கீழ்படியலாமா?
குடும்ப வாழ்வில் அனுசரித்துச் செல்ல, ஒருவர் சொல்வதை மற்றவர்கள் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? அப்படி பிறர் சொல்வதைக் கேட்பதால் நாம் தரத்தில் குறைந்தவர்களாக மாறிவிடுகிறோமா?
கணவன்/மனைவிச் சொல்வதின் படி நடக்க கூடாது என்று நினைப்பவர்கள் court சொல்லுகிறபடியெல்லாம் வாய்தா வாய்தாவாக கீழ்படிந்து போகிறார்கள். அழைக்கும் போதெல்லாம் தவறாமல் ஆஜராகிறார்கள். இன்று கீழ்படிவதால் லாபம் இருக்கிறதா அல்லது நஷ்டம் இருக்கிறதா என்பதை சிந்தனை செய்து நலமானதை எடுத்துக் கொள்ளுங்கள்.
எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்ற இரண்டாம் எலிசபெத் 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பிறந்தவர். 61 ஆண்டுகளாக நெருங்காலமாக ஆட்சி புரிந்தவர். 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராக விளங்கியவர். 1953ம் ஆண்டு இவருக்கு முடிசூட்டும் விழா நடைப்பெற்ற போது முதன் முதலாக தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. எலிசபெத் அம்மையார் 1947ல் எடின்பரோ கோமகன் பிலிப்பை திருமணம் செய்துக் கொள்ள தேவாலயத்திற்குள் சென்றார். திருச்சபையின் ஒழுங்கின் படி மணமகள் மணமகனிடம் உமக்கு கீழ்படிந்து நடக்கவும் வாக்குக் கொடுக்கிறேன் என்று சொல்வது வழக்கம். ஆனால் மகாராணியாக இருப்பதால் அந்த வார்த்தையைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கீழ்படிந்து நடப்பேன் என்பதையும் சேர்த்து வாக்குக் கொடுத்தார். இவர்கள் வாழ்க்கையில் கடவுள் நான்கு பிள்ளைகளையும், எட்டு பேரக்குழந்தைகளையும் கொடுத்து ஆசீர்வதித்தார். உயர்ந்த நிலையில் இருந்தாலும் இவர்கள் கணவன், மனைவியிடையே நல் உறவை வளர்த்துக் கொண்டனர்.
எவ்வளவு தான் உயர்ந்த நிலைக்கு சென்றாலும் கணவன் மனைவி என்ற உறவில் அனுசரித்துப் போகுதலும், ஒருவர் கூறுவதை மற்றவர் கேட்பதும், கீழ்படிந்து நடப்பதும் தவறு அல்லது அவசியம் இல்லை என்று நினைத்தால் குடும்ப வாழ்க்கையின் அஸ்திபாரம் அசைந்துவிடும்.
பள்ளிப்படிப்பை முடிந்த இளம்பெண் டயானா ஃபிரான்ஸஸ் ஸ்பென்சர் நைட்ஸ்ப்ரிட்ஜில் உள்ள கிண்டர்கார்டனில் உதவிக்காரியாகவும், சமையல் செய்பவராகவும் பின்னர் உதவியாளராகவும் பணி புரிந்தவர். நாளடைவில் வேல்ஸ் இளவரசரிடம் நட்புக் கொண்டது பின்னர் திருமண வாழ்வுக்கு நேராக போய் நின்றது. 1981ம் வருடம் பிப்ரவரி 24ல் திருமணம் தூய பவுல் தேவாலயத்தில் நடைப்பெற்றது. அதில் பயன்படுத்திய மோதிரத்தின் மதிப்பு 30,000 பவுண்ட். 10 மீட்டர் நீளம் கொண்ட திருமண உடுப்பு உடுத்திக் கொண்டு ஆலயத்திற்குள் நுழைந்தார். அப்பொழுது வயது 20. கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் கண்டு மகிழ்ந்தனர். ஏறக்குறைய 6 லட்சம் மக்கள் பங்கிங்காம் அரண்மனையிலிருந்து தேவாலயம் வரை நின்றுக் கொண்டிருந்தனர். அப்படி விமர்சனையாக கொண்டாடப்பட்ட திருமண ஆராதனையில் 'கீழ்படிவேன்' என்ற வாக்குறுதியை சொல்வதைத் தவிர்த்தார். குடும்ப வாழ்க்கை பயணமாகிக் கொண்டிருந்தது.
1992ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தபோது டயானா மட்டுமே வந்திருந்தார். தாஜ்மகால் எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். தனியாக வந்த காரணம் வாழ்க்கையில் விரிசல் விழ ஆரம்பித்தது, தடம் புரள ஆரம்பித்தது. 1997ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ம் தேதி தோதி அல்பயத்துடன் விருந்தை முடித்து விட்டு ஆடம்பர வாகனத்தில் ஏறி பறந்து சென்ற போது விபத்தில் வாழ்க்கையைத் தொலைத்தார்.
நாம் நினைக்கிறோம், வாழ்க்கையில் தான் என்ன தவறுச் செய்தாலும் கணவன்/மனைவி கண்டிக்கக்கூடாது. தான் மனம் போன போக்கில் வாழ்வதற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது என்று எப்பொழுது நாம் நினைக்கிறோமோ அப்பொழுதே நமது குடும்பவாழ்வில் மோதல்கள் எழ ஆரம்பித்துவிடுகிறது. நாம் நம் சுயநலத்திற்காக கணவனை/மனைவியைக் குற்றம் சாட்டி, தன் மீது வீணான சந்தேகப்படுவதாகவும், மிகவும் கட்டுப்படுத்தி கொடுமைப்படுத்துவதாகவும் கூறிக்கொள்ளலாம். பெற்றோரை, நாம் செய்வது தான் சரி என்று நம் வழிக்குக் கொண்டு வரலாம்.
தாவீது பத்சேபாளை எடுத்துக் கொண்ட போது மிகவும் திறமையாக செய்தது போல் நினைத்துக் கொண்டான். ஆனால் நாத்தான் இறைவாக்கின் தவறை சுட்டிக்காட்டிய போது தவறை ஒத்துக் கொண்டான். மனம் வருந்தினான். ஆகவே இறைவன் அவனோடு இருந்தார். அனேக அரசர்களுக்கு நல்ல மாதிரியாக வாழ்ந்தான். என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று ஆண்டவரால் பாராட்டப்பட்டவர் வாழ்க்கையில் தவறு செய்வது மனிதனின் இயல்பாகக் கூட இருக்கலாம். ஆனால் திருந்தி வாழ்வது, புரிந்து வாழ்வது, விட்டுக்கொடுத்து வாழ்வது, கீழ்படிந்து வாழ்வது என்பது நமது maturityயைப் பொறுத்தது.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Very useful message
ReplyDelete