இளம் சுமை தாங்கிகள்


மாணவர்கள் பள்ளி வாழ்க்கையை மகிழ்ச்சியாக நினைக்கிறார்களா? அல்லது பாரமாக நினைக்கிறார்களா? என்றால் பெருமபாலான மாணவ, மாணவியர் பாரமாகவே எண்ணுகின்றனர்.

25 வருடமோ 50 வருடமோ கழித்து அந்த படித்த பள்ளிக்கூடத்தை நினைத்துப் பார்த்து பழைய மாணவர்கள் ஓன்று கூடி ஆசிரியர்களிடம் ஆசி வாங்கி இன்றும் மகிழுகின்றனர். ஆனால் இப்பொழுது படிக்கிற Matric, CBSE பள்ளி மாணவர்கள் அதே மனநிலையைப் பெறுவார்களா? பிள்ளைகள் ஆசிரியர்களின் உறவு நிலை எப்படி இருக்கிறது? பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் பாடங்களை மகிழ்ச்சியுடன் கற்றுக் கொடுக்க முடிகிறதா? அல்லது பாடங்களை பிள்ளைகளுக்கு திணிக்கின்றனரா?

1 லட்சம் 2 லட்சம் என்று பணம் கட்டிப் படிக்கிற பிள்ளைகள் ஆசிரியர்களை உயர்வாக மதிக்கின்றனரா? பள்ளிக்கூடத்தை கோவிலைப் போன்று புனித இடமாக கருதுகின்றனரா? என்று யோசித்தால் நிலைமை தலைகீழாக மாறி வருகிறதை உணர முடிகிறது.

மத்திய பிரதேசத்தை சார்ந்த ஆம்டோ என்ற கிராமத்தில் கல்வி கற்கும் 9ம் வகுப்பு மாணவர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் நம்மை சிந்திக்க வைக்கிறது. தனியார் பள்ளியில் படித்து வந்த அந்த மாணவர் நேரம் தவறாமல் பள்ளிக்குச் செல்லுபவர். வழக்கம் போல் பள்ளிக்குப் புறப்பட்ட அவன் பள்ளி பேருந்துக்காக ஓட்டம் ஓட்டமாக சென்றான். ஆனால் பள்ளி வாகனம் அவன் வருவதற்கு முன்பே போய்விட்டது. இதற்கு முன்பு ஒரு போதும் இதைப் போன்று நடந்ததில்லை.

ஒரு வேளை அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றால் ஆசிரியர்கள் திட்டுவர், ஒரு வேளை அடிவிழும். வீட்டு பாடங்களை சரியாக செய்யாமல் போய் நிற்க வேண்டிய சூழல் வரும். அதற்கு பதில் சொல்ல வேண்டியதிருக்கும். ஒருவேளை வகுப்புக்கு வெளியே ஆசிரியர்கள் விட்டுவிடுவார்கள். படிக்கிற தனக்கு அது ஒரு அவமானம் என்று எல்லாமே எண்ணிப்பார்த்தவன் பேருந்து நிலையத்திலிருந்தே அழுதுக் கொண்டு வந்தான்.

பெற்றோர்கள் அவனுக்கு சமாதானம் சொல்லியும் அவன் மனது அலசடிப்பட்டுக் கொண்டே இருந்தது. அதனைப் பெற்றோரால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. வீட்டிற்கு பின்புறம் சென்ற அவனுக்கு பள்ளிக்கூடம் செல்லாமல் இருப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனே அருகில் உள்ள மாமரத்தில் தூக்குப் போட்டு இறந்து விட்டான்.   

இங்கிலாந்து மருத்துவ இதழ் 'லான்செட்' (Lancet) கூற்றின் படி தென்னிந்தியா தான் அதிகமான தற்கொலைகள் செய்துக் கொள்ளும் இடமாக உள்ளது என்று கூறுகிறது. இந்தியாவில் 32% பேர் தூக்குப் போட்டு தற்கொலைச் செய்துக் கொள்ளுகின்றனர்.

தற்கொலை என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களை தாங்க முடியாமலும், போராட்டங்களை அல்லது நடைமுறைகளுக்கு எதிரான காரியங்களை எதிர்த்துப் போராட முடியாமல் இருக்கும் போது எடுத்துக் கொள்ளும் தீர்வாகவே அமைகிறது.

எத்தனையோ மாணவர்கள் பேருந்தை விட்டு விட்டதால், தூங்கி எழும்புவதில் நேர தாமதத்தால் பள்ளிக் கூடம் போகாமல் இருந்திருக்கலாம். ஆனால் யாரும் தற்கொலைச் செய்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்த மாணவனால் அதை எளிதாக எடுத்துக் கொள்ள கூடிய மனநிலை இல்லாமல் போய் விட்டது.

பொதுவாக மாணவ, மாணவியர்களுக்குள் எதிர்காலத்தைக் குறித்த பயத்தை பெற்றோரும், ஆசிரியர்களும் விதைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. "நீ படிக்கவில்லை என்றால் அவ்வளவு தான். வாழ்க்கையில் நீ ஒன்றுக்கும் உதவமாட்டாய்' என்றே சொல்லிக்கொண்டு இருக்கக்கூடாது. இப்படிப்பட்ட வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் தன்னம்பிக்கை இல்லாத அளவிற்கு பிள்ளைகளை நாம் வளர்த்து விடக் கூடாது.

அடுத்த பிள்ளைகளுடன் ஒப்பிட்டும் பிள்ளைகளை வளர்க்கக்கூடாது. பிள்ளைகளுக்குள் போட்டி மனப்பான்மை படிப்பில் தேவை. அதற்காக எப்பொழுதும் ஒப்பீடு செய்துக் கொண்டே இருக்கக்கூடாது.

பள்ளிக்கூடங்களில் பிள்ளைகள் மீது படிப்பை மிகப் பெரிய சுமையாக மாற்றி விடக் கூடாது. படிக்கவில்லை என்றால் 100 முறை imposition கொடுத்து முதுகு மேலே பாரத்தின் மேல் பாரத்தை ஏற்றி, நிமிர்ந்து நிற்க விடாமல் செய்யக்கூடாது. ஒரு மாணவனாலே மற்ற பிள்ளைகள் அளவிற்கு படிக்க முடியாத போது மீண்டும் imposition போட்டால் எப்படி அவனால் எழுத முடியும், மற்ற பாடங்களைப் படிக்க முடியும். Punishment என்பது எந்த அளவிற்கு, எப்படிச் செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகள் தற்கொலை எண்ணம் வரும் போது தனிமையாக இருப்பதை தவிர்க்க வேண்டும். அவர்களோடு பெற்றோர் பேசிக் கொண்டும் அவர்கள் பள்ளிக்கூட செய்திகளைக் குறித்து விசாரித்துக் கொண்டும் இருக்க வேண்டும். “உன் பிள்ளைகள் உன் பந்தியை சுற்றிலும் ஒலிவ மரக்கன்றுகள் போல் இருப்பார்கள்” என்று சங்கீதம் 128:3 கூறுகிறது. அப்படியென்றால் சாப்பிடும் போது ஒருவர் TV, மற்றவர் Computer, அடுத்தவர் Cell என்று நாம் இருந்து உணவு அருந்தாமல், யாவரும் குடும்பமாக ஒன்றாய் இருந்து மகிழ்ச்சியோடு சாப்பிட்டு மகிழ வேண்டும். அப்பொழுது பிள்ளைகள் மனம் விட்டு பேச வாய்ப்புகள் கிடைக்கும். தவறான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க முடியும்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி