ஆண்டவர் கவனிக்கிறார்
மனிதன் எப்பொழுதுமே பிறரின் அரவணைப்போடு, உதவியோடு வாழவே விரும்புகிறான். எவ்வளவு வயதானாலும் பேசி மகிழுவதற்கு மனிதன் மனிதனையேத் தேடுகிறான். சிலர் தங்களை யாரும் கவனிப்பதில்லை, தன்னை யாரும் கண்டுக்கொள்வது இல்லை. நான் தனிமையாய் வாழ்கிறேன். எனவே எனக்கு வாழ்க்கை வெறுப்பாக இருக்கிறது என்று சொல்வது உண்டு.
குறிப்பாக முதியவர்களுடன் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் பேசாமல், கண்டும் காணாதவர்களாக போகும் போது முதியவர்கள் தங்களை ஒரு சமூக விலங்கைப் போல் மதிக்கப்படுவதாக எண்ணி வருந்துகின்றனர். தங்களால் யாருக்கும் பயனில்லை. எனவே யாரும் தங்களைக் கண்டுக் கொள்வதில்லை என்று வேதனைப்படுகின்றனர்.
இதைப் போன்று தான் சார்னி என்ற ஒரு மனிதர் பிரான்ஸ் நாட்டில் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். அந்த நாட்களில் நெப்போலியன் மன்னராக இருந்தார். இவர் மீது நெப்போலியனுக்கு ஒரு சந்தேகம் வரவே இவரைப் பிடித்து சிறையில் தள்ளினான். மன்னரின் கோபத்துக்குள்ளானதால் யாரும் அவரைப் பார்க்க வரவே இல்லை. தனிமையில் சிறையில் வாடினார். வருத்தத்தினால் சிறையின் சுவரில் “யாரும் கவனிக்கவில்லை (No body Cares)” என்று எழுதி வைத்து வேதனையை வெளிப்படுத்தினார்.
அறையில் தனிமையை உணர்ந்து வருந்திக் கொண்டிருந்த போது அந்த அறையில் ஒரு சிறு செடி முளையிடுவதைக் கண்டார். அவர் தண்ணீர் குடிக்கும் போது அதில் சிறிதளவு அதற்கும் ஊற்றி வந்தார். அந்த செடி வளர்ந்து நீல நிறத்தில் பூக்கள் பூத்து அழகாக மலர்ந்தது. அதனைப் பார்த்து தொட்டு தொட்டு மகிழ்ந்தார். இப்பொழுது அந்த செடியுடனே நேரத்தை செலவிட்டார். ஆண்டவர் இயேசு கூறிய "காட்டு புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை… நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்..." (மத்தேயு 6:28-34) என்ற வார்த்தைகள் அவரோடு பேச ஆரம்பித்தது. ஆண்டவர் தன்னோடு இருக்கிறார் என்பதை உணர்ந்தார். முன்பு எழுதிய வார்த்தையை அழித்துவிட்டு மீண்டும் “ஆண்டவர் கவனிக்கிறார் (God Cares)” என்று எழுதி கர்த்தருக்காக காத்திருந்தார்.
நாட்கள் உருண்டோட சார்னி சிறையில் வளர்ந்த செடி பற்றி சக கைதிகளிடம் பேச ஆரம்பித்தனர். இந்த செய்தி சிறைக்கு வெளியிலும் பரவி மன்னர் நெப்போலியன் மனைவி ஜோசபின் காதுகள் வரைச் சென்று சேர்ந்தது. பெண்கள் சும்மா சாதாரணமானவர்களா என்ன? காலங்காலமாகவே பெண்கள் சிறிய அசைவுகள் முதற்கொண்டு மிகவும் alertடாக இருப்பவர்களாயிற்றே! விடுவாரா ஜோசபின். உடனடியாக அவரது மூளை கால்குலேசன் போட்டுப்பார்க்க 'சார்னி' நிச்சயமாகவே தவறு இழைக்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து தன் கணவர் நெப்போலியனிடம் நச்சரிக்க, சார்னி விடுதலையானார்.
கடவுள் தன்னோடு இருக்கிறார் என்ற உணர்வு தான் மனிதனை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைக்கிறது. மனிதர் நன்றாக இருந்தால், தேவை இருந்தால் சுற்றி சுற்றி வருவார்கள். தேவையில்லை என்றால் நம்மை மறந்தே போய் விடுவார்கள். ஆனால் ஆண்டவர் நம்மோடு இருக்கும் போது ஒரு இனம் புரியாத சந்தோஷம் நமக்குள் ஊற்றெடுத்து ஓட ஆரம்பிக்கிறது. உங்களை கர்த்தர் கவனிக்கிறார். கவலைப்படாதிருங்கள்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment