பாம்பு சட்டை


வினோதினியின் கணவர் அவளை எல்லாருக்கும் முன்பாக அவமானப்படுத்தி விட்டதாக நினைத்து வருத்தத்தோடே குடையைப் பிடித்துக் கொண்டு மழைக்குள் வேகமாக மாலை வேளையில் ஆலயத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். எப்படி இருந்தாலும் எல்லாருக்கும் முன்பாக என் சாப்பாட்டை நாய் தான் சாப்பிட முடியும் என்று கூறி அவமானப்படுத்தி விட்டாரே! ஒரு நாளா, இரண்டு நாளா எப்பொழுதும் பிறருக்கு முன் என்னை அவமானப்படுத்தி அழவைப்பதில் அவருக்கு என்னதான் கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை என்று முணு முணுத்துக் கொண்டே ஆலயத்திற்குள் நுழைந்தாள். தன் கணவனை நினைத்து கண்ணீர் வடித்தாள். கடவுளே என் கணவன் சுபாவத்தை மாற்றுவீரா அல்லது விவாகரத்தை வாங்கப்போகட்டா? என்னால் சகிக்க முடியவில்லை என்று தேம்பினாள்.

ஆலயத்தின் முன் புறத்தில் போடப்பட்ட வெளிச்சத்தில் அனேக  ஈசல்கள் பறந்து வந்து தொந்தரவு செய்துக் கொண்டிருந்தது. அதில் சில ஆலயத்திற்குள் ஜெபித்துக் கொண்டிருந்தவர்கள் மீதும் விழுந்து  எரிச்சலை ஊட்டியது. சே சே.. இந்த முழு இரவு ஜெபத்தில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. வீட்டில் தான் தொந்தரவு அவமானம் என்றால், இங்கே வந்தால் இந்த ஈசலால் நிம்மதியாக ஜெபிக்க முடியவில்லையே என்று டென்சனாகவே இருந்தாள்.

முழு இரவு ஜெபம் அதிகாலை 3 மணிக்கு முடிந்து வெளியே வந்தாள். அப்போது ஈசல் ஓன்றும் பறக்கவில்லை. அதன் சிறகுகள் எல்லாம் கீழே விழுந்து விட்டதால் எறும்பு போல் கீழே அலைந்துக் கொண்டிருந்தது. கர்த்தர் விநோதினியிடம் பேசினார், "மனிதனுக்கு வரும் அவமானங்கள் எல்லாம் இப்படி ஈசல் இறகுகள் போல் சீக்கிரத்தில் உதிர்ந்துவிடும்" என்று பேசினார்.

ஸ்டீபன் டக்ளஸ்  என்பவர் ஒரு நாள் ஆபிரகாம் லிங்கனை அவமானப்படுத்தும் விதமாக ஒரு கூடுகையில் பேசும் போது, “லிங்கனை நான் முன்பு ஒரு பல்பொருள் அங்காடியில் வேலைப் பார்க்கும் போது பார்த்தேன். அவர் மதுபாட்டில்களை எடுத்துக் கொடுப்பதில் திறமையானவர்“ என்று கூறி அமர்ந்தார். சபை முழுவதும் ஒரே சிரிப்பு.

மெதுவாக லிஙகன் எழும்பி, “டக்ளஸ் கூறுவது முழுவதும் உண்மை தான். அவர் எனது பழைய வாடிக்கையாளர் தான். அப்பொழுது மதுபான பாட்டிலை வழங்கிக் கொண்டிருந்த நான் என் இடத்தை இப்பொழுது மாற்றிக் கொண்டேன். ஆனால் அவரோ அதே இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டே இருக்கிறார்” என்று கூறிவிட்டு அமர்ந்தார். கரகோசம் நிற்க நேரமாகி விட்டது.

நம்முடைய வாழ்க்கையில் நாம் நன்றாக இருப்பது கூட சிலருக்குப் பிடிக்காது. அவர்கள் நம்மை தூற்றிக் கொண்டே அலைவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குள்ளும் பொறாமை உணர்வுகள் இருப்பதால் ஒருவரை ஒருவர் இழிவாக பேசி சீண்டுவதும் உண்டு. அவமானப்படுத்துகிறோம்  என்று அறியாமலே பேசி சாகடிப்பவர்களும் உண்டு. ஆகவே பிறர் பேசும் அவமானங்களை நாம் பாம்பு சட்டையை கழற்றி விட்டு போவது போல் போய் விட பழகிக் கொள்ள வேண்டும்.  

இயேசு கிறிஸ்துவை அவமானப்படுத்தினார்கள். ஆனால் அந்த அவமானத்தை பெரிதாக கருதாமல் நமக்காக சிலுவையை சுமந்து வெற்றி சிறந்தவராக நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார். ஆகவே அவமானத்தை பெரிதாக எடுத்துக் கொண்டு பிள்ளைகளையோ / மனைவியையோ / கணவனையோ விட்டு விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்று தீர்மானிப்பது தவறு. அப்படி நீங்கள் செய்தால் இயேசு கிறிஸ்துவின் முன் மாதிரியை பின்பற்றவில்லை என்று தான் பொருள். அவமானங்கள் என்பது கையில் உள்ள கைரேகைப் போன்று அழியாதவை அல்ல. ஆகவே அவமானங்கள் சீக்கிரத்தில் நீங்கிவிடும். பொறுமையோடு வாழ்க்கை பயணத்தைத் தொடருங்கள். கர்த்தர் உங்களோடு இருப்பார்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்