தடைகல்லா படிக்கல்லா
ஒரு நாள் ஒரு சிறு குழந்தை ஒரு கல் தட்டி கீழே விழுந்து விட்டது. உடனே அது எழும்பாமல் கீழே படுத்துக் கொண்டே அழுதது. அதைப் பார்த்த அந்த குழந்தையின் தந்தை அந்த கல்லின் மேல் இரண்டு மிதி கொடுத்து விட்டு பிள்ளையை தூக்கி விட்டு விட்டு சொன்னார், "பார்த்தாயா அதற்கு நான் மிதி கொடுத்து விட்டேன். நீயும் எழுந்து இரண்டு மிதி கொடுத்து விடு” என்றார். உடனே அதுவும் தன் பங்குக்கு இரண்டு மிதியைக் கொடுத்து விட்டு உற்சாகமாய் ஓடி விளையாட ஆரம்பித்து விட்டது. தடைக்கல்லைப் பார்த்து அழுவதா அல்லது நீ வாழ்க்கை பயணத்தை தடைச் செய்ய முடியுமோ என்று அதனை ஏளனமாக பார்த்து விட்டு நம் பயணத்தை மேற் கொள்ளப்போகிறோமா என்பது ஒவ்வொருவருடைய மன நிலையைப் பொறுத்தது.
'லௌ லிட்டில்' என்ற கால்பந்து பயிற்சியாளர் ஜார்ஜ் டவுள் பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்தனர். அவரிடம் 'ஹரால்டு சாப்மனை தெரியுமா' என்று கல்லூரி மாணவர் தலைவன் அவரிடம் கேட்டான். 'தெரியும்' என்றார் லௌ.
உடனே அந்த மாணவர் ஹரால்டுவின் தகப்பனார் இறந்த செய்தியை பக்குவமாக அவனிடம் கூறுமாறு லௌ விடம் தெரிவித்தான்.
அந்த சமயத்தில் ஹரால்டு விளையாடிக் கொண்டிருந்தான். மனதைத் தேற்றிக் கொள்ளுமாறு கூறிவிட்டு இறந்த செய்தியை அறிவித்தார் லௌ.
அடுத்த நாள் விளையாட்டிற்கு ஹரால்டு வந்து பந்தை உதைத்துக் கொண்டிருந்த போது ஆச்சரியப்பட்டார் லௌ.
ஹரால்டு ஏன் நீ ஒரு வாரம் விடுமுறை எடுத்து வந்திருக்கலாமே என்றார் லௌ.
அதற்கு ஹரால்டு, 'இன்று முக்கியமான போட்டி இருப்பதால் நான் வந்து விட்டேன்' என்றான்.
மிகவும் திறமையில்லாத ஹரால்டை, லௌ அந்த விளையாட்டில் சேர்க்கவில்லை என்பதைத் தெரிவித்தார். உடனே ஹரால்டு மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் அதிகமாக பந்து வராத இடத்தில் அவனை நிறுத்தினார்.
ஆனால் அன்று நடைப்பெற்ற ஆட்டத்தில் ஹரால்டு புயலாக மோதினான். ஆச்சரியப்பட்ட லௌ இடைவெளிக்குப் பின் முக்கியமான இடத்தை அவனுக்குக் கொடுத்தார். ஹரால்டு கோரதாண்டவம் ஆடி இரண்டு கோல்களைப் போட்டு ஜார்ஜ் டவுண் அணியை வெற்றிப் பாதைக்கு நடத்தினான்.
நடந்த போட்டியில் ஏற்பட்ட மாற்றத்தை லௌ அவனிடமே கேட்டார், 'இது எப்படி சாத்தியம்?' என்றார்.
அதற்கு ஹரால்டு, 'என் தந்தை பார்வையற்றவர். அவர் இதுவரை நான் விளையாடுவதைப் பார்த்ததில்லை. ஆனால் இப்பொழுது இறைவனின் சமூகத்திலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எனவே நான் நன்றாக விளையாடினேன்' என்றான்.
பிரச்சனைகளை நினைத்து அழாமல் அதனை எதிர்கொள்ள வழிமுறைகளைக் கற்றுக் கொள்வது தான் சிறந்தது. தாவீது ஒரு முறை போருக்குச் சென்று வரும் போது அவனுடைய மனைவி, பிள்ளைகள் எல்லாம் சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுப் போகப்பட்டிருந்தனர். அப்பொழுது பெலன் இல்லாமல் போகுமட்டும் அழுதான். இறுதியாக இறைவனிடத்தில் விசாரித்து விட்டு எதிரிகளை பின் தொடர்ந்து முறியடித்து வெற்றி வாகை சூட்டினான். உங்களுடைய பிரச்சனைகளையும் முறியடிக்க மனதில் தைரியத்தை வரவழைக்க இறைவனிடம் பிரார்த்தனையை மேற்கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு உதவிச் செய்வார்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment