Home Accident




மலைவாழ் மக்களிடையே பணிச்செய்வதற்காக இந்தியாவின் வட மாநிலப் பகுதிக்கு ஒரு குடும்பத்தினர் விருப்பப்பட்டு சென்றிருந்தனர். மக்களோடு மக்களாக பழகி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். ஒரு நாள் அவரின் மனைவி தண்ணீர் எடுப்பதற்காக அருகில் உள்ள ஓடை பகுதிக்கு சென்றிருந்தார்.

திடீரென்று மூச்சு இறைக்க ஓடி வந்தார். செத்தோம் பிழைத்தோமென வந்த அவர் வீட்டில் உள்ள கட்டிலில் அப்படியே விழுந்து விட்டார்.

என்ன என்ன நடந்ததென்று அவர் கணவர் கேட்க, மனைவி வாயிலிருந்து பூ...பூ.. என்று சொன்னாரேயன்றி வேறு ஒரு வார்த்தையும் வரவே இல்லை. என்ன நடந்ததென்று அவரால் சொல்லவும் முடியவில்லை. கண்களை மூடிக்கொண்டு வேர்த்து வியத்தவராக படுத்துக் கொண்டாள்.

சில மணி நேரத்திற்கு பின்பு ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் எழுந்து உட்கார்ந்தார். தான் தண்ணீர் பிடிக்கப் போன ஓடையில் ஒரு புலிப் படுத்திருப்பதை அறியாமல் அருகில் போய் விட்டாள். பின்பு சுதாகரித்துக் கொண்டு தலை தெரிக்க உயிரைப் பிடித்துக் கொண்டு ஒடி வந்துள்ளாள்.

இப்படிப்பட்ட சூழல்களில் மனிதர்களை காத்துக் கொள்வதற்காக உடலில் ஹார்மோன்கள் சுரக்கிறது (Adrenaline Cortisol). இவைகள் தான் மனிதனுக்குள் சில மாற்றங்களை உருவாக்கி உடலை ஒரு வழிப்படுத்தி விடுகிறது. குறிப்பாக பிரச்சனையைப் பார்த்த உடன் இதயதுடிப்பு பட பட வென்று அடிக்க, தசைகள் எல்லாம் இருகி, ரத்த அழுத்தம் குபிரென்று அதிகரிக்க, மூச்சு இரைக்க  great escape என்று மூளை வேலைச் செய்து நம்மை காப்பாற்றி விடுகிறது. ஆனால் நேரம் ஆக ஆக இவை எல்லாம் ஒன்றுமில்லை என்று உடல் பழைய நிலைக்கு வந்து விடுகிறது.

ஆனால் Lock-down போன்ற நேரங்களில் வீட்டிற்குள்ளேயே computerல்  வேலைச் செய்துக் கொண்டிருக்க வேண்டிய சூழல் அநேகருக்கு ஏற்பட்டு விட்டது. இதனால் கொஞ்ச நேரமாவது வெளியே பயணப்பட்டு பலரைப் பார்த்து Hello சொல்லி, ஜோக் அடித்து, வம்பு இழுத்து, பப்ஸ், Tea என்று எதையாவது சாப்பிட்டு விட்டு பைக்கிலோ, பஸ்ஸிலோ போய் விட்டு வருவது தடைபட்டு விட்டது. முன்பு இவையெல்லாம் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தது. ஆனால் lock down முடிந்தாலும் Companyகள் இன்னும் வீட்டிலேயே இருந்து பணிச்  செய்ய சொல்வதால் மோதல்கள் வெளியே நடக்காமல் வீட்டிற்குள்ளேயே நடக்க ஆரம்பித்துவிட்டது. வெளியே போனால் கொஞ்சம் Careful ஆக இருந்தால் போதும் விபத்தை தவிர்க்கலாம். ஆனால் வீட்டிற்குள்ளே கணவன், மனைவி, மாமியார், மாமனார், பிள்ளைகள் மத்தியில் தினசரி பல accident நடந்து காயங்கள் மன அளவில் ஏற்பட்டு விடுகிறது.                                         

மன காயங்கள் ஆறுவதற்கு நேரம் எடுப்பதற்குள்ளாக அடுத்தடுத்த மோதல்கள் பல திசைகளில் ஏற்பட்டு பல குடும்பங்கள், தனி நபர்கள் பாதிப்புக்குள்ளாகி விடுகின்றனர். ஆனால் டிங்கரிங் ஒர்க் செய்ய தான் யாரும் விரும்புவதில்லை. எனவே ஓட்டை உடைசல் சப்பல்களோடு வண்டி ஓடி ஓடி பல ஆபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது. பல குடும்பங்கள் படாத பாடு பட்டு வருகிறது. எப்போது company க்கு போய் வருவோமோ என்று பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு எப்படித்தான் தீர்வு என்று நினைக்கலாம். திருமறையில் ஈசாக்கு தன் தாய் இறந்ததினால் மிகவும் துக்கமாக இருந்தான். (ஆதியாகமம் 24:63-67). இந்த சூழ்நிலையில் சாயங்கால வேளையிலே தியானம் பண்ண வெளியே போனான் என்று ஈசாக்கை பற்றி குறிப்பிட்டுள்ளது. துன்பம் வரும் போது stress வரும்போது வீட்டிற்குள்ளே இருந்தால் அதை தொடர்ந்து நினைத்து நினைத்து மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஆனால் அவைகளில் இருந்து வெளியே வர கொஞ்சம் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டியது மிகவும் முக்கியம்.

மன அழுத்தத்தை தொடர்ந்து computer வழியாக பெற்றுக் கொள்பவர்கள் தொடர்ந்து அதிலேயே chatting பண்ணவும், game விளையாடுவதையும் தவிர்த்து விட்டு கொஞ்ச நேரம் அப்படியே அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வந்தால் அதுவே உள்ளத்திற்கு ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

வயதானவர்கள் கூட தனிமையில் இருப்பதினால் ஆலயங்களுக்கு காலை, மாலைச் செல்லும் போது புத்துணர்ச்சியைப் பெற்றுக் கொள்வது இயற்கை. இவைகளை நாம் விட்டு விடுவதினால் stress என்பது பல்வேறு துன்பங்களுக்குள் நம்மை இழுத்துக் கொண்டு வந்து விடுகிறது.

சிறிய விளையாட்டுகளை உடலை வறுத்தியோ, வறுத்தாமலோ பிள்ளைகளோடு, கணவனோடு, மனைவியோடு, அல்லது நண்பர்களோடு நேரம் கிடைக்கும் போது விளையாடலாம். வழியில்லையென்றால் பிடித்த பாடல்கள், இசைகள் கேட்கலாம் அல்லது பாடலாம். 

இறைவன் நாம் மகிழ்ச்சியோடு வாழவே விரும்புகிறார். அவர் மேல் நம் பாரங்களை, வருத்தங்களை இறக்கி வைத்து விடுவோம். அவரே நம் பரிகாரியாகிய கர்த்தர்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி