எப்பொழுதும் டென்சனா?


வாழ்க்கையில் ரிலாக்ஸாக இருக்க வேண்டும்.   தேவைப்படும் போது மட்டுமே கோபம், எரிச்சல் வர வேண்டும். எப்பொழுதுமே நமது அலுவலகத்திலோ, குடும்பத்திலோ டென்சனாக காணப்பட்டால் எல்லாரும் நம்மை வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள். இது டென்சன் பேர் வழி என்று நல்ல காரியங்கள் எதிலும் நம்மை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்!   பதறிய காரியங்கள் சரியாக வராது என்பது தான் உண்மை.

சின்ன சின்ன காரியங்களுக்கும் நாம் டென்சனாகவே இருந்தால் நாம் மன நோயாளியாகவே மாறி விடுவோம். குடும்பங்களில் பிள்ளைகள், கணவன், மனைவியோடு மனமகிழ்ந்து நேரத்தை செலவிடாமல் எப்பொழுதும் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்தால் கணவனுக்கு மனைவியோடு பழகுவதற்கு பிடிக்காது. மனைவிக்கு கணவன் ஏன் இப்பொழுதே வீட்டுக்கு வந்துவிட்டார், ஏதாவது பிரச்சனையை ஆரம்பித்து விடுவாரே என்று பயப்படத் தொடங்கி விடுவார்கள்.

அலுவலகத்தில் டென்சனாக இருந்தால் வீட்டிற்கு வரும் போது ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ள வேண்டும். பிள்ளைகளோடு/மனைவி/கணவனோடு சிறு விளையாட்டுகள் விளையாடுவது பேசி மகிழுவது என்பது நம்மை ரிலாக்ஸ் பண்ணுவதற்கு சிறந்த வழிகள்.

ஒரு முறை அறிஞர் ஒருவர் அக்பர் மன்னரைக் காண வந்திருந்தார். அவர் உள்ளே வரும் போதே அக்பர் எப்படி இருப்பாரோ? நம்மிடம் சாதாரணமாகப் பேசுவாரோ? அல்லது கோப கணல் பொங்க மிரட்டும் தொனியில் பேசுவாரோ? என்று மனதில் அச்சத்தோடு பார்க்க வந்தார். ஆனால் அக்பர் அவருடைய அலுவலகர்களுடன் சதுரங்கம் விளையாடி மகிழ்ச்சியாக இருந்தார். இதைப் பார்த்த அறிஞருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இவ்வாறு மகிழ்ச்சியோடு நண்பர்களிடம் ஒரு மன்னர் பேசி விளையாடிக் கொண்டிருப்பதை யோசித்தே பார்க்க முடியாமல் திகைத்து நின்றார்.

அக்பருக்கு அறிஞரின் உள்ளத்தை calculate பண்ணிப் பார்க்க முடிந்தது. ஆகவே அவரே சிரித்துக் கொண்டு அறிஞரை பார்த்து, “அறிஞரே இந்த அறையில் இருக்கும் வில்லைப் பார்த்தீரா, அது எப்பொழுதும் நானேற்றப்பட்டே இருந்தால் என்ன ஆகும்?” என்றார்.

அறிஞர் “அது சீக்கிரத்தில் முறிந்து விடும்” என்று பதிலளித்தார்.

மீண்டும் அக்பர் அவரிடம் அந்த வில் நாண் ஏற்றப்படாமலே இருந்தால் என்ன ஆகும் என்று மீண்டும் கேள்விக் கணையை வீசினார். 

அறிஞர் '”அது பயன்படாமலே போய் விடும்” என்றார்.

அக்பர் அறிஞரைப் பார்த்து, “இதைப் போலத்தான் எப்பொழுது கோபத்தையும், மூர்க்கத்தையும் நான் வெளிப்படுத்த வேண்டுமோ அப்பொழுது வெளிப்படுத்துவேன்.   மற்ற நேரங்களில் மகிழ்ச்சியோடு பேசி மகிழ்வேன்” என்றார்.

குடும்ப வாழ்விற்கு இது எவ்வளவு  மிகவும் கடைபிடிக்க வேண்டிய ஓன்று. சில பெண்கள்/ஆண்கள் எப்பொழுதும் வில்லில் நாணேற்றிக் கொண்டே இருப்பதால் தான் துணைவி/வர் நினைக்கிறார்கள், "வீட்டிற்குப் போனால் நிம்மதியே இருக்காது. பேசாமல் அலுவலகத்திலேயே கூட கொஞ்சநேரம் உட்கார்ந்து விட்டுப்போகலாம்" என்று உட்கார்ந்து விடுகின்றனர்.  

கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ளுங்கள். இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தில் எப்பொழுதும் அவரை மக்கள் நெருக்கிக் கொண்டே இருந்தார்கள். ஒரு இடத்துக்கு வருகிறார் என்றால் உடனே வீட்டை சூழ்ந்து விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் படகு பிடித்து அவரைத் தேடி தேடிப் போனார்கள். ஆனால் இயேசுவோ சில வேளைகளில் மக்கள் கண்களுக்குப் படாமல் தனிமையாக இருந்தார். சில வேளைகளில் இயேசுவுக்கு நெருக்கமான சீடர்களுடன் தனித்து ஜெபிப்பதற்காக போய் விட்டு வந்துள்ளார். அவ்வாறு செய்வதால் புத்துணர்ச்சியுடன் அடுத்த நாள் ஊழியத்தை அவர் சிறப்பாக திட்டமிட்டு செய்ய முடிந்தது. இயேசுவானவர் எப்பொழுதும் கோபப்பட்டுக் கொண்டே இருக்கவில்லை. குறிப்பாக ஆலயத்தை தூய்மையாக்கும்போதும், பரிசேயர், சதுசேயரிடமே கோபப்படுகிறார். மற்ற நேரங்களில் அவர் கோபப்படுவது இல்லை. மகிழ்ச்சியோடு மக்களுக்கு இறைபணி ஆற்றி வந்தார். ஆகவே இயேசுவை நம் வாழ்க்கையில் முன்மாதிரியாகக் கொண்டு தேவைப்படும் இடங்களில் மட்டும் சற்றுக்கோபப்பட்டு விட்டு அடுத்த வேளையில் ரிலாக்ஸ்சாக இருப்போம். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி