Window Shopping
ஒரு பெண் அங்கே கடையின் அடுத்த பக்கத்திற்கு போய் விட்டாள். கணவரோ செல்லைப் பார்த்துக் கொண்டே இருக்க, அந்த பெண் அவரைப் பார்த்து இப்படி ஒரு மனுஷனைப் பார்க்கவே முடியாது! ஒரு interestயே கிடையாது. ஏனோ தானோவென்று உட்கார்ந்துக் கொண்டே இருப்பார். என்னோடு சேர்ந்து பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்று ஒன்றும் சொல்லாமல் இப்படி வந்து உட்கார்ந்திருக்கிறார் என்று அவரைப் பார்த்து சத்தம் போட்டாள். அவரும் சமாளித்துக் கொண்டு அந்த chair ல் இருந்து எழும்பி அவள் பார்த்துக் கொண்டிருந்த பகுதிக்குள் வந்து அடுத்த ஒரு chair ல் இடம் பிடித்துக் கொண்டு மீண்டும் cellயை எடுத்தார்.
அப்படியே நான் அந்த இடத்தை விட்டு நகண்ட போது எனது இனிய நண்பர் ஒருவர் அங்கே வந்திருந்தார். Hello என்று பேசிக்கொண்டிருக்கும் போது அவர் cell, ring ஆனது. என்னங்க நீங்க எங்க இருக்கிறீங்க, நாங்க 3rd Floor ல் இருக்கிறோம். உங்களைத் தேடித் தேடி பார்த்தோம். காணவில்லை. அதனால் தான் Phone பண்ணினோம். நீங்க இன்னும் 1st floor ல் தான் இருக்கிறீர்களா? வாங்க பணத்தைக் கட்ட வேண்டும் என்றாள் அவரது மனைவி. இவ்வாறு பெண்களெல்லாம் dress எடுக்க ஆர்வமாய் போய் கொண்டிருக்க, ஆண்கள் ஏதாவது போன வருஷம் எடுத்த dress யையே உடுக்காமல் வைத்திருப்பதால் அதையே போட்டுக் கொள்ளுகிறேன் என்று சமாளிக்கின்றனரே ஏன்? பண்டிகை நாட்களில் dress எடுப்பதில் எத்தனை குடும்பங்களில் பிரச்சனைகள்! மனைவியை, பெண்பிள்ளைகளை திருப்திபடுத்துவதில் ஆண்களுக்கு ஏன் இந்த சிரமம்?
டாக்டர் ஷாலினி அவர்கள் ஆதிகாலம் தொட்டே பெண்கள், ஆண்கள் சுபாவத்தில் மாற்றம் இருக்கிறது என்று விளக்குகிறார். பெண்கள் துவக்க காலங்களில் குகைகளில் வசிக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருப்பதால் பேசி மகிழுவதும், அனேக வேலைகளை ஒரே இடத்தில் செய்வதும், குகைக்கு அருகில் உள்ள மரம், செடிகளில் பழங்களை கொய்து சாப்பிட்டு வாழ்வதும் பொழுது போக்காகவும், வாழ்க்கையாகவும் அமைத்துக் கொண்டனர். எனவே இன்றும் வீட்டிற்குள் போரடித்தால் விதவிதமான Youtube சமையல், பலகாரங்கள் செய்து அசத்துவதும், கையில் அதிக பணம் இல்லாவிட்டாலும் பல கடைகளுக்குப் போய் இறங்கி விட்டு ஒரு சேலையை எடுத்து விட்டு திருப்தியாக window shopping செய்வதும் கை வந்த கலையாகவே இருக்கிறது என்கிறார்.
அதேவேளையில் ஆண்களைப் பொருத்த வரையில் காடுகளில் வேட்டையாடியே பழகிய அவர்கள் அமைதியாக இருந்து, மிருகத்தை வேட்டையாடுவதையே குறியாக வைத்து வாழ்ந்ததால் மூளையின் மொழி மையமே சின்னதாக காணப்படுகிறது என்கிறார். ஆகவே இப்பொழுதும் மனைவிக்கு ஈடாக பேச முடியாததால் மனைவியிடம் அடிக்கடி திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் ஆண் வர்க்கத்தினர்.
திருமறையில் கூட சாலமோனின் ஞானத்தைக் கேட்க சோபாவின் ராஜஸ்திரி வண்டி ஏறி வருகிறாள். அவனுடைய ஞானத்தைக் கேட்டு ஆச்சரியப்படுகிறாள். விலையேறப் பெற்ற பொருட்களை எல்லாம் கொடுத்து மகிழுகிறாள். ஆனால் எந்த ஆணும் இப்படி வந்தது போல் திருமறையில் தெரியவில்லை. நீதிமொழிகள் புத்தகத்தில் "இராட்டினத்தைத் தானே பிடித்து வேலைச் செய்வாள்..... எல்லாருக்கும் திண்மையான கம்பளிப் போர்வை உண்டு" (நீதிமொழிகள் 31:19,21). அந்த காலத்திலேயே dress selection பெண்கள் தான்.
பெண்களையும், ஆண்களையும் வெவ்வேறு சுபாவத்துடன், திறமைகளுடன் கடவுள் படைத்திருக்கிறார். என்னைப் போல் நீயும் இரு என்று யாரும் யாரைப் பார்த்தும் கூற இயலாது. அவரவர்களுக்கு கொடுத்த சுபாவங்களை எண்ணி மகிழ வேண்டும், வேற்றுமையை கொண்டாட பழகிக் கொள்ள வேண்டும்.
மனைவியைப் போல் கணவன் செயல்பட முடியாது, கணவனைப் போல் மனைவியும் செயல்பட முடியாது. ஆண்களுக்கென்று இருக்கும் சுபாவங்கள் பெண்களில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்பதை உணர்ந்து ஒருவரை ஒருவர் ஏற்று, மதித்து, புரிந்து வாழ பழகிக் கொள்ளுங்கள். ஓ கோ இது தான் மேட்டரா. சரி நாம பாட்டுக்கு பேசிகிட்டே இருப்போம்!! அது ஒரு ஊம பூச்சி!!! விட்டுருங்க. Please.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment