பொற்பழங்கள்


அனேக குடும்பங்களில் பிரச்சனைக்குக் காரணம் நாவு தான்.  ஒருவர் பிறர் குடும்பத்தை தரக்குறைவாக பேசுவது தான் உறவை முற்றிலுமாக கொன்று விடுகிறது. கணவர் ஒரு காரியத்தை தெரியாமல் பேசிவிட்டால் அதற்கு மறுமொழி மனைவி கொடுத்தே ஆகவேண்டும் என்று நினைக்கும் போது பிரச்சனையானது உச்சத்திற்குப் போய் விடுகிறது. மனைவி வாய் தவறி ஏதாவது பேசிவிட்டால் உடனே அதற்கு விளக்கம் கேட்டு, சத்தியம் செய்ய முற்படும் போது உரையாடல் என்பது கடினமாகி விடுகிறது.   

அளவோடு எதைப்பற்றி குடும்பத்தில் discuss பண்ண வேண்டும், எதைப் பற்றி பேசக் கூடாது என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் பார்க்க ஆரம்பித்தால் புலனாய்வு செய்கிறவர்களாக மாறிவிடுவோம். குறிப்பாக சண்டைகள் வரும் போது பேச்சை முற்றிலுமாக குறைத்து விட்டு, இடத்தை காலிச் செய்து விட்டால் பிரச்சனை என்பது பெரிதாக மாற வாய்ப்புக் கிடையாது.

ஆபிரகாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை என்பது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடியதாகவும், பல விளக்க உரைகள் எழுதக்கூடியதாகவும் பிற்காலத்தில் மாறி போனது. அவர் உரை ஆற்ற ஆரம்பிக்கும் போது அவரை புகைப்படம் எடுப்பதற்கு புகைப்படக்காரர்கள் சரியாக நின்றுக் கொண்டிருக்க, எழுதுபவர்கள் எழுதுகோலையும், பேப்பரையும் எடுத்து ஆயத்தமாக்கிக் கொண்டு, நிமிர்ந்து உட்காருவதற்குள் உரையை முடித்து விட்டு இருக்கையில் வந்து அமைதியாக அமர்ந்துக் கொண்டார்.

உரையைக் கேட்டு மேஜையைத் தட்டுவதற்கோ, கைகளைத் தட்டி வரவேற்கும் அளவிற்கோ பெரிதாக அன்று அவருடைய உரை அமைந்ததாக நினைக்கவில்லை. என்னப் பேசினார் என்றுத் தெரியவில்லையே என்று எண்ண ஆரம்பித்தனர். காரணம் அவருடைய பேச்சு மொத்தத்தில் மூன்று பத்திகள் தான் அமைந்திருந்தது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்த சொற்களே 278 தான். ஆனால் கால வரலாற்றில் அது ஒப்பற்ற உரையாக இன்றும் மதிக்கப்படுகிறது.

"ஏற்றநேரத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் வெள்ளி தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்கு சமானம்" என்று நீதிமொழிகள் குறிப்பிடுகிறது. குடும்பத்தில் மனைவி/கணவன்/பிள்ளைகள் வேதனையான சூழல் வழியாகக் கடந்துச் செல்லும் போது ஆறுதலாக பேச வேண்டும்.

கோபங்கள் வரும் போது சொற்களைப் பயன்படுத்தாமல் ஊமையாக வாழ முற்பட வேண்டும். காதுகளை காது கேளாதவர்கள் போல் வைத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். நான் எந்த சூழலிலும் என் மனைவியையோ, பிள்ளையையோ, கணவனையோ புண்படுத்துக் கூடிய சொற்களை பயன்படுத்த மாட்டேன் என்று தீர்மானம் எடுங்கள். குடும்பத்தில் அமைதி தென்பட ஆரம்பிக்கும். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்