர்ந்து விளையாடுவோம், சிலவேளை அப்படியே நடந்து சென்று விட்டு வருவோம். அப்பொழுதெல்லாம் பல்வேறு காரியங்களைக் குறித்துப் பேசி மகிழுவோம். ஒவ்வொரு நாளும் என் தகப்பனார் இப்படி நேரத்தை என்னோடு செலவிட்டதால்  நான் இன்று இறைவனுக்கு பயந்தவனாகவும், புகழ் பெற்ற வழக்கறிஞராகவும் விளங்க முடிகிறது என்று பெருமைப்பட்டுக் கொள்ளுகிறார் என்பதைக் கூறினேன். 

நண்பர் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக் கொண்டார். நீங்களும் உருப்படியாக ஏதாவது உங்கள் மகனோடு நேரத்தை செலவு செய்ய யோசிங்கள் என்று கூறிவிட்டு பொறுப்பை அவரிடம் தள்ளிவிட்டு இருக்கையை விட்டு எழுந்து புறப்பட்டேன்.

காலையும், மாலையுமாகி நாட்கள் பல போய் விட்டது. ஒரு நாள் மாலை வேளை அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது புறாக்கூடு ஒன்றை தகப்பனும், மகனும் சேர்ந்து கட்டிக்கொண்டிருந்தனர். ராஜேஸ் மகனைப் பார்த்து "நீ புத்திசாலித்தனமாக கட்டுகிறாயே" என்று கூறி மகனுக்கு உதவிச் செய்துக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். உறவு முளைவிட்டுக் கொண்டிருந்தது. நான் அவர்கள் உறவு மேம்படட்டும் என்று வாசலில் இருந்தே கிளம்பி விட்டேன்.

"பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக" (எபேசியர் 6:4) என்று திருமறை கட்டளையிடுகிறது. பிள்ளைகள், எந்த வார்த்தைகளை நாம் பயன்படுத்தும் போது கோபப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து ஞானமாக பேச பழகுங்கள். நம்முடைய பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் பணியாட்களை விரட்டுவது போல் பிள்ளைகளை விரட்டுவதை தவிர்க்க வேண்டும். பிள்ளையாண்டவனை நடத்த வேண்டிய வழியில் நடத்து அப்பொழுது முதிர்வயதிலும் விடாதிருப்பான் என்று நீதிமொழிகள்  குறிப்பிடுகிறதை மனதில் வைத்து ஜெபத்தோடு அன்பை பொழியுங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி