Facebook காதல் Painful காதல்
திடீரென்று பின் இருக்கையில் இருந்தவர் கத்தியை நண்பரின் கழுத்துக்கு நேராக நீட்டி வண்டியை ஓரமாக நிறுத்து என்றார். அவர் அணிந்திருந்த மோதிரம், செயின், Cell எல்லாவற்றையும் வாங்கிவிட்டு, அவரது bikeயையும் எடுத்துக்கொண்டு,'சத்தம் போட்டால் குத்தி கொன்று விடுவேன்' என்று கூறிவிட்டு சிட்டாய் மறைந்துப் போனான். முன் பின் தெரியாத நபரை வாகனத்தில் ஏற்றுவதில் இவ்வளவு சிக்கல் இருக்கிறதென்றால் வாழ்க்கை பயணத்தில் facebook மூலம் தொடர்பு கொள்ளும் நபர்கள் எவ்வளவு கொடூரமானவர்களாக இருப்பார்கள் என்பதை உணர்த்துமாறு கேரளாவில் ஒரு சம்பவம் நடந்தது.
பாலக்காடு பகுதியில் வசித்த ஒரு இளைஞர் வயநாடு மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரி மாணவியுடன் facebook மூலம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். நட்பு வரம்பை மீறி ஒருவரை ஒருவர் விரும்ப ஆரம்பித்தனர். வாழ்க்கை இனிதாக அமையப்போகிறது என்று இளைஞன் அந்த கல்லூரி மாணவியிடம் உள்ளத்தை பறிகொடுத்தான்.
இச்சூழலில் அந்த கல்லூரி மாணவி அவனிடம் பேசுவதை நிறுத்த ஆரம்பித்தாள். இந்த இடைவெளியை அவனால் சகிக்க முடியவில்லை. வெறுமையாக உணர்ந்தான். தன்னோடு பேசாததால் ஆத்திரம் ஆத்திரமாக அவனுக்கு வந்தது. அவளை எப்படியாவது பார்த்து பேசி விட வேண்டும் என்று துடியாய் துடித்த அவன் அவள் கல்லூரிக்குச் சென்று வரும்போது அவளை சந்திக்க காத்திருந்தான்.
வாழ்ந்தால் அவளோடு, இல்லையென்றால் அவள் யாரோடும் வாழக்கூடாது என்ற வக்கிர எண்ணத்தோடு போய் நின்றான். பேசினான். அந்த கல்லூரி மாணவி பேசாமல் போனபோது வலிந்து பேசியும் அவள் பேசாததால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவள் முகத்தில் சரமாரியாக குத்தி தன் உணர்வை தீர்த்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினான். பின்னர் அவனும் தற்கொலைக்கு முயன்றான்.
சமூக வலைத்தளத்தில் வரும் நட்பு என்பது முன்பின் தெரியாமல் வளர்த்துக் கொள்ளுகிற நட்பு. எந்த புற்றுக்குள் எந்த பாம்பு இருக்கும் என்று தெரியாது. வெளுத்ததெல்லாம் பால் என்று பருகினால் வாழ்க்கை பாழாகி விடும். நட்பு என்ற பெயரிலே பெண்கள் புகைப்படம், சுய விபரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதைப் பெண்கள், கல்லூரி மாணவிகள் தவிர்க்க வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் அவர்கள் சமூக வலைத்தள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்கள். முகமூடிகளுடனே பலர் டிப்டாப்பாக வலைத் தளத்தில் வலம் வருகின்றனர்.
திருமறையில் யாக்கோபு ராகேலை விரும்பினான். ஏழு வருடம் அவளுக்காக கடுமையாக உழைத்து பாடுபட்டான். ஆனால் அவளின் தகப்பனார் திருமணத்தின் போது அவளை ஏமாற்றி அவளின் சகோதரியை யாக்கோபுக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்து விட்டான். அதற்காக மாமனாரிடம் வாக்குவாதம் பண்ணினான். இன்று வாக்குவாதத்தோடு முடிவதில்லை, முகத்தில் acid ஊற்றுவதும், கத்தியால் கோரமாக குத்தி சித்திரவதைச் செய்வதும், தனக்கு மனைவியாக வராதவள் உயிரோடே இருக்கக்கூடாது என்று கொலைச் செய்வதையும் அடிக்கடி நாம் பார்க்கிறோம். நான் விரும்புகிறவன்/ள் மிகவும் நல்லவன்/ள் என்று எல்லாரும் நம்புகிறார்கள். ஆனால் பால் ஊற்றி வளர்த்தாலும் பாம்பு நிச்சயம் தீண்டத்தான் செய்யும் என்பதை உணர்ந்து பாம்போடு பழகுவதை தவிர்க்கத்தான் செய்ய வேண்டும். எனவே நாம் வலைத்தளத்தில் வரும் உறவை அளவோடு வைத்துக் கொள்வது தான் நல்லது.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment