எப்பொழுது சுனாமி வரும்?


குடும்ப வாழ்வில் கணவன் மனைவி இருவரும் ஒருமித்து 7 ஆண்டுகள் வாழ்ந்து விட்டால் அவர்கள் குடும்பம் ஏறக்குறைய சரியாக கரை போய் சேர்ந்து விடும். அதற்கு இடையிலே சுனாமி வீசி பிரிந்துப் போகக் கூடிய சூழல் வருமானால் காப்பாற்றி சேர்த்து வைக்க முற்பட வேண்டும். அவ்வாறு சேர்த்து வைத்து 7 வருடம் தள்ளிவிட்டால் அப்புறம் தடம் புரளாமல் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியாவிலிருந்து வெளிநாடுகள் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. குறிப்பாக அமெரிக்க ஐக்கிய தேசத்தில் 2010 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரத்தை நாம் வாசிக்கும் போது அப்பாடா நாம பரவாயில்லை போலிருக்குது என்போம்.

திருமணமாகி ஆனந்தமாய் 5 வருடம் வாழ்ந்து மகிழ்ச்சியோடு இருப்பவர்கள் 82%, சரி கொஞ்சம் சேர்ந்து வாழ்ந்து தான் பார்ப்போம் என்று 10 ஆண்டை நிறைவு செய்பவர்கள் 65%, 25 வருடம் வரை வாழ்ந்து வீரசாகசம் புரிபவர்கள்  33% பேர் தான், திருமணம் என்ற மல்யுத்தத்தில் இறுதி வரை போராடி இணை பிரியாமல் வந்து சேர்வது 5% மட்டும் தான்.

தற்பொழுது திருமண வாழ்வில் 53% பேர் அமெரிக்காவில் விவாகரத்தை பெற்று விடுகிறார்கள். இவர்களில் 7 வருடம் வரை நீடிப்பது தான் அதிகபட்சம்.

இப்படி திருமண முறிவுகள் என்பது எப்பொழுது என்ன காரணத்தினால் ஏற்படும் என்று முன் கூட்டியே கூற இயலாது. சூழல்கள் நிமித்தமாக முன் பின் சொல்லாமல் சுனாமி வந்து விடுவது போல் சில வேளை வந்து விடுகிறது. அதுவும் ஹென்றி போர்டின் வாழ்க்கையில் கூட சுனாமி வர அதை லாவகமாக கையாண்டு கரைசேர்ந்தது ஆச்சரியமாகவே  இருக்கிறது.

ஹென்றி போர்டின் மகன் ராடல் திடீரென்று மறைந்து விட்டார். கம்பெனியை எப்படி எடுத்து நிறுத்துவது என்று யோசித்தவர் தன்னுடைய மேனேஜரிடம் ஒப்படைத்தால் புத்திசாலித்தனமாக கொண்டு செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்து அதனை அவர் மனைவியிடம் கூறினார்.

அந்த அம்மா கிளாரா போர்டுக்கு எங்கு தான் இந்த கோபம் இருந்ததோ தெரியவில்லை.   சுனாமி போல் அலை அலையாக அவரை தாக்க நிலை குலைந்துப் போனார். இந்த முடிவை மாற்றாவிட்டால் தான் திருமண முறிவு பெற்றுக் கொள்ளப் போவதாக கூறினார்.

இங்கு தான் போர்டு சுதாகரித்தார். அப்பொழுது வயது அவருக்கு 73. எதையும் யோசிக்காமல் தன் பேரன் ஹென்றி போர்டு விடம் ஒப்படைத்தார். அப்பொழுது பேரனுக்கு 27 வயது தான் ஆகியிருந்தது. ஆனால் கம்பெனி மட்டும் காப்பாற்றப்படவில்லை குடும்பமும் சேர்ந்தே காப்பாற்றப்பட்டது. 

சிலவேளை சுனாமி வந்தால் நன்மையும் கிடைக்கத்தான் செய்கிறது. ஆபிரகாமும், சாராளும் கூட மிகுந்த வயதான பின்பும் சண்டை வந்து இருக்கிறது. முடிவெடுக்க முடியாமல் ஆபிரகாமும் தடுமாறுகிறார் (ஆதியாகமம் 2:8-13). ஆபிரகாமின் பார்வையில் சாராள் சொல்லுவதை ஏற்கமுடியவில்லை. அது அவனுக்கு மிகுந்த துக்கத்தை கொடுத்தது. ஆனால் இந்த சுனாமியில் ஆபிரகாமின் குடும்பம் சிக்கி சிதறாமல் பாதுகாக்க கர்த்தரே இறங்கி வந்து ஆலோசனையை ஆபிரகாமுக்கு வழங்கினார். ஆகவே இப்பொழுது சுனாமியின் சூழலில் சிக்கியிருக்கிறவர்கள் கர்த்தரிடம் முறையிடுங்கள். முடிந்த அளவிற்கு விட்டுக் கொடுத்து விடுங்கள். நீங்கள் சொல்வது, செய்வது சரியாக இருந்தாலும் கொஞ்ச காலத்திற்கு விட்டுக் கொடுத்து விடுங்கள். கர்த்தர் மீண்டும் நல்ல மாற்றத்தை உங்கள் துணைக்கு கொடுப்பார் என்று காத்திருங்கள். சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாகவே கர்த்தர் மாற்றித்தர வல்லவர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நீந்தி வெளியே வாருங்கள், போகும் தூரம் வெகுதூரம் கர்த்தர் உங்களோடு பயணிக்க காத்து நிற்கிறார்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி