இவர்கள் கலகக்காரர்களா?


அமெரிக்காவில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அது அதிர்ச்சியைக் கொடுக்கிறதாக அமைந்தது. திரைப்படங்களில் வரும் பிரபலங்கள் போன்றவர்கள் 77% டீன் ஏஜ் பெண்களுக்குள் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளனர். பிரபலங்களைப் போல் தாங்கள் இல்லையே என்று 13 வயதில் 53% பேர் வருந்துகின்றனர்.

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் தான் யார், என்னவாக நான் மாற வேண்டும் என்பதிலே குழம்பிக் கொண்டே இருப்பார்கள்.   இந்த ஒரு வருஷம் ஒரு Ambition, அடுத்த வருடம் ஒரு Ambition என்று மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

தங்கள் image யையும் உலகிற்கு காட்டுவதில் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.   கூடுமானவரை விலை உயர்ந்த cell, dress, bag, bike  வேண்டும் என்று அடம்பிடிப்பர். இது இல்லையென்றால் பள்ளிக்கு, கல்லூரிக்குப் போகமாட்டேன் என்று உறுதியாக இருப்பார்கள். தலை முடியை எப்படி எல்லாம்  style ஆக மாற்ற முடியுமோ அப்படி மாற்றி, கலர் டை அடித்து தானும் பிரபலமானவன்/ள் என்று உலகிற்கு காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். இளைஞர்கள் கைகளில் காப்பு, சங்கிலி அல்லது பேண்ட் எதையாவது அணிந்து தன் imageயை பிரபலங்கள் போல் மாற்றிக் காட்ட விரும்புகின்றனர். இவ்வாறு டீன் ஏஜ் பிள்ளைகள் மாறும் போது நல்ல பக்தியான குடும்பங்களில் பிரச்சனைகள் தலைக்கு மேல் போய் விடுகிறது. பிள்ளைகளும், பெற்றோரும் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளுகின்றனர். பேச்சுவார்த்தை முற்றிலும் நின்று விடும் நிலைமைக்கு சென்று விடுகிறது. அப்படித்தான் உவில் லாங்நெக்கர் என்ற மிஷனெரியின் குடும்பத்திலும் நடைப்பெற்றது. இவருக்கு ஐந்து பிள்ளைகள். அதில் மூத்தவன் ப்ராட். 15 வயதாகும் போது தன் தந்தையுடன் ஊழியத்திற்கு செல்வதற்கு மறுக்க ஆரம்பித்தான் .

உவில் “நானும், என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” என்று உறுதியோடு இருந்தவர்.  ஆனால்  ப்ராட் 15 வயதாகும் போது முடியை வேறு விதமாக style ஆக வெட்டிக் கொண்டான். அவன் வாயிலிருந்து வெளிப்பட்ட பாடல்கள் உவிலுக்கு வெறுப்பாக இருந்தது. ப்ராடின் நண்பர்கள் அவனை வேறு வழிக்கு அழைத்துச் செல்வதை உவிலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மகன் மீது கோபப்படவும், எரிச்சலைக் கக்கவும் செய்தார். பதிலுக்கு ப்ராட் பணிய மறுக்க ஆரம்பித்தான். இதனால் வீட்டிற்குள் மனக்கசப்பு ஆரம்பித்தது.

உவில் கடவுளுடைய சந்நிதியில் மனங்கசந்து தன் மகனுக்காக அழுதார். அப்பொழுது ஆண்டவர் உவிலோடு பேசினார். உவில், "நீ உன் மகனை முழுமனதோடு ஏற்றுக்கொள்,   அவனை குற்றவாளிப் போன்று நடத்தாதே, அன்பைத் துண்டிக்காதே, முன்பு போல் உன் மகனை அரவணைத்துக்கொள். நீ தவறான வாழ்வு வாழும் போது உன்னை நான் அணைத்து கொண்டது போல் அணைத்துக் கொள்", என்றார்.

உவில் கடவுளுடைய வார்த்தைப்படி மகனிடம் அன்போடு பழகி, அரவணைத்தார். இதை சற்றும் எதிர்பாராத பராட் தன் தந்தையின் அன்பின் அரவணைப்பில் சிக்கித் தவித்தான்.    உவில் கண்ணீர் விட, ப்ராடும் கண்ணீர் விட ஆரம்பித்தான். மனக்கசப்புகள் எல்லாம் இருவரிடமும் கரைந்துப் போனது.

ப்ராட் தன் தாய் ரோதாவிடம் ஓடினான் கட்டி அரவணைத்துக் கொண்டு தன் வாழ்க்கைக்காக மன்னிப்புக் கேட்டான். இனி உங்களுக்கு விரோதமாக கலகம் செய்ய மாட்டேன் என்று தேம்பி தேம்பி அழுதான். ப்ராட் வாழ்க்கை மாறியது. குடும்பத்தில் மகிழ்ச்சி வந்தது.

இதைப் போன்று நம் பிள்ளைகளுடன் மோதல்கள் ஏற்படும் போது எப்படி அவர்களுடன் பேச என்று நினைக்கலாம்? பொதுவாக அனுதின நியூஸ் பேப்பரில் வரும் பிரபலங்களின் பிரச்சனைகள் குறித்து discuss பண்ணலாம். அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனையால் நாம் கற்றுக் கொள்ளும் பாடத்தைக் குறித்து  பேசலாம். இவைகளுக்கெல்லாம் நாம் எந்த விதிமுறைகளையும் வைத்து பேச முடியாது.   குடும்பமாக பேசி கொண்டிருக்கும் போதே இவைகளை இடையில்  விட்டு விட வேண்டும் அவ்வளவு தான். நல்ல முடிவுகள் எடுப்பதற்கு நாம் உதவிட தான் முடியுமே தவிர நாம் முடிவுகள் எடுத்துக் கொடுத்து விடக் கூடாது. அப்படி கொடுப்பதால் அது பயன்தராது.   எல்லாவற்றிற்கும் மேலாக நாம் நமது பிள்ளைகளை இறைவனிடம் ஒப்படைத்து ஒவ்வொரு நாளும் அவர்களுக்காக மன்றாடுவோம். இறைவன் அவர்களை வழிநடத்துவார்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்