வாழ்க்கைக்கு யார் முன்மாதிரி?


ஏறக்குறைய 55 வயது நிறைந்த ராஜு திருமண சான்றிதழ் பெறுவதற்காக வந்திருந்தார். இவ்வளவு வயதிற்குப் பின் எதற்காக வாங்குகிறார்கள் என்று யோசித்தேன். ஏனென்றால் அவருடைய பிள்ளைகளுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது.

Sir, என்ன விஷயமாக திருமண சான்றிதழ் வாங்க வந்துள்ளீர்கள் என்றேன்? அவர் சிரித்துக்கொண்டே திருமணவாழ்வு போர் அடித்து விட்டது. அதனால் divorce வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்றார்.

எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் சில வருடங்களுக்கு முன் அவர் accident ஆன போது அவருடைய rare blood group கிடைக்காத சூழலில் அவருடைய மனைவியே இரத்தத்தை கொடுத்து காப்பாற்றினார்கள் என்பது எனக்கு நினைவில் இருந்தது.

ராஜு தன் குடும்ப பிரச்சனையை எடுத்துக் கூறினார். அப்போது ஒரு சம்பவத்தை நான் அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.

ஒருமுறை D.L மூடி என்ற ஊழியரின் மனைவி அவரிடம் வந்து நம்முடைய பகுதிக்கு மூர் ஹவுஸ் என்ற ஊழியர் வந்திருக்கிறார். அவர் கடவுள் எவ்வளவாய் அன்புகூர்ந்தார் என்று ஒவ்வொரு நாளும் பேசுகிறார். போய் பார்த்துவிட்டு வருவோமா? என்று கேட்டார்.

D.L மூடி மிகப்பெரிய ஊழியராக அப்போது திகழ்ந்தவர். தனக்குத் தெரியாததையா இந்த இளம் வயது பையன் சொல்லப் போகிறான் என்று சீப்பாக நினைத்துக் கொண்டு வர விருப்பம் இல்லை என்றார். இன்றைக்கு கடவுளின் நியாயத்தீர்ப்பை கூறி மக்களை கடவுளிடம் திருப்புவது தான் இன்றைய தேவை என்று உலகெல்லாம் நான் சொல்லி வருகிறேன். இவன் கடவுளின் அன்பைப் பற்றி சொல்லி மக்களை எப்படி கடவுளிடம் திருப்புகிறான் என்று தன் மனதுக்குள் சொல்லி கொண்டார்.

சில பெண்கள் எப்பொழுதும் எடுத்த முடிவில் உறுதியாய் இருப்பார்கள். சிம்சோனே பலசாலியாக இருந்தாலும் தனக்கு வரப்போகிற மனைவியின் நச்சரிப்பை தாங்க முடியாமல் விடு கதையை அவிழ்த்து விட்டு விட்டான். அப்புறம் என்ன D.L மூடி.

கடைசி நாள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மனைவியோடு போய் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார். அன்று கடைசி நாள் கூட்டம். மூர் ஹவுஸ் என்ற இளம் ஊழியர் மேடையில் ஏறிய போது இந்த பொடிப்பயல் என்ன சொல்லப் போகிறான் என்று கால் மேல் காலைப் போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்.

மூர் பேச ஆரம்பித்தார். அன்பிற்குரிய மக்களே இறைவனின் அன்பை எடுத்துக்கூற ஒவ்வொரு நாளும் முயன்று கொண்டிருக்கிறேன். ஆனால் என்னால் விவரித்து சொல்லி விட முடியவில்லை. ஒருவேளை இன்றும் ஆண்டவரின் அன்பை புரிந்துகொள்ள காபிரியேல் தூதனை அழைத்துக் கேட்டால் அவர் என்ன சொல்லுவார் தெரியுமா? “தேவன் தம் ஒரே பேரான குமாரனை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று சொல்லுவான் என்று கூறி இறைவனின் அன்பை உள்ளம் உருக உருக மக்களுக்கு விளக்கினார். அந்த அன்பை கேட்டு மக்கள் கதறி ஆண்டவரே உமது அன்பை நாங்கள் இதுவரை புரிந்துகொள்ளவில்லையே என்று புலம்பினர். D.L மூடிக்கு இது ஆச்சரியத்தை கொடுத்தது. இறைவனின் அன்பை நானும் இதுவரை சரியாக புரிந்து கொள்ளவில்லையே என்ற உணர்வோடு இடத்திலே கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார் D.L மூடி.

இந்த சம்பவத்தை கூறி விட்டு, இறைவனின் அன்பின் ஆழம், உயரம், அகலத்தை புரிந்துகொள்ள D.L மூடிக்கு உடனே முடியவில்லை. அதை மூர் வழியாகப் புரிந்து கொண்டார். அதை போல் உங்கள் மனைவியின் அன்பை நீங்களும் புரிந்துகொள்ள முடியவில்லையே என்றேன்!

ஆண்டவர் அன்பாய் இருக்கிறார், ஆனால் என் மனைவி அப்படி அல்ல என்று மறுத்தார். ஒரு வெள்ளை பேப்பரை கொடுத்து திருமணமான நாளில் இருந்து உங்கள் மனைவி இதுவரை உங்களுக்கு செய்த நல்ல காரியங்களை எழுதுங்கள். அது எந்த சந்தர்ப்பத்தில் செய்தார்கள் என்பதையும் குறிப்பிடுங்கள் என்றேன்.

ஒரு பேப்பரை முடித்துவிட்டு இரண்டாவது ஒரு பேப்பரை கேட்டார். எழுத எழுத அவர் முகத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறி வருவதை உணர்ந்தேன். எழுதி முடித்தபின் திருமண சான்றிதழை கேட்காமலே கர்சீப்பை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டு தெளிவாக வெளியே போனார்.

திருமண வாழ்வில் ஒருவர் அன்பை மற்றவர்கள் உயிரோடு இருக்கும்வரை புரிந்து கொள்வதே இல்லை. துணையை ஒருவர் இழக்கும் போது தான் அவர்களுடைய அருமையைப் பற்றி தெரியவரும். அதன் பின்பு அவர்களை நினைத்து வாழ்நாள் முழுவதும் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். தேவையில்லாமல் வாழ்க்கையை அவசரப்பட்டு நானே தொலைத்து விட்டேனே என்று புலம்புவர். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இருக்கும் வரை உள்ள சந்தோஷம், கவுரவம் எல்லாம் பிரிந்தபோது காற்றில் பறந்துவிடும் என்பதை அனுபவித்த பின் தான் புரிந்துக்கொள்ளுவார்கள். ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள் என்பதே இயேசு கிறிஸ்து நமக்கு கற்பித்த கட்டளை. அவரே அன்பிற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காண்பித்துள்ளார். அன்பு இல்லாதவன் தேவனை அறியான். அன்பு சகலத்தையும் சகிக்கும். அன்பே பிரதானம்

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி